சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க....

ஆரோக்கிய குறிப்புகள்

[ ஆரோக்கிய குறிப்புகள் ]

To prevent kidney stones - Health Tips in Tamil

சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க.... | To prevent kidney stones

அடிக்கடி திரவ உணவுகளை உட்கொள்ளுங்கள். தினசரி இரண்டு லிட்டர் அளவில் சிறுநீர் கழியுங்கள்.

சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க....

 

1. அடிக்கடி திரவ உணவுகளை உட்கொள்ளுங்கள். தினசரி இரண்டு லிட்டர் அளவில் சிறுநீர் கழியுங்கள்.

2. சிறுநீர் உஷ்ணமாக இறங்குதல், சொட்டு மூத்திரம், நீர்க்கடுப்பு போன்ற குறைபாடுகளை அலட்சியமாக எண்ணாதீர்கள். சிறுநீரக தொற்றுகளாலும் (Urinary infection) சிறுநீரகக் கற்கள் உண்டாக வாய்ப்புண்டு.

3. தினசரி உட்கொள்ளும் உணவில் 600 மி.கிராமுக்கும் குறைவான அளவிலேயே கால்சியம் சேர்த்துக்கொள்ளவும்.

4. தினசரி உணவில் 60 முதல் 70 கிராம் அளவில் புரோட்டினை சேர்த்துக்கொள்ளுங்கள்.

5. கால்சியம், பாஸ்பேட், ஆக்ஸலேட், யூரிக் அமிலம் நிறைந்த உணவுகளைக் கண்டறிந்து அவைகளை அறவே நீக்குங்கள்.

 

1. கால்சியம் மிகுந்த உணவுகள் (Calcium)

1. பீன்ஸ்

2. காலிபிளவர்

3. முட்டையின் வெண்கரு

4. பன்றி இறைச்சி

5. பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள்

6. உருளைக்கிழங்கு

7. கேழ்வரகு

 

2. பாஸ்பேட் மிகுந்த உணவுகள் (Phosphates)

1. பாதாம் பருப்பு

2. பிஸ்தாப் பருப்பு

3. முழு தானியங்கள்

4. எண்ணெய் தன்மையுள்ள விதைகள்

5. ஆட்டுக்கறி

6. மீன்

7. முட்டை

8. பால்

 

3. ஆக்ஸலேட் மிகுந்த உணவுகள் (Oxalates)

1. பீட்ரூட்

2. ஸ்ட்ரா பெர்ரி

3. தக்காளி

4. தேயிலை

5. கடலைப்பருப்பு

6. கோக்

7. சாக்லேட்டுகள்

8. முந்திரிப் பருப்பு

9. மாட்டிறைச்சி

 

4. யூரிக் அமிலம் (Uric acid) மிகுந்த உணவுகள்:

1. மீன்

2. கல்லீரல் இறைச்சியின் சூப்

3. இனிப்பு ரொட்டிகள்

4. மூளை இறைச்சி

சிறுநீரகக் கற்களின் தன்மையறிந்து அதற்கான உணவுக்கட்டுப்பாடுகளைக் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்.

 

உப்பு அதிகம் சேர்வதினால் ஏற்படும் கெடுதல்கள்

 

உப்பு ரத்தத்தில் அதிகம் சேர்ந்தால் ரத்தத்தில் நீரை அதிகம் தேங்கும்படி செய்துவிடும். உப்பு எந்த அளவிற்கு அதிகரிக்கிறதோ அந்த அளவு ரத்ததில் நீர் அதிகரிப்பதால் நாளங்களில் ரத்தம் சென்று திரும்பும் பணியில் தடை ஏற்படுகிறது. ரத்தம் பாய்கிறபோது வேகமாகச் செல்ல வேண்டியிருப்பதால் ரத்த அழுத்தமும் ஏற்படுகிறது.

உப்பு அதிகரிக்கிறபோது வேறொரு கெடுதலையும் உண்டு பண்ணிவிடுகிறது. அது என்னவெனில் கிட்னி பாதிப்பாகும். கிட்னி பாதிப்படையத் தொடங்குகிறபோது ரத்தத்தில் நீர் தேங்குகிறது எனலாம். இதற்கு முதன்மையான காரணமாக உப்பின் அதிகரிப்பையே கூற வேண்டும். ஒன்றைப் பொருத்து மற்றொன்று பாதிப்படைகிறது எனக்கொள்ளலாம்.

நடைமுறையில் மக்கள் பலவிதமான தொழில்களில் ஈடுபடுகின்றனர். ஓடியாடி சிலர் பணிபுரிவதுண்டு. சிலர் இருந்த இடத்திலேயே பணி செய்வதுண்டு. இப்படியாக நீண்ட நேரம் இரண்டு கால்களையும் தொங்கவிட்டுக் கொண்டிருப்போமே யானால் முழங்காலுக்குக் கீழே நீர் சுரந்து காலில் வீக்கம் தோன்ற ஏதுவாகும். கால் சதையை அமுக்குகிறபோது குழிபோல் விழும். இதுவே முற்றிவிட்டால் சுரப்பு வீக்கம் போலவே நின்றுவிடும்.

இந்நிலை என்னவெனில் கிட்னியின் பாதிப்பேயாகும். இவ்வாறான நிலை உடையவர்கள் ரத்த அழுத்தம் கூடியநிலையை உடையவர்களாகவே இருப்பர் என்று உறுதியாகக் கூற முடியும்.

இவ்வாறான உடல் அமைப்பு கொண்டவர்களுக்கு உடலி ல் உள்ள நீரை வெளியேற்றுவது எளிதான காரியமே. சிறுநீர் அதிகம் பிரியக்கூடிய மருந்து வகைகளைக் கொடுத்து சிறுநீரோடு உப்பும் வெளியேற மருத்துவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறு மாத்திரைகள் உட்கொண்டு சிறுநீரும், உப்பும் வெளியேறுகிற சமயத்தில் உடலுக்குத் தேவையான பொட்டாசியம் போன்ற சத்துப்பொருட்களும் வெளியேற வாய்ப்புள்ளது. பொட்டாசியம் கலந்த மாத்திரைகள் மருத்துவ அங்காடிகளில் தாராளமாகக் கிடைக்கின்றன.

எப்படியாயினும் சிறுநீரோடு எந்த மிகுதியான பொருளையும் வெளியேற்றுகிறபோது (உப்பாகவும் பொட்டாசியமாகவும் இருக்கலாம்) கிட்னியைத் தூண்டவே செய்யும். கிட்னிக்கு அதிகமான செயற்கை வேலையைக் கொடுக்கும். இப்படி அதிகப்படியான தூண்டுதல் உள்ளபோது ஏற்கெனவே பாதிப்புக்குள்ளான கிட்னி மேலும் பாதிப்படை கிறது. அதிகமான நீரையும், உப்பையும் வெளியேற்றாமல் இருந்தாலும் பாதிப்பு உண்டாகிறது. வெளியேற்றக்கூடிய மாத்திரைகளால் கிட்னிக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் கிட்னியின் பாதிப்பு ஒரு நிலையை அடைந்துவிட்டால் மாத்திரையைப் பயன்படுத்த முடியாது. கிட்னி பாதிப்பைத் தற்கால விஞ்ஞான முன்னேற்றத்தால் நிமிர்த்த முடியாத செயலாகவே படுகிறது.

வசதிபடைத்த பெரும்பணக்காரர்கள் எவ்வளவு விலைகொடுத்தும் கிட்னியை வாங்கிப் பொருத்த முடியும். இவ்வாறாக ஏற்புடைய கிட்னியைப் பொருத்தி இருந்தாலும் உரிய காலம் வரை அதன் இயக்கம் நீடிப்பதில்லை . இப்படியாக மருத்துவர் மூலம் ரத்த அழுத்த நோய் இருப்பது தெரியவந்தால் கிட்னியும் பாதிப்படையலாம் என்ற எண்ணத்தில் விழிப்போடு இருத்தல் வேண்டும். அதற்காக அஞ்சிவிடுதல் வேண்டாம்.

மேலும் ரத்த அழுத்த நோய் ஏற்பட மிக முக்கிய காரணம் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்புச்சத்து அதிகரிப்பதாகும். கொலஸ்ட்ரால் என்பது என்னவெனில் கொழுப்பு பண்டத்தின் ஒரு பிரிவேயாகும். இதனை அறிவதன் மூலம் மற்றைய கொழுப்பின் அளவை அறிய முற்படலாம். கொலஸ்ட்ரால் ரத்தத்தில் அளவைத் தாண்டினால் ரத்த ஓட்டத்தையே தடைசெய்யக்கூடிய வல்லமை அதற்கு உண்டு.

 

கொழுப்பினால் ஏற்படும் கெடுதல்கள்

 

கொழுப்பு அதிகமாகிறபோது ரத்தத்தைக் கெட்டிப்படுத்தும். இரத்தத்தின் செறிவை அதிகப்படுத்தும். ரத்த நாளச்சுவர்களில் ஒட்டிக்கொண்டு நாளங்களின் குழாய்களைச் சுருக்கிவிடும். இருதயத்தில் ரத்தம் அடையும் பாதையான சிரைகளையும், இருதயத்திலிருந்த ரத்தம் வெளியேறும் தமனிகளையும் அடைத்துக்கொள்ளும். வயது கூடினாலே உடலில் கொழுப்புச்சத்து அதிகமாகும்.

அந்த வாய்ப்பு தானாகவே வரும் இப்படியாக நோயற்றவர்கள்கூட கொழுப்புப் பண்டங்களைக் குறைத்து உண்ணப் பழகி வரவேண்டும். கொழுப்புச்சத்து அதிகம் உடலி ல் சேருகிறபோது மிகுந்த சிரமத்தையே உண்டுபண்ணும். உடல்பருமன் ஏற்படும். சுறுசுறுப்பாக இயங்க முடியாது.

நுரையீரல், கல்லீரல், இருதயம், கிட்னி போன்ற உள்ளுறுப்புகளில் அதிகமாக கொழுப்பு தேங்கி இயக்கத் தடைகளை ஏற்படுத்தும். பெரும்பாலும், ரத்த அழுத்தத்திற்கென உட்கொள்ளும் மாத்திரைகளில் பெரும்பாதிப்பு இருக்காது என்றாலும் பொதுவாகவே எந்த மருந்துகளும் எதிர்விளைவுகளை உள்ளடக்கிய மருந்துகள்தான்.

நாமாகவே நோயின் அளவைப்பற்றித் தெரியாது மீறி பயன்படுத்தக்கூடாது. எக்காரணம் கொண்டும் மருத்துவரின் ஆலோசனையை மீறக்கூடாது. அதிலும் உப்பையும், நீரையும் வெளியேற்றும் மருந்துகளை ஓர் அளவிற்கு மேல் நிச்சயம் பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக முன்பு குறிப்பிட்டதுபோல் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு மலச்சிக்கல் என்பது இருக்கக்கூடாது.

எப்படியானாலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளையும் ஏற்று நோயின் வீரியம் சமநிலையை அடைந்தபின் மற்றைய வழிகளைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

 

ஆரோக்கிய குறிப்புகள் : சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க.... - ஆரோக்கிய குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Health Tips : To prevent kidney stones - Health Tips in Tamil [ Health ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்