திருவரகுணமங்கையிலிருந்து அதே சாலையில் கிழக்கே அரை கி.மீ.யில் உள்ளது
திருப்புளிங்குடி (புதன்)
திருவரகுணமங்கையிலிருந்து அதே சாலையில் கிழக்கே அரை
கி.மீ.யில் உள்ளது இத்திருத்தலம். பேருந்து வசதி இருக்கிறது. இங்கு பெருமாளின்
திருஉத்தியிலிருந்து பிரம்மா சேவை சாதிக்கிறார். 15.5.96 அன்று மகா சம்ப்ரோஷணம் (கும்பாபிஷேகம்) நடைபெற்றது.
ஒரு சமயம் திருமால் இலக்குமி தேவியுடன் இந்நதிக் கரையில்
தனித்திருந்த பொழுது பூவுலகுக்கு வந்தும் தன்னை ஒதுக்குகினிறாரோ என பூமாதேவி
சினங்கொண்டு பாதாளலோகம் செல்ல பூமி இருண்டு வறண்டது. தேவர்கள் எல்லாம் திருமாலை
வழிபட அவரும் இலக்கும் தேவியுடன் பாதாள லோகம் சென்று பூமாதேவியை சமாதானம் செய்து
இருவரும் சமமே என்று கூறி நட்புண்டாக்கி இரு தேவிமார்களுடன் இங்கே
காட்சியளிக்கிறார்.
வியாழ பகவானின் யோசனைப்படி இந்திரன் இங்கு வந்து பூமி பாலனை
வேண்டி தீர்த்தத்தில் நீராட பரமஹத்தி தோஷம் நீங்கியது. தனது சாபவிமோசனத்தில்
மகிழ்ந்த இந்திரன் திருமாலை நோக்கி பெரிய யாகம் செய்து வசிஷ்டரின் மகளையும்
அவருடன் வந்த ரிஷிகளையும் மதிக்காமல் கடுஞ்சொற்கால் வஞ்சிதத அரக்கனாக சபிக்கப்பட்ட
யக்ஞசர்மாவிற்கும். திருமால் தோன்றி சாபவிமோசனம் அளித்தார். இங்கே பெருமாள் ஆதிசேஷன்
மீது பனிரண்டு அடியில் காட்சி கொண்டுள்ளார். சயனப் பெருமாளின் திருப்பாதத்தை
மூலஸ்தானத்தை சுற்றி வரும் போது உள்ள ஜன்னல் வழியே தரிசிக்கலாம். பெருமாள்
நாபியியல் இருந்து ஒரு தாமரைக்கொடி சுவரில் பிரம்மன் வீற்றிருக்கும் தாமரையுடன்
சேருகின்றது. இவர் மேனிக்கு எண்ணெய் காப்பு செய்ய 250 லிட்டர் உபயோகிக்கப்படுகிறது. இலக்குமியுமியும்
பூமாதேவியும் பெரிய உருவங்களாக பெருமாளின் திருப்பாதத்தில் அமர்ந்துள்ளனர். இங்கு
குழந்தைப் பேறுக்காக செய்யப்படும் பிரார்த்தனைகள் பொய்ப்பதில்லை.
மூலவர் - காய்சினவேந்தன், புஜங்கசயனம் கிழக்குப் பார்த்த திருமுக மண்டல்,
உற்சவர் - எம் இடர்களைவான். தாயார் - மலர்மகள்,
திருமகள் (பெரிய திருவுருவங்கள்) புளியங்குடிவல்லி என்ற
உஸ்தவதாயாரும் உண்டு) தாயார்களுக்கு தனி சன்னதி இல்லை தீர்த்தம் - வருணநீருதி
தீர்த்தம், விமானம் -
வதசார விமானம்,
பிரத்யட்சம்- வர்ணம் நீருதி, தர்மராஜன். ஆகமம் - வைகனாஸம், சம்பிரதாயம் - தென்கலை.
பண்டை நாளாலே நின் திரு அருளும் பங்கையத்தான் திரு அருளும்
கொண்டு, நின் கோயில் சீய்த்துப்பல் படிகால் குடி குடி வந்து
ஆட்செய்யும் தொண்டரோர்க் (கு) அருளிச் சோதி வாய் திறந்துன்
தாமரைக் கண்களால் நோக்காய்.
தென்டீரைப் பொருநல் தன்பணை சூழ்ந்தனை திருப்புளியங்குடி
கிடந்தானே
- பாடல் 3566
புளியங்குடி கிடந்து வரகுண மங்கை இருந்து வைகுந்தத்துள்
நின்று
தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி,
நலிந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள்கூத்தாடி
(நின்(று) ஆர்ப்ப,
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காண
வாராயே
- பாடல் 3571
கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தியுள் திருஉடம்பு
அசைய,
தொடர்ந்து குற்றவேல் செய்து கொல்லடிமை வழிவரும் தொண்டரோர்க்
கருளி,
தடங் கொள்தாமரைக் கண்விழித்து நீ எழுந்தன் தாமரை மங்கையும்
நீயும்,
இடங்கொள் மூவுலகும் தொழவிருந்த தருளாய் திருப்புளியங்குடி
கிடந்தானே
- பாடல் 3570
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : திருப்புளிங்குடி (புதன்) - நவதிருப்பதி - ஆன்மீக குறிப்புகள், தல வரலாறு [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Tirupulingudi (Wednesday) - Navathirupati - Spiritual Notes, Head history in Tamil [ spirituality ]