திருஆக்கூர். (சோழநாடு)

திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் ]

Tiru Akur. (Chola Nadu) - Correctional facilities - Spiritual Notes in Tamil

திருஆக்கூர். (சோழநாடு) | Tiru Akur. (Chola Nadu)

இத்தலம் மயிலாடுதுறை இரயில்வே நிலையத்திலிருந்து கிழக்கே தரங்கம்பாடிக்குப் போகும் வழியில் 10 மைல் தொலைவில் உள்ளது.

திருஆக்கூர். (சோழநாடு)


இத்தலம் மயிலாடுதுறை இரயில்வே நிலையத்திலிருந்து கிழக்கே தரங்கம்பாடிக்குப் போகும் வழியில் 10 மைல் தொலைவில் உள்ளது.

ஆர்க்கூர் - கஸ்யபுரம்.

ஆர்க்கூர் என்பது ஆக்கூர் என மருவியது போலும்.

சிதம்பர விநாயகர் கோயில்: சத்யவாக்குப் பிள்ளையார் கோயிலின் பின்புறத்துள்ள தீர்த்தத்தின் தென்கரையிலுள்ளது.


சுவாமி : சுயம்புநாதர், தான்றோன்றீசர்.


அம்பிகை : கட்கார நேத்திரி. வாளரங்கண்ணி, வாணெடுங்கண்ணியம்மை.


தலவிருட்சம் : சரக்கொன்றை.


தனக்கிருந்த வயிற்று வலியையும், குஷ்டத்தையும் போக்கிக்கொள்ளவேண்டிச் சிலந்திச் சோழன் கனவில் தோன்றிய சிவபெருமான் கட்டளைப்படி ஆயிரம் மாந்தர்களுக்கு நாடோறும் அன்னமளித்துப் பின்னர் எண்ணுவான் ஒருவர் குறைவதைக் கண்டு மனம்வருந்த, அவ்வமயம் கிழவடிவமாக வந்த சுவாமியைக் கண்டு பிடித்து வலஞ்செய்வதற்கு நெருங்குகையில் அவர் ஓடிப் புற்றில் ஒளிந்து கொண்டார். அரசன் துரத்திப் பாரைக்கோலால் பெயர்க்கையில் சுவாமி காட்சி கொடுத்தார். சிவலிங்கத்தின் மீது பாரைக்கோல் வடு இன்றுமுண்டு.


ஆயிரத்திலொருவர்: 

மகாமண்டபத்தில் தெற்கு நோக்கிய அறையில் கையில் தண்டுன்றிய விருத்த வடிவத்தோடு நின்ற கோலமாய் உள்ளார். உற்சவ வடிவம். தான்தோன்றி மாடக் கோயில். (தான்தோன்றி - சுயம்பு).


சிலந்திச் சோழன் பிம்பமும் கோயிலுமுள்ளது,


இது சிறப்புலி நாயனார் முத்தி பெற்ற தலம். 


தீர்த்தம்: ஆம்பலம்பூப் பொய்கை; குமுத தீர்த்தம். இது கோயிலுக்கு மேற்கிலுள்ள தீர்த்தம்.


இத்தலத்தில் சிறப்புலியும், அவர் மனைவியாரும் சிலை வடிவில் இருக்கிறார்கள். 


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : திருஆக்கூர். (சோழநாடு) - திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Correctional facilities : Tiru Akur. (Chola Nadu) - Correctional facilities - Spiritual Notes in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்