181. அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறம்கூறான் என்றல் இனிது.
புறங்கூறாமை
181. அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறம்கூறான் என்றல் இனிது.
அறச்செயலைச் சொல்லாமல், பாவத்தைச் செய்தாலும்
மற்றவரைப் புறங்கூறாதிருப்பது
நன்மையாகும்.
182. அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறன்அ[சுப் பொய்த்து நகை.
ஒருவன் இல்லாத பொழுது
அவனை இழிவாகவும், உள்ள பொழுது இனிதாகவும் பேசி மகிழ்தல். அறத்தை அழித்துப்
பாவங்களைச் செய்வதை விடக் கேடானது.
183. புறம்கூறிப் பொய்த்துஉயிர் வாழ்தலின் சாதல்
அறம்கூறும் ஆக்கம் தரும்.
பிறர் இல்லாத பொழுது
இகழ்ந்தும் உள்ள போது பொய்யாக புகழ்ந்தும் பேசி உயிர் வாழ்வதை விட சாதல் அறப்பயனை
அளிக்கும்.
184. கண்நின்று கண்அறச் சொல்லினும் செல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்.
கண்ணெதிரே நின்று
கருணையின்றி பேசினாலும் அவர் இல்லாத போது இழிவாகப் பேசுதல் கூடாது.
185. அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும்
புன்மையால் காணப் படும்.
அறநெறியுடைவராலும் பிறர்
இல்லாத பொழுது இழிவாகப் பேசும் அற்பச்செயல், அவன் அறநெறியாளன் அல்லன் என்பதை அறிவிக்கும்.
186. பிறன்பழி கூறுவான் தன்பழியுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.
பிறரது பழியைக் கூறுபவன், தனது குறையையும் மற்றவர் அறிந்து பழிப்பர் என அறிய
வேண்டும்.
187. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.
பிறரோடு இனிமையாக பேசி
நட்புக் கொள்ளாதவர். புறங் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.
188. துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு?
நண்பன் அருகில் இல்லாத
சமயம் அவனது குறையைத் தூற்றுபவன், பகைவரைப் பற்றி என்னென்ன
கூறுவானோ?
180. அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை?
நேரில் இல்லாதவருடைய
குறைகளைப் பழித்துக் கூறுபவனின் உடலை நிலமகள் தருமத்தை எண்ணியே தாங்குகிறாள்.
190. ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு.
மற்றவரிடம் குறையைக் காண்பதைக் போல் தமது குறைகளையும் எண்ணிப் பார்த்தால் நிலை பெற்ற உயிர்களுக்குக் கேடுவராது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
திருக்குறள்: பொருளடக்கம் : புறங்கூறாமை - அதிகாரம்: 19 [ திருக்குறள் ] | Tirukkural: Table of Contents : Unpredictability - Authority: 19 in Tamil [ Tirukkural ]