தற்போதைய நெல்லை சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேணுவனமாக (மூங்கில் காடு) இருந்தது. இந்த வேணு வனத்தின் வழியாக அந்நகரை ஆண்டு வந்த மன்னனுக்குத் தினமும் பால் நிறைந்த குடங்களை, முழுது கண்ட இராமக்கோன் எடுத்துச் செல்வது வழக்கம்.
வரம் தரும் திருநெல்வேலி நெல்லையப்பர்
நெல்லையப்பர் தோன்றிய வரலாறு
தற்போதைய நெல்லை சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேணுவனமாக (மூங்கில் காடு)
இருந்தது. இந்த வேணு வனத்தின் வழியாக அந்நகரை ஆண்டு வந்த மன்னனுக்குத் தினமும்
பால் நிறைந்த குடங்களை, முழுது கண்ட இராமக்கோன் எடுத்துச் செல்வது வழக்கம்.
வேணு வனத்தின் மத்தியில் வந்த பொழுது பாற்குடங்கள்
கவிழ்ந்து பால் சிந்திப் போயிற்று. பால் சிந்தியதையும் அங்கு மூங்கில் முளை ஒன்று
விளங்குவதையும், குடம்
உடைந்து விடாமல் உருண்டு சென்றிருப்பதையும் கண்டு இராமக்கோன் அதிசயித்தான்.
மனம் தேறிச் சென்றான். ஆயினும் தொடர்ந்து பல நாட்கள்
இவ்வாறு நடந்தபின், அம்மூங்கில்
முனை காலை இடறுகிறது என்று கருதி அதனைக் கோடரியால் வெட்டினான். அங்கே ரத்தம்
பெருக்கெடுத்து ஓடியது. அது கண்டு ஆயன் அச்சமுற்று அரசனிடம் விரைந்தான்.
அரசன் பரிவாரம் புடைசூழ வந்து ரத்தம் வடிவதைக் கண்டான்.
இந்நிகழ்ச்சி இறைவன் திருவருளென எண்ணி கண்களில் நீர்மல்க, அரியும் பிரமனும் காணற்கரிய முக்கண்ணா! மூங்கிலினூடே உன் பவள
மேனிப் பொலிவைக் காட்டியருள்க என வேண்டினான். அவ்வாறு வணங்கியவாறு குருதி
பெருக்கெடுத்து வரும் அவ்விடத்தைக் கைகளால் தொடவும் குருதி நின்றது.
ஆதியே நீதியாக என் முன் இத்திருவிளையாடல் காட்டினாய்,
உண்மை வடிவம் காட்டுக என்றதும், சிவபெருமான் லிங்க வடிவம் மிகச்சிறியது. நான் விழா
நடத்துவதற்கு இசைவாக வானுற வளர்ந்து பேர் உருக்காட்ட வேண்டும் எனப்பணிந்தான்.
மதி சூடிய தலையில் ஆயனால் வெட்டுண்ட காயத்தோடு. அரசன்
வேண்டுகோளுக்கு இணங்க காட்சியருளவும், வேந்தன் மீண்டும் வணங்கி ஆருயிர் வருந்தா வண்ணம்,
இப்பூவுலகில் குறுக வேண்டும் எனக் கேட்க இறைவனும் குறுகிக்
காட்சியளித்தான்.
பின்னர் முறைப்படி ஆவுடையாள் சாத்தத் திருவுளங்கொண்டு,
அதன்படி செய்ய நெல்லை நாதன் நிமிர்ந்து வளர்ந்து நின்றான்.
மீண்டும் ஒரு ஆவுடையாள் சாத்த மீண்டும் லிங்கம் வளர்ந்தது. இது கண்டவேந்தன்
பீடத்தின் மேல் பீடமாக இருப்பதொரு பீடம் அமைத்தான்.
அப்பொழுதும் லிங்கம் வளரவே இதற்கு மேலும் பீடம் அமைப்பது
முறையல்ல. நாம் முன்பு கேட்டுக் கொண்டதற்கிணங்க வளர்ந்தார் என்று இறைவனை நாடித்
துதிக்க, இறைவன்
நந்தி வாகனத்தில் தோன்றி என்னைச் சோதிமயமாகக் கண்டதால். நீ முழுதுங் கண்ட இராமன்
என்று பெயர் பெற்று விளங்குவாய் என ஆணையிட்டருளினான்.
திருமூலநாதருக்கும் வேயின் முளைத்த லிங்கத்திற்கும்
மற்றுமுள்ள மூர்த்திகளுக்கும், அரசன் ஆலயம் அமைத்து ஆகம விதிப்படி விழாக்களும் நடத்தினான்.
இத்திருவிளையாடல் பங்குனி மாதம் செங்கோல் திருவிழாவின் 4ஆம் நாள் அன்று நடைபெற்று வருகின்றது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
ஆன்மீகம்: சிவன் : வரம் தரும் திருநெல்வேலி நெல்லையப்பர் - நெல்லையப்பர் தோன்றிய வரலாறு [ ஆன்மீகம் ] | Spiritual: Shiva : Tirunelveli Nellaiappar which gives boon - History of nellaiappar in Tamil [ spirituality ]