வர்ம நிலைகளில் அடிபடும் போது, சிறு வெளிக்காயமும் இல்லாமல் சாதாரண வலி முதற்கொண்டு இறப்பு வரை ஏற்படும் அளவுக்கு அவை முக்கியத்துவம் பெறுகின்றன.
வர்ம மருத்துவம் ரகசியங்கள்
உடலில் உள்ள தசைகள், எலும்புகள்,
மூட்டுகள், ரத்தக் குழாய்கள் இவற்றின் இயக்கத்தைக்
கட்டுப்படுத்தும் நரம்புகளும், அவற்றின் நரம்பு முடிச்சுகளும்
ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கும் இடங்கள் உடல் முழுவதும் பரவியுள்ளன. அந்த
இடங்களில் சிறு அடிபட்டால் கூட, அப்பகுதி மட்டுமோ அல்லது உடல்
முழுவதுமோ இயக்கங்கள் பாதிக்கப்பட்டு நோய் நிலையை ஏற்படுத்துவதையே வர்மம் கொண்டுள்ளது'
என்கிறார்கள். அந்த இடங்களை ‘வர்ம நிலைகள்' என்றும்
அழைக்கிறார்கள்.
வர்ம நிலைகளில் அடிபடும் போது, சிறு
வெளிக்காயமும் இல்லாமல் சாதாரண வலி முதற்கொண்டு இறப்பு வரை ஏற்படும் அளவுக்கு அவை முக்கியத்துவம்
பெறுகின்றன.
வர்மம் என்பதற்கு ஜீவன், காலம், காற்று, சுவாசம், ஆவி, கலை, உயிர், ஒளி, பிராணன், யோகம், வாயு என பல பொருள்கள் உண்டு. மனித வாழ்வின் தொடக்கத்தில், காட்டு மிருகங்களிடம் இருந்தும், பிற மனிதர்களிடம் இருந்தும் தற்காத்துக் கொள்ள, பலதற்காப்புக் கலைகள் பின்பற்ற பட்டது.
வர்மங்களை, படு வர்மம், தொடு வர்மம், தட்டு வர்மம், தடவு மர்மம், நோக்கு வர்மம், நக்கு வர்மம், சர்வாங்க வர்மம், உள் வர்மம் என பல வகைகளாகப் பிரித்திருக்கிறார்கள்.
அவ்வாறு ஏற்பட்டால், அடிப்பட்ட இடத்தில் வியர்வை, சில்லிட்டுப் போதல்,
மூச்சுவிட இயலாமை போன்றவை ஏற்படலாம். இவ்வாறு அடிப்பட்டவர்களை அமர்த்தி, தட்டி,
தடவி, தூக்கி அவர்களைக் குணப்படுத்தும் முறையை
‘அடங்கல்' என்று சொல்வார்கள்.
வர்மம் என்பது உடலில் உள்ள காற்று ஓட்டம், இரத்த ஓட்டம்,வெப்ப
சூழ்நிலை ஓட்டம் இந்த மூன்றையும் ஒழுங்குமுறையில் சரி செய்து உடலை நோய்களில்
இருந்து மீட்பதே வர்மத்தின் கலையின் முக்கியமான ஒன்றாகும். வர்ம சிகிச்சை செய்வதற்கு
முன்னரே நகங்களை சுத்தம் செய்தல் அவசியம். மேலும் சாப்பிட்ட உடனே செய்தல் தவறான
ஒன்றாகும். மனிதன் சுவாசிக்கின்ற காற்றானது 108 வர்ம புள்ளிகளில் சென்று வெளியேறுகிறது. இதை சரியாக செய்ய தெரிந்தவர்கள்
மிகச் சிறந்த யோகிகள் ஆவார்கள். இந்த வர்மக் கலை மூலம் நாம் கல்லீரலை மிகவும்
வலுப்படுத்த நம்மால் முடியும்.
கழுத்துக்கு மேல் உள்ள 26 வர்மங்கள்
6. மேல் செவிக்குத்தி
7. கீழ் செவிக்குத்தி
10. நட்சத்திரக்காலம்
11. காம்பூரி வர்மம்
12. மூர்த்தி வர்மம்
13. அண்ணாமக்காலம்
14. வெட்டு வர்மம்
15. அமிர்த ஆந்தைக் காலம்
16. செம்மக் காலம்
17. திலர்த வர்மம்
18. மின்வெட்டிக் காலம்
20. பட்சி வர்மம்
21. நேம வர்மம்
22. பால வர்மம்
23. ரத்த வர்மம்
24. பச்சை வர்மம்
25. மங்காரி வர்மம்
26. அடைப்பு வர்மம்
27. முன் முடிச்சுக் காலம்
28. கண் கலங்கிக் காலம்
29. நல்லிருப்புக் காலம்
30. அமிர்தக்காலம்
31. ஓட்டு வர்மம்
33. முண்டிருக்கிகாலம்
34. உறக்கக் காலம்
35. கிளிமேகக் காலம்
இவ்வாறு, 'வர்மம் அடங்கல்'
செய்த பிறகு, சுக்கைத் தூளாக்கி காதிலும் மூக்கிலும்
லேசாக ஊதுவர். வர்ம அடங்கலுக்கு வேலிப்பருத்தி, வல்லாரை போன்ற
மூலிகைகளும் பயன் படுத்தப்படுகின்றன. பொதுவாக, வர்ம முறைகள் மருத்துவத்துக்குப்
பயன்படுத்தப் பட்டாலும், அதன் தீய விளைவுகளுக்கு அஞ்சி,
பிறருக்குச் சொல்லித் தருவதில், அதைக் கற்றுத்
தெரிந்தவர்கள் தயக்கம் காட்டியதால் படிப்படியாக மறைந்து இப்போது சில இடங்களில் பின்பற்றப் படுகிறது.
மனித உடல் அமைப்பும் அதில் உள்ள நாடிகள், நரம்புகள் முடிச்சுகள், உடலின்
ஒவ்வோர் இயக்கத்தையும் கட்டுப்படுத்தும் பகுதிகள் இவற்றைப் பற்றி ஆழ்ந்த அறிவுடைய
கழுத்துக்குக் கீழே, மூலாதாரம் (பிறப்புறுப்புக்குக் கீழ்) வரை, மார்புப்புறம் உள்ள 34 வர்மங்கள்
1. கதிர் வர்மம்
2. கதிர்காம வர்மம்
3. புத்திர வர்மம்
4. சத்தி வர்மம்
5. திவளை காலம்
6. ஏந்தி வர்மம்
7. அனுமான் வர்மம்
8. கொழுந்து வர்மம்
9. ஊறுமிக்காலம்
10. அடைப்பு வர்மம்
11. சிறிய அத்தி சுருக்கி வர்மம்
12. பெரிய அத்தி சுருக்கி வர்மம்
13. முன் சுருதிக்காலம்
14. முன் கழுந்தான் காலம்
15. பள்ளை வர்மம்
16. முன்னை வர்மம்
17. அன்ன காலம்
18. துடி வர்மம்
19. கொம்பு குத்திகாலம்
20. கூம்பு வர்மம்
21. மூர்த்தி வர்மம்
22. வாயுக் காலம்
23. நடுச்சுழிக்காலம்
24. சடப்பிற காலம்
25. கிளிப்பிடி வர்மம்
26. கை கெட்டிக்காலம்
27. எட்டெல்லு வர்மம்
28. கல்லிடைக் காலம்
29. வலம்புரி வர்மம்
30. இடம்புரி வர்மம்
31. வில்லுறுமிக் காலம்
32. நாங்கு குத்தி வர்மம்
33. அணி வர்மம்
34. அநியந்தன் வர்மம் (முன்னை வர்மத்துக்கு வர்ம தானம்
இல்லை)
தமிழ்நாட்டுடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்த வெளி நாட்டினர் நம் நாட்டின்
போர்க்கலையும் தற்காப்புக் கலையுமான வர்மம், களரிப்பயிற்று,
சிலம்பம், பிடி, மல்யுத்தம்
இவற்றுடன் நம் நாகரிகத்தையும் கற்பதில் ஆர்வம் கொண்டு இருந்தனர். அக்கலைகளுடன் பல்வேறு
மூலச்சுவடிகளையும் தங்களுடன் எடுத்துச் சென்றதாக வரலாறு கூறுகிறது. அத்தகைய மூலச்சுவடிகள்
ஜப்பான், ஜெர்மனி, சீன நாடுகளில் இருந்து
படியெடுக்கப்பட்டு மீண்டும் பதிப்பிக்கப்பட்டு வருகின்றன.
வர்மம் தொடர்பான நூல்களும் மூலச்சுவடிகளும் எண்ணற்ற வையாக இருப்பினும், தற்காலத்தில் வர்மம் பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு
- 1. வர்ம சூத்திரம் ; 2. வர்ம கண்ணாடி
; 3. வர்ம பீரங்கி; 4. வர்ம அளவை நூல் ;
5. வர்ம கண்டி ; 6. வர்ம சூட்சம்; 7. படுவர்ம திரட்டு; 8. தொடுவர்ம திரட்டு போன்ற நூல்கள்
பெரிதும் உதவி புரிகின்றன.
மேற்கூறிய அத்தனை நூல்களின் மூலச்சுவடிகளின் ஆசிரியர் களும், படு வர்மம் பன்னிரண்டு, தொடுவர்மம்
தொண்ணூற்றாறு என்பதில் ஒரே கருத்தைக் கொண்டுள்ளனர்.
வர்ம நூல்கள், வர்மங்களை விளக்கும்
போது, உடலையும் உயிரையும் இருவகை அமைப்பாகக் கொள்கின்றன.
கழுத்துக்கு மேலே, பின்புறம் உள்ள 11 வர்மங்கள்
1. கொண்டைக் கொள்ளி வர்மம்
2. சீறுங் கொள்ளி வர்மம்
3. பிடரி வர்மம்
4. சுருதி வர்மம்
5. புகழிசை வர்மம்
8. முடிச்சு வர்மம்
9. பொய்கை காலம்
19. மந்திரக்காலம்
32. உதிர காலம்
35. கரக்கூட்டு வர்மம்
36. சிமை வர்மம்.
கழுத்துக்குக் கீழே, மூலாதாரம் (பிறப்புறுப்புக்குக் கீழ்) வரை. முதுகுப்புறம்
உள்ள 16 வர்மங்கள்
1. அரளி வர்மம்
2. மென்மை வர்மம்
3. விநோத வர்மம்
4. அல்லி வர்மம்
5. உள்ளெல்லு வர்மம்
6. மின்னெல்லு வர்மம்
7. அரசு வர்மம்
8. அழல்வர்மம்
9. உள்வர்மம்
10. பூணூல் காலம்
11. தட்டு வர்மம்
12. தப்பிற வர்மம்
13. மலப்பிற வர்மம்
14. தும்மிக் காலம்
15. பிணக்கு வர்மம்
16. எள்முடிச்சு வர்மம்
கையின் முன்பக்கம் உள்ள 10 வர்மங்கள்
1. ஆந்தை வர்மம்
2. புஜ வர்மம்
3. குதிரை வர்மம்
4. மேக வர்மம்
5. தீத வர்மம்
6. சுண்டோதரி வர்மம்
7. மணிபந்த வர்மம்
8. பட்சணி வர்மம்
9. தட்சணைக் காலம்
10. சுட்டு வர்மம்
காலில் உள்ள 11 வர்மங்கள்
1. கால் தட்சணைக் காலம்
2. கால் சுண்டோதரி வர்மம்
3. சுட்டு வர்மம்
4. கால் மணி பந்த வர்மம்
5. பட்சணி வர்மம்
6. மேக வர்மம்
7. கால் திலர்த வர்மம்
8. ஆந்தை வர்மம் (கில் சில்லி வர்மம்)
11. சில்லி வர்மம்.
உடற்கலை: மெய், வாய், கண், மூக்கு, செவி ; இடகலை: இடது பக்க நாடி ; பிங்கலை : வலது பக்க நாடி ;
சுழுமுனை: நடு நாடி
உயிர்க் கலை: மலம், சிறுநீர்,
சுக்கிலம் (விந்து) கருவிழி (பார்வை) இவற்றைக் கட்டுப்படுத்தும் பிரதான
நரம்புகள்.
மேற்கூறிய உடற்கலையில் உள்ள எட்டு அமைப்புகளும், உயிர்க் கலையில் உள்ள நான்கு அமைப்புகளும் மொத்தமாகப்
பன்னிரண்டும் சேர்ந்து படுவர்மம் என்றும், அவற்றின் வழித் தோன்றல்களாக
ஒவ்வொரு படுவர்மமும் ஆறாகப் பகுத்து தொடுவர்மம் உண்டாகிறது என்றும் சொல்வார்கள்.
படு என்ற தமிழ்ச்சொல், அதி
அல்லது அதிக என்றும் பொருள் படும். (படு வேகம் - அதிக வேகம்). அதிக ஆபத்துகளை உண் டாக்கும்
உயிர்நிலைகள் படு வர்மங்கள் எனப்பட்டன. இவற்றில் அடிபட்டால் உயிரிழப்போ, உணர்வு இழப்போ, கருவிழி மேல் நோக்குதலோ உண்டாகலாம். அவ்வாறு
கருவிழி மேல் நோக்கி னாலும், மலம், மூத்திரம்
போகாமல் அடைத்தல், விந்து வெளி யேறுதல் போன்றவை அசாத்திய அறிகுறிகளாகும்.
ஒவ்வொரு வர்மத்துக்கும் ஒரு குறிப்பிட்ட இளக்கும் காலம் உண்டு. அதற்குள், அடங்கல் என்னும் இளக்கும் முறையைச் (முதல் உதவி) செய்ய வேண்டும்.
சித்தா மருத்துவம் : வர்ம மருத்துவம் ரகசியங்கள் - சித்தா மருத்துவம் [ ஆரோக்கியம் ] | Siddha medicine : Verma medicine secrets - Siddha medicine in Tamil [ Health ]