திருமண வரமருளும் திருமால்!

பெருமாள்

[ பெருமாள் ]

Tirumal is the boon of marriage! - Perumal in Tamil

திருமண வரமருளும் திருமால்! | Tirumal is the boon of marriage!

திருமகளைத் தன்னுள் இருத்தி த்ரிபங்க நிலையில் சென்னைக்கு அருகே அருள்கிறார் திருமால்.

திருமண வரமருளும் திருமால்!

 

திருமகளைத் தன்னுள் இருத்தி த்ரிபங்க நிலையில் சென்னைக்கு அருகே அருள்கிறார் திருமால். சிங்கப் பெருமாள் கோயில் ரயில்வே கேட்டை அடுத்துள்ள ஆப்பூர் கிராமத்தில் 900 அடி உயரம் உள்ள மூலிகைகளால் ஆன ஒளஷத மலையில் வாசம் செய்கிறார். அந்த நித்ய கல்யாண பிரசன்ன வேங்கடேசப் பெருமாள்.

 

கருவறையில் இரண்டரை அடி உயரத்தில், சங்கு - சக்கரம் தாங்கி, அபயகரத்தோடு அருள்பாலிக்கின்றார். புன்முறுவல் பூக்க, அழகே உருவாய் பத்மபீடத்தில், நின்ற கோலத்தில் திரிபங்க நிலையில். அதாவது தன் உடலை ஒயிலாக மூன்றாக வளைத்து, கிழக்கு நோக்கி சேவை சாதிக்கின்றார்!

 

இங்கு பெருமாளின் திருமார்பில் மஹாலட்சுமி வீற்றிருப்பதால், தாயாருக்கென தனிச் சன்னிதி இல்லை. பெருமாளின் கருவறை விமானம் 'ஆனந்த விமானம்'- எனப்படுகிறது.

 

திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து பெருமாளையும், அவர்தம் எதிரே உள்ள பெரிய திருவடியான கருடனையும் சேர்த்து தொடர்ந்து ஐந்து வாரங்கள் ஐந்து முறை வலம் வந்து வணங்கினால் தடை நீங்கித் திருமணம் கை கூடுகிறது.

 

சிங்கப் பெருமாள் கோயில் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் ஆப்பூர் கிராமத்தில் உள்ளது.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

பெருமாள் : திருமண வரமருளும் திருமால்! - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : Tirumal is the boon of marriage! - Perumal in Tamil [ Perumal ]