ஆண்களில் மொத்தம் நான்கு வகை மனிதர்கள் இருக்கிறார்கள்._ முதல் வகை மனிதர்கள் சிங்கக்குட்டி வகை! இரண்டாவது வகை ஆம்பளை சிங்கம்! மூன்றாவது வகை குழப்பவாதி வகை! நான்காவது வகை ஒரு சரியான மனிதன்!
ஆண்களின் வகைகள்:
ஆண்களில்
மொத்தம் நான்கு வகை மனிதர்கள் இருக்கிறார்கள்._
முதல்
வகை மனிதர்கள் சிங்கக்குட்டி வகை!
இரண்டாவது
வகை ஆம்பளை சிங்கம்!
மூன்றாவது
வகை குழப்பவாதி வகை!
நான்காவது
வகை ஒரு சரியான மனிதன்!
பெண்கள்
இந்த நான்கு வகை ஆண்களில் யாரை நம்புவது என்ற கேள்விக்கு நான் ஆண்களை முதலில்
நான்கு வகையாக பிரித்துக் கொள்கிறேன்!
முதலில்
சிங்கக்குட்டி வகையை பார்ப்போம்.இந்த வகை ஆண்களை நீங்கள் திருமணம் செய்து கொண்டால், நிஜமாகவே
இவர்கள் சிங்கக்குட்டி மாதிரி நடந்து கொள்வார்கள்!
சிங்கக்குட்டி
எப்படி நடந்து கொள்ளும் ஒரு குழந்தை போல நடந்து கொள்ளும் அடம்பிடிக்கும் தன்னுடைய
தேவைகளை மட்டும் செய்ய வேண்டும் என்று சொல்லும் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை
என்றால் அட்டகாசம் செய்யும் பிரச்சனை என்று வந்தால் அம்மாவிடம் போய் நிற்கும்
இதுதான்
உங்கள் மாமியார்! இதோ அவர்கள் கீழே அமர்ந்து இருப்பது தான் உங்கள் கணவர்!
அவ்வளவுதான் நீங்கள்!
நீங்களும்
ஒரு பெண் சிங்கமாக இருந்தால், நீங்கள் உங்கள் மாமியார்
சிங்கத்தை சமாளித்து, உங்கள் கணவர் சிங்கக்குட்டியை
நீங்களே வளர்த்து, ஒரு பெரிய மனிதன் ஆகலாம்!
திருமணத்திற்கு பிறகு பொறுப்பு வர வாய்ப்புண்டு! இல்லாவிட்டால் காலம்பூரா
அவஸ்தைப்பட வேண்டியது தான்! எனவே இந்த சிங்கக்குட்டி ஆண்களை நம்புவது கொஞ்சம்
ரிஸ்க்!
அடுத்தது
ஆம்பளை சிங்கம்! இந்த வகை ஆண்கள் பார்க்க மிக அழகாக இருப்பார்கள்! ஆல்பா மேல் Alpha Male என்று
கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இவர்கள்தன் அவர்கள்! இவர்கள்
பணக்காரர்களாக மட்டும் இருந்துவிட்டால், ப்ளே பாய் தான்!
இவர்கள்
தங்கள் சுகத்திற்காக மட்டுமே, உங்களை மனைவியாக வைத்துக்
கொள்வார்கள்! அவர்கள் தேவை தீர்ந்ததும், அடுத்த சிங்கத்தைப் அதாவது அடுத்த
பெண்ணனை பார்த்துக் கொண்டு செல்வார்கள்! பல தாரம் (பலகாரம் இல்லை ) கொள்வது
மட்டும் தான் இவர்களின் வேலை! இவர்களிடம் கொஞ்ச காலம் சந்தோஷமாக இருக்கலாம்! ஆனால்
பின்னர் விவாகரத்து வாங்கி தனியாக வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படும்!
அடுத்தது
குழப்பவாதி! இவர் வாழ்நாள் பூரா யோசித்துக் கொண்டே இருப்பார். தானும் குழம்பி
உங்களையும் குழுப்பி கொண்டே இருப்பார்! உங்களை கல்யாணம் செய்து கொள்வதா? இல்லை
தன் பெற்றோரை பார்த்துக் கொள்வதா? நம்மால் முடியுமா? நமக்கு
இந்த கல்யாணம் தேவையா? இவள் ஏன் அவசரப்படுகிறாள்? நமக்கென்று
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
இருக்கிறதே? என்று யோசித்துக் கொண்டே
இருப்பார்!
இவர்களை
நம்பினால் 16 வயதினிலே ஸ்ரீதேவி மாதிரி, "இந்த மயில் உனக்காக
வாழ்நாள் பூரா காத்துக்கிட்டு இருப்பா! " என்று, நீங்க
காத்திருக்க வேண்டியதுதான்!
கடைசிவரை
கல்யாணம் ஆகாமல் நீங்கள் கன்னியாகவே இருக்க வேண்டியதுதான்!இந்த ஆளு ஒரு 16
வயதிலினிலே டாக்டர், பேசாமல் நாம் சப்பாணியை கல்யாணம்
பண்ணிக்கொள்ளலாம் என்றால் அடலீஸ்ட் ஒரு கமல் கிடைப்பார்!
இல்லாவிட்டால்
ரயில்வே ஸ்டேஷனில் காலமெல்லாம் காத்துகொண்டு இருக்க வேண்டியதுதான்!கவலைப்படாதீர்கள்
குழப்பவாதிகளும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்! கடவுள்னு ஒருத்தன் இருக்கார்
பெண்ணே! நீ ரயில்வே ஸ்டேஷனில் அவனுக்கு காத்திருக்காதே!
நான்காவது
வகை, சரியான
ஆண்மகன்!இந்த ஆண்மகனை நீங்கள் நம்பலாம்! மிகவும் பொறுப்புணர்வோடு இருப்பார்!
உங்களுக்கு மரியாதை கொடுப்பார்! தாய் தந்தையர், மனைவி
எல்லோரையும் பாலன்ஸ் செய்து வாழ்க்கை நடத்துவார்! எல்லோரும் நன்றாகப் பார்த்துக்
கொள்வார்!
துன்பம்
என்று வரும்போது ஜேம்ஸ்பாண்ட் மாதிரி உடனே விரைந்து வந்து உங்களைக்
காப்பாற்றுவார்! இவரை கண்டால் ஆண்களும் மயங்குவார்கள். ஒரு சக்திமான் பாதி
புத்திமான் பாதி சேர்த்து செய்த கலவை! எல்லோருக்கும் ஒரு தந்தை போல் நடந்து
கொள்வார்!
எனவே
நீங்கள் சரியான ஆண்மகன் கிடைத்தால் கண்டிப்பாக நம்பலாம்!
#டிஸ்கி
: ஆண்களில், நான்கு வகை இருப்பது போல், பெண்களில்
3 வகை உண்டு. அவை சின்ன குழந்தை,Barbie Girl..
பணம்
நகை பைத்தியம்
Material Girl..,
மற்றும்
சரியான பெண்மணி
Perfect Woman (also Pretty
Woman)!
இந்த
"சரியான பெண்மணி " வகை பெண்களை மட்டும், ஆண்கள்
நம்புவது சாலச்சிறந்தது...!!!
இதுபோன்ற பல தகவல்களுடன்
நமது தமிழர் நலம் பயணம் தொடரும்!
புன்னகை ஒன்றே வாழ்க்கை!
இறைபணியில்
அன்புடன்....
༺🌷༻தமிழர் நலம்༺🌷༻
💥நன்றி!
கற்போம் கற்பிப்போம்!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
🌷🌷முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்
எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...
இந்த நாள் இனிய நாளாகட்டும்...
வாழ்க 🙌 வளமுடன்
அன்பே🔥இல்லறம்
🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை
பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
💦💦💦💦💦💦💦💦💦💦💦💦
பொது தகவல்கள் : ஆண்களின் வகைகள் - குறிப்புகள் [ பொது தகவல்கள் ] | General Information : Types of men - Tips in Tamil [ General Information ]