விநாயகர் அகவல்

குறிப்புகள்

[ விநாயகர்: வரலாறு ]

Vinayaka Agaval - Tips in Tamil

விநாயகர் அகவல்  | Vinayaka Agaval

ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி விளக்கம்: ஒன்பது வாயில் – (இரண்டு கண்கள், இரண்டு காதுகள், நாசியின் இரு துளைகள், வாய், எருவாய், கருவாய் – என்ற ஒன்பது உறுப்புகளின் தன்மைகளையும்

🌹விநாயகர் அகவல் 

 

ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

 🌹விளக்கம்:

🔹ஒன்பது வாயில் – (இரண்டு கண்கள், இரண்டு காதுகள், நாசியின் இரு துளைகள், வாய், எருவாய், கருவாய் – என்ற  ஒன்பது 

உறுப்புகளின் தன்மைகளையும்

 

🔹ஐம்புலக் கதவை – ஐம்பொறிகளான கதவுகளையும்

 

🔹ஒரு மந்திரத்தால் – ஒப்பற்ற ஓம்கார மந்திரத்தால்

 

🔹அடைப்பதும் காட்டி – புருஷனான ஆன்மா  வெளியே போகாதபடி உள்ளேயே அடைத்து வைத்திருக்கும் முறையையும் காட்டி

 

🌹ஆன்மீக விளக்கம்:

 

உடலை நீடித்து நிறுத்தி வைத்திருக்க முடியாது. தோற்றம் உண்டேல் மறைவு உண்டு. ஒன்பது வாயில் உள்ளதல்லவா உடலுக்கு? அதன் வழியே ஒருநாள் உயிர் வெளியே ஓடிவிடும்.

 

ஐம்புலக் கதவுகளை அடிக்கடி திறந்தால், ஒன்பது வாயிலிலும் போக்குவரத்துக்கு இடம் பிறக்கிறது.  அதனால் உயிர் போகும் பாதை நன்றாக செப்பனிடப்படுகிறது. உயிர் பிரிவதற்கு  மிகவும் சுலபமாகி விடுகிறது (ஐம்புலக் கதவை அடிக்கடி திறப்பதால்).  அப்படி ஆகாதபடி, உறுதியாக உரைத்த முறை இது.  எது? ஓம்கார மந்திர சாதனையால் ஐம்புலக் கதவுகளை அடைத்து ஒன்பது வாயிலையும் கட்டிவைப்பது.

 

குறையே இல்லாமல் நிறையே உடையவன் இறைவன்.  குறைகள் நிறைந்த அறிவுடையது ஜீவன். அது ஜீவதோஷம். அடியோடு குறைகளை அகற்றுதல் வேண்டும்.  அதற்கென்றே கரசரணாதி அவயவங்களுடன் பிறவி எடுக்கிறது ஜீவன்.  தோஷங்களை நிவர்த்திப்பதற்கு கிடைத்த வாய்ப்பே இப்பிறவி. 

 

புறவுலக போகத்தை துய்ப்பதற்கு ஐம்புலக் கதவுகள் என்றும் திறந்தே இருக்கிறது.  ஆன்ம உணர்வு புறம் போகாதபடி அக்கதவுகளை அடைத்தது விடுவதே அருமையான வழி.  ஒன்பது வாயில் உடல் எப்பொழுதும் புறவுலக போகத்தையே நாடிச் செல்வதற்கு காரணம், இந்த ஐம்புலக் கதவுகள் எப்பொழுதும் திறந்து இருப்பதே!

 

காமத்திற்கு அடிமையான காமியோ, ப்ரஹ் மசர்யம் நஷ்டமாவதால்ஓஜஸ்ஸை இழந்து முகப் பொலிவை இழந்து பரிதாபமாக நிற்கிறான். ஆனால் அறிவுடையவர்களுக் கோ, நல்ல புலடக்கத்தால், ப்ரஹ்மசர்ய அனுஷ்டானத்தால், சிவசக்தி கனல் போன்று ஓஜஸ் மேலேறி, சுஷூம்ணா வழியாக அந்தக் கனல் (குண்டலி ஷக்தி) மகத்தான அமுதமாக மாறும். 

 

இதற்கென்றே அவர்கள் ஓரெழுத்து மந்திரத்தை உருவேற்றுவர். பிராணாயாமம்  செய்வர். இதனால் உலக போகத்தை துய்க்க துடிக்கும் மனம் ஒடுங்கும்.  ஒன்பது வாயிலும், ஐம்புலக் கதவுகளும், தாமே அடைபடும்.  

 

இந்த உயர் நிலையை எய்தினவர்கள் சரீரத்தில் ஞான ஒளி விளங்கும்.  அருள் அறிவு சுரந்து கருணாரஸம் வெளிப்படும். சிவபோகம் சித்திக்கும். 

 

🌹விநாயகா போற்றி... விக்னேஸ்வரா போற்றி...

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

விநாயகர்: வரலாறு : விநாயகர் அகவல் - குறிப்புகள் [ ] | Ganesha: History : Vinayaka Agaval - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்