அருள்மிகு அருள்தரும் காந்திமதி அம்பாளுக்கும். 1887ஆம் ஆண்டில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஸ்ரீமூலமகாலிங்கம் உள்பட 171 பரிவார மூர்த்திகளுக்கும் நடைபெற்றது.
திருப்பணி
அருள்மிகு அருள்தரும் காந்திமதி அம்பாளுக்கும். 1887ஆம் ஆண்டில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஸ்ரீமூலமகாலிங்கம்
உள்பட 171 பரிவார
மூர்த்திகளுக்கும் நடைபெற்றது.
அடுத்து 1944ஆம் ஆண்டில் சுவாமி அம்பாள் கோவில் புதுப்பிக்கப்பட்டு,
வர்ணம் வைத்து அம்பாள் கோவில் தூபி புதிதாகச் செய்யப்பட்டு 7.2.44-இல் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகமும் நடைபெற்றது. மேலும்
அறுபத்து மூவர் திருத்தொண்டத்தொகை வரிசைப்படி ஒழுங்காக அமைக்கப்பட்டுள்ளன.
300 ஆண்டுக்கிடையில்
கோபுரங்கள், மதில்கள்.
சுதை வேலைப்பாடமைந்த பொம்மைகள் யாவும் முழுமையாகச் சீர் செய்யப்படாமல்
சிதைவுகளுடன் காணப்பட்டபடியால், அவற்றை உடனடியாகப் பழுது பார்த்துச் செப்பனிடும் பொருட்டு 7.10.1971இல் திருமுருகானந்தவாரியார் சுவாமிகள் தலைமையில் ஒரு
திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு, கோபுரம் விமானங்கள் பழுது பார்க்கப்பட்டு புதிதாக ஆறு
விமானங்கள் அமைக்கப்பட்டன.
அம்பாள் கோவில் அர்த்த மண்டபம் புதுப்பிக்கப்பட்டு.
பளிங்குக் கற்கள் தளவரிசையும் அமைக்கப்பட்டன. சுவாமி அம்பாள் கோபுரங்களுக்குச்
செப்புக் கலசங்கள் புதிதாய்ப் பொருத்தப்பட்டன. வடக்குப் பிரகாரத்தில் நின்ற
சீர்நெடுமாறன் கலை அரங்கம் நிறுவப்பட்டது. ஆயிரங்கால் மண்டபம் அரசு நிதியுடன்
சுமார் இரண்டு லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது.
சுவாமி கோவில் அனுப்பு மண்டபத்தில் திருப்பணி நினைவாக
நினைவு வளைவு மண்டபம் அமைக்கப்பட்டது. அம்பாள் கோவிலில் உள்ள ஆறுமுக நயினார்
உற்சவர் சந்நிதிக்குப் புதிதாய்ப் பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின்
நற்சிந்தையாலும், பொதுமக்கள்
மற்றும் இதர ஆலயங்களின் நன்கொடையாலும் ரூ.10 இலட்சம் செலவில் திருப்பணி சிறந்த முறையில் நடைபெற்று.
ஆயிரத்து தொள்ளாயிரம் எழுபத்து நான்காம் ஆண்டு மே திங்கள் மூன்றாம் (3.5.74)
கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் திருக்கோவில் முழுமையாகத் திருப்பணி
செய்யப்பட்டு. 7.4.2004 இல் கும்பாபிஷேகம்
நடைபெற்றது.
ஆலயத்தில் நடைபெறும் ஒவ்வொரு கால பூஜைக்கும் தனித்தனிக்
கட்டளைகள் இருக்கின்றன. ஆனிப்பெருந் திருவிழா முதல் நடைபெறும் அனைத்துத்
திருவிழாக்களுக்கும் கட்டளைகள் ஏற்படுத்தியிருக்கின்றனர். திருக்கோவில் மூலமாகவும்
கட்டளைகள் நடக்கின்றன.
நெல்லையப்பர் கோவிலில் தினமும் சொற்பொழிவுகளும்,
தேவார இன்னிசையும் நடைபெறுகின்றன. தினசரி காலை 6 மணிக்கும் மாலை 7 மணிக்கும் தேவாரம் திருமுறைகள் ஒலி பெருக்கி மூலம்
ஒலிபரப்பப்படுகிறது. திருமுறை ஆசிரியர் மூலம் மாணவ- மாணவிகளுக்குத் திருமுறை இசைப்
பயிற்சி கொடுக்கப்படுகிறது.
சுமார் 2000 அரிய நூல்களைக் கொண்ட திருக்கோவில் நூல்நிலையம்,
சவுந்திரசபையில் நிறுவப்பட்டிருந்தது. இக்கோவிலின் ஆதரவில்
பாளையங்கோட்டையில் சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவிகளைக் கொண்ட அருள்தரும் காந்திமதி
அம்பாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றும், 75 ஏழை மாணவிகளைக் கொண்ட அருள்மிகு நெல்லையப்பர் கருணை இல்லம்
அன்பு ஆசிரமம் ஒன்றும் நடைபெற்று வருகின்றன.
திங்கட்கிழமைதோறும் திருவாசக விரிவுரையும்,
புதன்கிழமை தோறும் திருக்குறள் வகுப்பும்,
வியாழக்கிழமை தோறும் சமயப்பேருரையும்,
வெள்ளிக்கிழமை தோறும் திருமுறை பாராயணமும் நடைபெற்று
வருகின்றன.
தென்னகத்தில் தலைசிறந்த நகராக விளங்கும் நெல்லையம்பதியையும்,
நெல்லை நாதரையும், அம்மை காந்திமதியையும் சிறப்பித்து. சமயக்குரவர்களும்
புலவர் பெருமக்களும், அறிஞர்
பெருமக்களும் பதிகங்கள் பாடிச் சிறப்பித்துள்ளார்கள்.
நெல்லையப்பப் பிள்ளை பாடிய திருநெல்வேலித் தலபுராணமும்,
1914ஆம் அருணாசலக் கவிராயரால் பதிக்கப்பட்ட
வேணுவன புராணமும், வித்துவான்
சொக்கநாத பிள்ளை பாடிய காந்தியம்மை பிள்ளைத் தமிழும், கணபதி சாஸ்திரியால் மொழிபெயர்க்கப்பட்ட ஸ்ரீதாம்பிராபரணி
மகாத்மியம், மற்றும்
பிஷப் கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி சரித்திரமும், காந்திமதி அம்மை கலித்துறை அந்தாதி, நெல்லை வருக்கை கோவை, நெல்லை சிந்து, திருநெல்வேலி சேத்திர கும்மி, மும்மணிக்கோவை, அந்தாதி, திருநெல்வேலி தலபுராணம் ஆகிய நூல்கள் இத்தலத்தின் மகிமையையும்,
இறைவனது அருளையும் சிறப்பித்துக் கூறுகின்றன.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
ஆன்மீகம்: சிவன் : திருப்பணி - கட்டளைகள், கல்வி, தருமம், சமயப் பணிகள் [ ஆன்மீகம் ] | Spiritual: Shiva : Turnaround - Ordinances, education, religion, religious work in Tamil [ spirituality ]