குளத்தில் மலரும் வலம்புரிச் சங்கு!

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Valampuri conch blossoming in the pond! - Tips in Tamil

குளத்தில் மலரும் வலம்புரிச் சங்கு! | Valampuri conch blossoming in the pond!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற திருக்கழுக்குன்றம் ஸ்ரீ வேதகிரீஸ்வரர் திருக்கோயில்.

குளத்தில் மலரும் வலம்புரிச் சங்கு!

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற திருக்கழுக்குன்றம் ஸ்ரீ வேதகிரீஸ்வரர் திருக்கோயில். இங்கு பல புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. அதில் புகழ்பெற்ற தீர்த்தம்தான் சங்கு தீர்த்தம். மண்டபத்துடன் கூடிய பெரிய திருக்குளம் இது.

 

பொதுவாக வலம்புரிச் சங்கு கடலில்தான் கிடைக்கும். ஆனால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வலம்புரிச் சங்கு இந்த சங்கு தீர்த்தக் குளத்தில் தோன்றுகிறது.

 

ஆதி காலத்தில் மார்க்கண்டேய மகரிஷி இத்தலம் வந்தபோது ஈசனை வணங்க நினைத்தார். ஈசனை அபிஷேகம் செய்து பூஜிக்க பாத்திரம் இல்லையே என இக்குளக்கரை அருகே அமர்ந்து வருந்தினார்.

 

அப்போது பெரியதொரு வலம்புரிச் சங்கு இக்குளத்தில் இருந்து மேலெழுந்து வந்து அவரருகே காட்சியளித்தது. அதைக் கண்டு மனம் மகிழ்ந்த மார்க்கண்டேயர், அந்தச் சங்கைக் கொண்டு ஈசனை நீராட்டிப் பூஜித்தார். அன்று முதல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தீர்த்தத்தில் இருந்து வலம்புரிச் சங்கு தோன்றி மிதந்து வருவது வழக்கமாக உள்ளது.

 

இதுவரை சிறிதும் பெரிதுமான பல வலம்புரிச் சங்குகள் இந்தத் தீர்த்தத்தில் தோன்றியுள்ளன. புதிய சங்கு தோன்றியதும் பழைய சங்கைப் பாதுகாப்புடன் ஆபரண அறையில் வைத்து விடுகிறார்கள். இப்படியாகக் கிடைத்த பழைய சங்குகள் இங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : குளத்தில் மலரும் வலம்புரிச் சங்கு! - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Valampuri conch blossoming in the pond! - Tips in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்