உணவுக்குப் பின்னரான நடைப்பயிற்சி மற்றும் அதன் நன்மைகள்

செயல்பாட்டு வழிகாட்டிகள், மனிதர்கள், உங்கள் தன்னம்பிக்கையை அதிகப்படுத்திக் கொள்ள சில எளிதான் வழிகள்,

[ வாழ்க்கை பயணம் ]

Walking after meals and its benefits - Activity Guides, Humans, Some Easy Ways To Boost Your Confidence, in Tamil

உணவுக்குப் பின்னரான நடைப்பயிற்சி மற்றும் அதன் நன்மைகள் | Walking after meals and its benefits

உணவுக்குப் பின்னரான நடைப்பயிற்சி என்பது ஒரு எளிய மற்றும் நல்ல விளைவுகளை தரும் செயல்முறை ஆகும், குறிப்பாக இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. உணவுக்குப் பின்னர் 15 முதல் 30 நிமிடங்கள் நடக்கும் போது, உடலில் உள்ள குளுக்கோஸ் அளவு சீராக உடைந்து, இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயர்வதை தடுக்கிறது.

உணவுக்குப் பின்னரான நடைப்பயிற்சி மற்றும் அதன் நன்மைகள்

 

உணவுக்குப் பின்னரான நடைப்பயிற்சி என்பது ஒரு எளிய மற்றும் நல்ல விளைவுகளை தரும் செயல்முறை ஆகும், குறிப்பாக இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. உணவுக்குப் பின்னர் 15 முதல் 30 நிமிடங்கள் நடக்கும் போது, உடலில் உள்ள குளுக்கோஸ் அளவு சீராக உடைந்து, இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயர்வதை தடுக்கிறது.

 

உணவுக்குப்  பின்னரான நடைப்பயிற்சியின் நன்மைகள்:

 

1. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல்: உணவுக்குப் பின்னர் நடந்தால், உடல் குளுக்கோஸை எரிப்பதற்காக அதிக இன்சுலின் சுரக்கும். இது இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென்று உயர்வதை தடுக்க உதவுகிறது.

 

2. மெலிந்த உடல் நிலையை பேணுதல்: தினசரி நடைப்பயிற்சி கலோரிகளை எரிக்க உதவும், இதனால் உடல் பருமன் மற்றும் உடல் நிலைக்கு ஏற்படும் பிற சிக்கல்களை தவிர்க்க முடியும்.

 

3. செரிமானத்தை மேம்படுத்துதல்: நடைப்பயிற்சி செரிமான சுரப்பிகளை தூண்டுவதால், உணவு செரிக்கப்படுவதில் மேம்பட்ட விளைவுகளை காண முடியும்.

 

4. மன அழுத்தத்தை குறைத்தல்: நடைப்பயிற்சி மன அழுத்தத்தை குறைப்பதில் மிகவும் பயனுள்ளது. இது மனதை தெளிவாக்கி, உடலை மீளமைப்பதற்கு உதவுகிறது.

 

5. இரவில் நன்றாக உறங்குவதற்கு உதவுதல்: உணவுக்குப் பின்னர் நடக்கும் பழக்கம் இரவில் ஆழ்ந்த உறக்கத்தை ஊக்குவிக்கிறது. இது உடல் சோர்வுகளை போக்கி, உடல் நிலையை மேம்படுத்துகிறது.

 

செயல்பாட்டு வழிகாட்டிகள்:

 

- உணவுக்குப் பின்னர் குறைந்தது 10 முதல் 15 நிமிடங்கள் நடந்து வருவது நல்லது.

 

- மிதமான வேகத்தில் நடக்கலாம், இது உடலுக்கு மிகுந்த பாரத்தைத் தராது.

 

- உணவுக்குப் பின்னரான நடைப்பயிற்சியை தினசரி நிகழ்வாக மாற்றுவது நல்லது.

 

இவ்வாறு உணவுக்குப் பின்னரான நடைப்பயிற்சி உடல் நலத்தை மேம்படுத்தவும், சர்க்கரை நோய் மேலாண்மையை மேம்படுத்தவும் உதவுகிறது. சுகாதாரமான வாழ்வு முறைக்கு இது ஒரு சிறந்த துவக்கமாக அமையும்

 

உங்கள் தன்னம்பிக்கையை அதிகப்படுத்திக் கொள்ள சில எளிதான் வழிகள்:

 

 

1. உங்களிடம் நீங்களே தனிமையில் பேசுங்கள்... நீ சாதிக்க பிறந்தவன் என.

 

2. நேர்த்தியாக ஆடை அணியுங்கள். விலை குறைந்ததோ, அதிகமானதோ கவலை இல்லை... இருப்பதை நேர்த்தியாக அணியுங்கள்.

 

3. எதிர்மறையான பயங்களை தவிர்த்து, நேர்மறையாக சிந்திக்க பழகுங்கள்.

 

4. வாழ்க்கை விளையாட்டு என்பதை மனதில் நிறுத்தி, எதையும் எதிர்கொள்ளும் வலிமையை மனதிற்கு கொடுங்கள்.

 

5. நிமிர்ந்து நிற்கவும், நடக்கவும், அமரவும் பழகுங்கள்.. தன்னம்பிக்கை தானே அதிகரிக்கும்.

 

6. உள்ளம் எப்படியும் இருக்கட்டும்... முகத்தில் மட்டும் சிறு புன்னைகையுடன் இருக்க பழக்குங்கள்.

 

7. சின்ன இலக்குகளை தினமும் நிர்ணயியுங்கள்.. அதை சாதித்து விட்டு உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்..

 

8. இவை எல்லாவையும் விட மிக முக்கியமாக.. உங்களுக்கு நடந்த நல்லவைகளை அடிக்கடி பட்டியலிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்..

நிச்சயம் தன்னம்பிக்கை வளரும்

சிறிய உதவியோ பெரிய உதவியோ மனமுவந்து செய்யவேண்டும். அதற்கு மிகப்பெரிய பலன் உண்டு, உதவுகின்ற உள்ளங்கள் இருக்கின்ற இடங்கள் எவையோ அவையே உன்னதமான பூமி.

அன்று சாதனை படைக்க நினைத்த போது வாழ்க்கையில் பல சோதனை வந்துதது. ஆனால், இன்றோ சோதனைகளில் இருந்து மீள்வதே மிகப் பெரிய சாதனையாக இருக்கிறது.

பாராட்டு பெற முயற்சி செய்யாதீர்கள்..!

 

திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள்..!

 

பாராட்டு தானாகவே உங்கள் காலடியில் விழும்..!

 

யோசித்துப் பார்த்தால்,

மனிதனுக்கு கவலைப்படுவதற்க்கு ஏதாவது  ஒன்று இருந்து கொண்டே தான் இருக்கிறது

 

அல்லது

 

ஏதாவது ஒன்று இருக்காதா

என நாமே தேடி யோசித்துக்கொண்டே இருக்கிறோம்..!!

உங்களின் ஒவ்வொரு முயற்சிகளும் உங்களுக்கு வெற்றியை தேடித் தராது. ஆனால் வாழ்க்கையில்  நீங்கள் அடைய விரும்பும் இடத்திற்கு ஒவ்வொரு படியாய் உங்களை ஏற்றி விடும்.

நிகழ் காலத்தை நீங்கள் சரியாக பயன் படுத்திக் கொள்ளுங்கள். எதிர் காலம் உங்களுக்காக காத்திருக்கும்.

 

உங்கள் வாழ்வில் வெற்றியிலும் தோல்வியிலும் இன்பத்திலும் துன்பத்திலும் இந்த ஒற்றை வாக்கியத்தை மறவாதிருங்கள். இதுவும் கடந்து போகும்.

எதையும் எதிர் கொள்ளலாம் என்ற மன நிலை மட்டுமே நீங்கள் இழந்த அத்தனையையும் உங்களுக்கு மீட்டு தரும்.

தன்னம்பிக்கைக்கான விதையை உங்கள் குழந்தைகளுக்குள் விதையுங்கள். எதிர் காலத்தில் எல்லாவற்றையும் ஏற்று கொள்ளும் சித்தனை செயல் திறன் மிக்க விருட்சாங்களாய் அவர்கள் வளருவார்கள்.

 

மனிதர்கள்

மனிதர்கள் எதை, வேகமாக விரும்பி ஏற்கிறார்களோ, அதே வேகத்தோடு அதை வீசியும் எறிகிறார்கள்.

 

நாம் ஒருவருக்காக

99 விஷயங்களைச் செய்தாலும்,

நாம் செய்யாத ஒரே ஒரு விஷயத்தை மட்டும் அவர்கள் நினைவில் வைத்திருப்பார்கள்.

 

பெரும்பாலும்

புரியவைப்பதற்காக போடப்படும் சண்டைகள் பிரிவில் தான் முடிகிறது.

 

அனைத்தையும்

கடந்து செல்வதை விட அங்கங்கே மறந்து செல்லுங்கள். உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்கும்.

 

ஒரு செயலைச் செய்வதற்கான ஆர்வம் மட்டும் இருந்தால்

போதாது, அதைச் செய்து முடிப்பதற்கான அக்கறையும் வேண்டும்.

 

 சிறகுகள் நனைந்தால் பறக்க முடியாதுதான்...

ஆனால் எந்த ஒரு பறவையும் வானத்திடம் " மழையே பெய்யாதே"என்று கெஞ்சுவது இல்லை...

வாழ்க்கையே ஒரு போராட்டம்தான்...

போராடுவோம் வெற்றி பெறுவோம்.

 

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுபவர்

அடுத்த பிறவியில் ஈனப் பிறவியாகப் பிறப்பார்.

 

அடுத்தவர்களை

ஏமாற்றிப்‌ பெறும் எந்த ஒரு பொருளும் அவ்வளவு எளிதில் நிலைப்பதில்லை. அது பாசமாக இருந்தாலும் சரி,

பணமாக இருந்தாலும் சரி.

 

முகத்திற்கு முன்னால்

பாசத்தைக் காட்டி,

முதுகுக்குப் பின்னால் வேஷத்தை காட்டும் உலகம் இது. யாரையும் நம்பி பயணம் செய்யாதீர்கள்.

 

நீங்கள் யாரை வேண்டுமென்றாலும் ஏமாற்றி விடலாம்

ஆனால் மனச்சாட்சியை ஒருபோதும் ஏமாற்ற முடியாது.

அது குத்திக்கொண்டிருக்கும்

வலிக்கு நீங்கள் எங்கு சுற்றினாலும் மருந்து கிடைக்காது.

 

உறுதியான மனிதருக்கு

தோல்வி என எதுவும் இல்லை.

போகும் பாதையில்

கற்றுக்கொள்ள பாடங்கள்

மட்டுமே உள்ளன.

 

எத்தனை பேர் இருந்தாலும், தன் வேலையைத் தானே செய்பவருக்கு உடல் நலமும் மன நலமும் நன்றாக இருக்கிறது.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம் 

வாழ்க்கை பயணம் : உணவுக்குப் பின்னரான நடைப்பயிற்சி மற்றும் அதன் நன்மைகள் - செயல்பாட்டு வழிகாட்டிகள், மனிதர்கள், உங்கள் தன்னம்பிக்கையை அதிகப்படுத்திக் கொள்ள சில எளிதான் வழிகள், [ ] | Life journey : Walking after meals and its benefits - Activity Guides, Humans, Some Easy Ways To Boost Your Confidence, in Tamil [ ]