திருப்புடை மருதூர்!

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Tirupuda Marudhur! - Tips in Tamil

திருப்புடை மருதூர்! | Tirupuda Marudhur!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்திலிருந்து ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது திருப்புடை மருதூர்.

திருப்புடை மருதூர்!

 

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்திலிருந்து ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது திருப்புடை மருதூர். தல விருட்சம், மருதமரம், சுவாமியின் திருப்பெயர் - நாறும் பூ நாதர் என்பது. அம்பாளின் பெயர் கோமதி அம்மன். தீர்த்தம், தாமிரபரணி நதி.

 

ஐந்து பிரகாரங்களுடன் அமைந்துள்ள பெரிய கோயில் இது. கலை எழில் ததும்பும் ஓவியங்களும், சிற்பங்களும் நிறைந்த ஆலயம். இந்திரன் பிரம்மஹத்தி தோஷத்தால் ஒரு சமயம் பெரிதும் துன்பப்பட்டான். அவன் திருப்புடை மருதூருக்கு வந்து தவம் செய்தான். சிவபெருமான் அவனுடைய தவத்தில் மகிழ்ந்து மருத மரத்தின் கீழ்க் காட்சி தந்து அவனது தோஷத்தை நீக்கினார் என்பது தலபுராணம்!

 

கும்பகோணம் மகாமகம் போலவே பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்புடை மருதூரில் பூசமும் விசேஷமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தைப் பூசத்தில் இங்கே பிரம்மோத்ஸவம் சிறப்பாக நடைபெறுகிறது. முன் ஜன்ம வினைகள் எதுவாக இருந்தாலும் இவ்வாலயத்திற்கு வந்து வணங்கினால் அவைகள் நீங்கிவிடுகின்றன என்று தல வரலாறு கூறுகின்றது!


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : திருப்புடை மருதூர்! - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Tirupuda Marudhur! - Tips in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்