வயிற்றின் மேல்பகுதி அதாவது, நெஞ்சின் மத்தியப்பகுதியில் வலி, வேதனை அல்லது ஒருவித அசௌகரியமான தன்மை தென்படும்.
குடற்புண் (Ulcer)
1. வயிற்றின் மேல்பகுதி அதாவது, நெஞ்சின் மத்தியப்பகுதியில் வலி, வேதனை அல்லது ஒருவித அசௌகரியமான தன்மை தென்படும்.
2. உணவருந்தும் முன்பாக வயிறு எரிச்சல் அல்லது வயிற்றில் ஏதோ அழுத்துவது போன்ற வலி காணப்பட்டால் அது Duodenal Ulcer - க்கு உரிய அறிகுறியாகும்.
3. உணவருந்தியபின் இதேவகை வலி தென்பட்டால் அது Gastric Ulcer - க்கு உரிய அறிகுறியாகும்.
4. இதயத்தின் மேற்பகுதியில் எரிச்சல், வாந்தி, உடல் எடை திடீரென குறைந்து போதல் போன்றவையும் குடற்புண் (Ulcer) வருவதற்கான அறிகுறியாகும்.
5. மலம் அடிக்கடி கழித்தலும், மலம் திரவ நிலையில் (Semi Solid) கழித்தலும், மலம் கறுப்பு நிறத்தில் வெளியேறுதல் குடற்புண்ணுக்கான அறிகுறியாகும்.
6. ஒரு சிலருக்கு இரத்தசோகை (Anemia) முற்றிய நிலையில் இரத்த வாந்தி உண்டாகி குடற்புண் ணின் முற்றிய நிலையை (Bleeding Ulcer) காட்டும்.
குடற்புண்ணை குணப்படுத்த மருந்துகளைவிட உணவுகளே சிறந்தது. உணவில் ஏற்படுத்தும் சீர்திருத்தமே நோயை விரட்டும். எனவே தேர்ந்த உணவுகளே சிறந்த மருந்தாகும்.
1. குடற்புண்ணால் கடுமையாக பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் சந்ததிகளுக்கும் குடற்புண் வரலாம்.
2. குடற்புண் தொழில் சார்ந்த நிலையில் குறிப்பாக, டாக்டர்கள், அடிக்கடி பிரயாணம் மேற்கொள்பவர்கள், மூன்று வேளையும் ஓட்டலில் சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள், அடிக்கடி பட்டினி கிடப்பவர்கள், மூளை சார்ந்த வேலையில் ஈடுபட்டிருப்போர்களுக்குக் கண்டிப்பாகக் குடற்புண் வரலாம்.
3. அடிக்கடி உணர்ச்சிவசப்படுபவர்கள், கோபப்படுபவர்கள், லட்சியவாதிகள், ஏமாற்றம், கவலை மன அழுத்தம் போன்ற காரணிகளுக்கு உட்படுபவர்களுக்கு வயிற்றில் அதிக அளவில் அமிலச்சுரப்பு (Secretion of acid) உண்டாகி குடற்புண் வரலாம்.
4. டீ, காபி, மசாலா உணவுகள், புகையிலை, போதைத்தரும் பானங்கள், ஸ்டீராய்டுகள் கலந்த மருந்துகள், Analgesics மருந்துகள் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக்கொள் வோருக்கும் குடற்புண் வரலாம்.
5. உணவினை நேரம் தவறி சாப்பிடுதல், அவசரமாக உணவருந்துதல் இவைகளாலும் குடற்புண் உண்டாகலாம்.
6. Helicobacter pylori - என்ற தொற்றினாலும் வாயு உபத்திரவம் உண்டாகி, Gastric Ulcer உண்டாகலாம்.
1. உணவினை ஒரே தடவையில் வயிறு புடைக்க உண்பதைவிட சிறுசிறு அளவில் அடிக்கடி தேவைக்கேற்ப உண்ண லாம்.
2. உணவினை நன்கு, மென்று, ருசித்து, பதட்டமின்றி சாப்பிடுங்கள்.
3. எளிதில் ஜீரணிக்கக்கூடிய பால், முட்டையின் வெள்ளைக்கரு, வெண்ணெய் போன்றவற்றைத் தேவையான அளவு உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
4. காபி, டீ, கோக், மது, புகை, போதைத் தரும் பானங்கள் கண்டிப்பாக தவிர்த்துவிடுங்கள்.
5. அதிக காரமான (Spices) உணவுகளை எண்ணெயில் பொறித்த (Oily Fried) உணவுகளையும் நீக்கிவிடுங்கள்.
6. அதிக நார்ச்சத்து உள்ள உணவுகள், முழு தானிய உணவுகளை கண்டிப்பாகத் தவிர்த்துவிடுங்கள்.
7. ஆஸ்பிரின் (Aspirin) போன்ற குடலைப் புண்ணாக்கும் நவீன மருந்துகளை (Modern Medicine) தவிர்த்துவிடுங்கள்.
8. கொழுப்பு நிறைந்த உணவுகள், இறைச்சி (Meat) கூடாது.
9. எண்ணெய் வறுவல் (Fried Food) ஆகாது.
10. எலுமிச்சை , ஆரஞ்சு, தக்காளி போன்ற சிட்ரிக் (Citric) அதிகம் உள்ள உணவுகள் கூடாது.
11. பூண்டு, இஞ்சி, காலிபிளவர், பூசணிக்காய், வெங்காயம் போன்றவற்றைச் சிறு அளவில் உபயோகிக்கலாம்.
12. மிளகாய், ஊறுகாய் உபயோகம் கூடாது.
13. டீ, காபி போன்றவற்றை அடிக்கடி ஸ்ட்ராங்காகக் குடிப்பது கூடாது.
மருத்துவ குறிப்புகள் : குடற்புண் (Ulcer) - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Ulcer - Medicine Tips in Tamil [ Medicine ]