திருவண்ணாமலையில் ஐந்தாம் பிரகாரத்தில் ஆயிரங்கால் மண்டபம் அருகே அமைந்து இருக்கிறது பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி. இதன் சிறப்பு, ஞானத்தேடலுடன் வந்த ஸ்ரீரமண மகரிஷி, மற்றவர்கள் தியான நிலையில் அமரும் போது தன்னை துன்புறுத்துவதை தவிர்க்க, இந்த பாதாள சந்நிதியில் அடைக்கலம் அடைந்து தன்னை மறந்து தவம் இயற்றினார். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக இருப்பது திருவண்ணாமலை. கார்த்திகை மாதம் தீபத்திருவிழா நடப்பதும் இதன் தெய்வீக மேன்மையை வெளிப்படுத்தவே.
திருவண்ணாமலை பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி சிறப்பு
திருவண்ணாமலையில் ஐந்தாம் பிரகாரத்தில் ஆயிரங்கால்
மண்டபம் அருகே அமைந்து இருக்கிறது பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி.
இதன் சிறப்பு, ஞானத்தேடலுடன் வந்த ஸ்ரீரமண மகரிஷி, மற்றவர்கள் தியான நிலையில் அமரும் போது தன்னை துன்புறுத்துவதை தவிர்க்க, இந்த பாதாள சந்நிதியில் அடைக்கலம் அடைந்து தன்னை மறந்து தவம் இயற்றினார்.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக இருப்பது திருவண்ணாமலை.
கார்த்திகை மாதம் தீபத்திருவிழா நடப்பதும் இதன்
தெய்வீக மேன்மையை வெளிப்படுத்தவே.
சித்தர்கள் பலர் இன்றும் அம்மலையில் அரூபமாக நடமாடுகின்றனர்
என்பதால் கிரிவலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
பதினெட்டு சித்தர்களில் ஒருவரான் இடைக்காட்டு
சித்தர் இத்தலத்திற்கு உரியவராக விளங்குகிறார்.
மற்றும் அருணகிரிநாதர், விருபாஷதேவர், தெய்வசிகாமணி, அருணாசல தேசிகர், மகான் சேஷாத்திரி சுவாமிகள், பகவான் ரமண மகரிஷி, யோகி ராம்சுரத்குமார் போன்ற பல தெய்வீக சித்த
புருஷர்களை தனது ஜோதியில் இணைத்து கொண்ட மகத்துவமும், சிறப்பும் கொண்டது.
திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது அண்ணாமலையாரின்
பக்தர்களின் சிவகோஷம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
திருவண்ணாமலை சிறப்புகள் : திருவண்ணாமலை பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி சிறப்பு - குறிப்புகள் [ ] | Tiruvannamalai specialty : Tiruvannamalai Pathala Lingeswarar Shrine is special - Notes in Tamil [ ]