திருக்கோளூர் (செவ்வாய்) - நவதிருப்பதி

ஆன்மீக குறிப்புகள், தல வரலாறு

[ ஆன்மீக குறிப்புகள் ]

Tirukkolaur (Tuesday) - Navathirupathi - Spiritual Notes, Head history in Tamil

திருக்கோளூர் (செவ்வாய்) - நவதிருப்பதி | Tirukkolaur (Tuesday) - Navathirupathi

தென்திருப்பேரையிலிருந்து ஆழ்வார்திருநகரி வரும் வழியில் 3 கி.மீ வந்து தெற்கே போகும் ஒரு கிளைப் பாதையில் 2 கி.மீ சென்றால் இத்திருத்தலத்தை அடையலாம்.

திருக்கோளூர் (செவ்வாய்) - நவதிருப்பதி

 

தென்திருப்பேரையிலிருந்து ஆழ்வார்திருநகரி வரும் வழியில் 3 கி.மீ வந்து தெற்கே போகும் ஒரு கிளைப் பாதையில் 2 கி.மீ சென்றால் இத்திருத்தலத்தை அடையலாம். மதுரகவி ஆழ்வார் அவதார தலம். தல வரலாறு: குபேரன் ஒருமுறை சிவனைவழிபட கைலாயம் சென்றான். அங்கே உமயவள் சிவனுடன் இருக்க இவனது கண்கள் உமயவளை கெட்ட நோக்கத்தோடு பார்க்க, இதனால் கோபம் கொண்ட பார்வதி குபேரனை சபித்தாள். அதனால் அவனிடம் இருந்த நவ நிதிகளும் அகன்று உருவம் விகாரமானது. நவநிதிகளும் தவமிருந்து இவ்வூர் பெருமாளை அடைக்கலம் கொண்டதால் வைத்தமாநிதி பெருமாள் (நிதிகளை வைத்திருப்பவர்) என அழைக்கப்படுகின்றார். குபேரன் தன் தவறை உணர்ந்து சிவன் பாதம் பணிய அவர் பார்வதியிடம் மன்னிப்பு கோருமாறு கூற, இவன் பர்வதியை அடிபணிய அவள் இனி உனக்கு ஒரு கண் தெரியாது, உடல் விகாரம் மாறாது. இழந்த நிதிகளை அவை தஞ்சம் அடைந்துள்ள வைத்தமாநிதி பெருமாளிடம் தவம் செய்து பெற்றுக் கொள் என்று கூறினாள்.

நிலையான செல்வம் இருக்கும் இடத்தில் அதர்மம் ஆட்சிபுரியும் தர்மம் இருக்காது. ஆகவே செல்வம் ஒருவரிடம் நிலையாக இல்லாமல் சுழன்று கொண்டே இருக்க வேண்டும் என்பது பெருமாள கிருபை. தர்மம் நிரந்தரமாகவே இங்கே தங்கி பெருமாளை வழிபட்டு வருகின்றதாம். வியாச வம்சத்தில் வந்த தர்மகுப்தன் என்பவர் 10 குழந்தைகளுடன் தரிததி ரனாகி, வறுமையில் மிகவும் கஷ்டப்பட பரத்வாஜ முனிவரின் ஆலோசனையின்படி இங்கு வந்து பணிவிடை செய்து பெருஞ் செல்வத்திற்கு அதிபதியாக சுகவாழ்வு பெற்றான். 

மூலவர் - வைத்தமாநிதிப்பெருமாள் நிஷேபவித்தன், புஜங்க சயனம் கிழக்கு பார்த்த திருமுகமண்டலம்.

தாயார் - குமுதவல்லி கோளூர் வல்லி தனித்தனி சன்னதி, தீர்த்தம் - குபேர தீர்த்தம், தாமிரபரணி நிதிவிமான் - ஸ்ரீகர விமானம்,

பிரத்யட்சம் - குபேரன், மதுரகவி. ஆகமமம் - வைகானஸம். சம்பிரதாயம் - தென்கலை.

 

நம்மாழ்வார் மங்களாஸாஸனம்

உண்ணும்சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்

கண்ணன் எம்பெருமான் என்றே கண்கள் நீர்மல்கி

மண்ணினுள் அவன் சீர்வளம் மகிக் அவனூர் வினவி

தண்ணம் என் இளமான் புகும் ஊர் திருக்கோளூரே

 

                                         - பாடல் 3293


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : திருக்கோளூர் (செவ்வாய்) - நவதிருப்பதி - ஆன்மீக குறிப்புகள், தல வரலாறு [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Tirukkolaur (Tuesday) - Navathirupathi - Spiritual Notes, Head history in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்