இத்தலம் ஆடுதுறை இரயில்வே நிலையத்திற்கு அருகில் இருக்கிறது.
திருஆப்பாடி (சோழ நாடு) இத்தலம் ஆடுதுறை இரயில்வே நிலையத்திற்கு அருகில் இருக்கிறது. திருப்பனந்தாளுக்குத் தென்மேற்கே ஒரு மைல் தொலைவில் இருக்கிறது. மண்ணியாற்றின் தென்கரையிலுள்ளது. சுவாமி : பாலுகந்தீசுவரர், க்ஷுரபுரிநாதர், ஷீரபுரீசுவரர். அம்பிகை : பெரியநாயகி. தீர்த்தம் : மண்ணியாறு க்ஷுரகுண்டம். விருட்சம் : ஆத்தி (காட்டாத்தி). சண்டேச நாயனார் பூசை செய்து முக்தி பெற்ற தலம். இங்கிருந்த இடையன் ஒருவன் பாலைக் கறந்து வீட்டுக்குக் கொண்டுபோகும்போது, வழியில் தினந்தோறும் கால் தடுக்கிப் பால் கவிழ்ந்துகொண்டு வருதலையுணர்ந்து கையிலிருந்த கொடுவாளால் அவ்விடத்திலோச்ச, அங்கிருந்து இரத்தம் வெளிப்படக்கண்டு மன மிரங்கிப் பாலுகந்தநாதரே என்று தொழ, சுவாமி அவனுக்கு அருள் செய்த இடம். திருநாவுக்கரசர் பாடிய தலம். லிங்கத்தின் பக்கத்தில் சண்டேசருள்ளார். சுவாமிக்குப் பூசையானவுடன் இவருக்குப்பூசை நடக்கின்றது. வேறிடத்தில் இல்லை. மகாசிவராத்திரியில்தான் இவருக்குப் பட்டம். கோயில் மிகப் பழையது. சுவாமியின் வடமொழித் திருநாமம் க்ஷுரபுரிநாதர் அம்பிகை, பிரகந்நாயகி. ஆத்தி பழைய மரம். ஸ்ரீ சண்டிகேசுவரர் மணலில் லிங்கம் அமைத்துப் பூசித்த தலம். ஆத்திமரத்தடியில் ஒரு சிவலிங்கம் சாய்ந்திருக்கிறது. இந்தத்தலத்தில் சண்டிகேசுவரர் இரு வருளர். தேரடிப் பிள்ளையார் என்று ஒரு பிள்ளையார் இருக்கிறார். திருத்தேர்விழா நடைபெற்றதாகத் தெரிகிறது. சிவராத்திரி அமாவாசை சண்டிகேசர் முக்தியடைந்த தினம். அன்று பிரமோற்சவ தீர்த்தம். அம்பிகையின் திருவுருவம் மிகச் சிறந்த அமைப்புடையதாக இருக்கிறது. இங்கே கோப்பெருஞ்சிங்கனுடைய சாசனம் ஒன்று இருக்கிறது; கந்த சஷ்டியில் காவடி எடுக்கும் வழக்கம் இருக்கிறது. சிவாலயத்திற்கு ஒரு வேலி நிலம் இருக்கிறது. அர்த்த மண்டபத்துக்கும் மகாமண்டபத்துக்கும் மத்தியில் உள்ள சுவாமிக்குத் தீபாராதனை செய்தவுடன் சண்டேசருக்குத் தீபாராதனை. சண்டீசனார் திருவவதாரம் செய்து உடலுடன் சிவபெருமான் திருவடியில் வீற்றிருந்த தலம். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : திருஆப்பாடி (சோழ நாடு) - திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Correctional facilities : Tiruappadi (Chola country) - Correctional facilities - Spiritual Notes in Tamil [ spirituality ]