திருப்பதி: ஏகாந்த தரிசனம்!

பெருமாள்

[ பெருமாள் ]

Tirupati: Ekantha Darshan! - Perumal in Tamil

திருப்பதி: ஏகாந்த தரிசனம்! | Tirupati: Ekantha Darshan!

திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க எட்டு திக்கில் இருந்தும் பக்தர்கள் குவிவார்கள்.

திருப்பதி: ஏகாந்த தரிசனம்!

 

திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க எட்டு திக்கில் இருந்தும் பக்தர்கள் குவிவார்கள். அவர்களின் ஆசைகளில் ஒன்று 'ஏகாந்த தரிசனம்' நள்ளிரவு 1.30 மணிக்கு ஸ்ரீ ஏழுமலையானைத் துயில் கொள்ளச் செய்வதற்காக நடத்தப்படும் நிகழ்ச்சிதான் இது!

 

பொதுவாக திருப்பதியில் நள்ளிரவு 1.30 மணி வரை நடை திறக்கப்பட்டு சர்வதரிசனம் நடைபெறுகிறது. அதன்பிறகு நடை பெறும் ஏகாந்த தரிசனத்தின்போது, சன்னிதிக்குள் இருக்கும் 'போக ஸ்ரீ நிவாசமூர்த்தி'யை வெள்ளித் தொட்டிலில் இடுவார்கள். தொட்டிலுக்குள் மெத்தை போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கும்!/

 

சுவாமி துயில் கொள்வதற்கு முன்பு அவரது உடலில் உள்ள பூக்களைப் பிரித்தெடுப்பார்கள். தொடர்ந்து, காய்ச்சிய பால், முந்திரி, பாதாம், திராட்சை ஆகியவை நைவேத்தியம் செய்யப்படும்! அதன் பிறகு, சுவாமி துயில் கொள்வதற்கு வசதியாக விளக்குத் திரியை மிகவும் மெதுவாக, மெல்லிய வெளிச்சத்தில் எரிய விடுவார்கள்.

 

இதன்பிறகு அள்ளமாச்சாரியார் பரம்பரையில் வந்தவர்கள் தம்புராவுடன் வந்து கீர்த்தனைகள் பாடுவார்கள். நைவேத்தியமாக இறைவனுக்கு வைத்த பால் அவர்களுக்குத் தரப்படும்/

 

பின்னர் சன்னிதிக்குத் திரைபோட்டு தங்கவாசல் சாத்தப்படும். இதற்குப் பிறகு சுப்ரபாத தரிசனத்தின்போதுதான் நடை திறக்கப்படும். இந்த ஏகாந்த தரிசனத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு இரண்டு லட்டு பிரசாதமாகத் தருகிறார்கள்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

பெருமாள் : திருப்பதி: ஏகாந்த தரிசனம்! - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : Tirupati: Ekantha Darshan! - Perumal in Tamil [ Perumal ]