191. பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்.
பயன்இல சொல்லாமை
191. பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
பலரும் வெறுக்கும்
பயனற்ற சொற்களைப் பேசுபவனை எல்லோரும் இகழ்வர்.
192. பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்லே
நட்டார்கண் செய்தலின் தீது.
மற்றவருக்குப் பயனற்ற
சொற்களைப் பலர் முன்னிலையில் பேசுதல் நன்மை இல்லாத கெடுதலை நண்பனுக்குச் சொல்வதை விட
கேடானது.
193. நயன்இலன் என்பது சொல்லும் பயன்இல
பாரித்து உரைக்கும் உரை.
பயனற்ற பொருளைப் பற்றி விரிவாகக் கூறுபவனை அறநெறியறியாதவன் என்று பழிப்பர்.
194. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.
பயனற்ற பண்பற்ற
சொற்களைப் பலர் முன்னிலையில் சொல்பவனை நல்லறிவு நாடாமல் நற்குணத்தில் இருந்து
நீக்கிவிடும்.
195. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல
நீர்மை உடையார் சொலின்.
நற்குணங்முடையார் பயனற்ற
சொற்களைப் பேசினால் அவரது பெருமை சிறப்புடன்
நீங்கும்.
196. பயன்இல்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி உனல்.
பயனற்ற சொற்களைப்
பேசுபவனை மகன் என்று கொள்ளாமல் பதர் என்று கொள்ள வேண்டும்.
197. நயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயன்இல சொல்லாமை நன்று.
அறிஞர் நன்மையற்ற
சொற்களைச் சொன்னாலும் ஏற்கும்: ஆனால் மற்றவருக்குப் பயனில்லாத சொற்களைச் சொல்லாதிருப்பது நல்லது.
198. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
அறிதற்கரிய பயன்களை ஆராயும்
அறிஞர் பயனற்ற சொற்களைப் பேசமாட்டார்கள்.
199. பொருள்தீர்ந்த
பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.
மயக்கம் நீங்கிய
குற்றமற்ற அறிவை உடையோர். பிறருக்கும் பயனில்லாதவற்றைப் பேசமாட்டார்கள்.
2௦௦. சொல்லுக சொல்லின் பயதுடைய சொல்கற்க
சொல்லின் பயனிலாச் சொல்.
சொற்களில் பயனுடையவற்றை
மட்டும் பேச வேண்டும். பயனற்ற சொற்களைப் பேசாதிருத்தல் நல்லது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
திருக்குறள்: பொருளடக்கம் : பயன்இல சொல்லாமை - அதிகாரம்: 20 [ திருக்குறள் ] | Tirukkural: Table of Contents : Uselessness - Authority: 20 in Tamil [ Tirukkural ]