பண நிறைவான வாழ்க்கை வேண்டுமா?
முழுமையான செழிப்பை அடைதல்
💰💰💰💰💰
"உங்களால் முடிந்த அளவு சம்பாதியுங்கள், உங்களால் முடிந்த அளவு சேமியுங்கள், உங்களால் முடிந்த அளவு முதலீடு செய்யுங்கள், உங்களால் முடிந்த அளவு கொடுங்கள்."
-மறைதிரு ஜான் வெல்லெஸ்லி
எவரொருவராலும் முழுமையான செழிப்பை அடைய முடியும். பொருளாதாரரீதியாக உங்களால் அனைத்தையும் பெற முடியும். கடந்தகாலத்தில் நீங்கள் பெற்றிருந்ததைவிட அதிகமான வெற்றியையும், மகிழ்ச்சியையும், பணத்தையும் உங்களால் பெற முடியும். இவை அனைத்தையும் அடைவதற்கு உங்களுக்குத் தேவை சரியான மனநிலை மட்டுமே. ஒரு குறிப்பிட்ட மனநிலைதான் செழிப்பை உருவாக்குகிறது.
இது மிகவும் எளிமையான கோட்பாடு: எப்போதும் செழிப்பைக் குறித்தே நினைத்துக் கொண்டிருங்கள்.
தொடர்ந்து அப்படியே இருந்து வாருங்கள்
உங்களுடைய செழிப்பிற்கான இலக்குகளை எழுதிக் கொண்டு, அவற்றை மனக்காட்சிப்படுத்தி, தினமும் சுயபிரகடனம் செய்யுங்கள். கூடவே, பொருத்தமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள் அப்போது நீங்கள் அவற்றை நிச்சயமாக அடைவீர்கள்.
*செழிப்பு சுதந்திரத்தை உருவாக்குகிறது*
குறைவான பணத்தைவிட அதிகமான பணத்தைப் பெற்றிருப்பது சிறந்தது. பணத்தை மெதுவாகச் சேர்ப்பதற்குப் பதிலாக விரைவாகச் சேர்ப்பது நல்லது. பணம் நம் வாழ்க்கையில் நாம் தேர்ந்தெடுப்பதற்கான பல விஷயங்களைக் கொடுக்கிறது அது பல புதிய வகையான சுதந்திரத்தை உருவாக்குகிறது, ஏழ்மைக்கு அடிமையாகி இருப்பதிலிருந்து நம்மை விடுவிக்கிறது
யாரும் இவற்றை மறுக்க மாட்டார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம். இப்போது, நாம் அனைவரும் கேட்கும் கேள்விகள் இவைதான்: "செல்வச் செழிப்பை நாம் எவ்வாறு பெறுவது?" அது எங்கிருந்து துவங்குகிறது?" "அதன் மூலத்தை நாம் எவ்வாறு கண்டறிவது?" நாம் செல்வச்செழிப்புடன் இருக்க வேண்டும் என்று விரும்பினால், ஏதோ ஓர் இடத்தில் இருந்து துவங்க வேண்டும் என்பது நமக்குத் தெரியும் ஆனால் எங்கிருந்து துவங்குவது?
இதற்கான விடை எளிது. செழிப்பு ஒரு யோசனையில் இருந்து துவங்குகிறது. செழிப்புக் குறித்த யோசனை உங்களுக்குச் சாத்தியம் என்று நம்புங்கள் அதைப் பெறுவதற்கு உங்களை நீங்களே ஊக்குவித்துக் கொள்ளுங்கள். அந்த யோசனை உங்களிடம் வரும்போது அதை ஏற்றுக் கொள்ளுங்கள். செழிப்புக் குறித்த யோசனை உங்களுக்கு வரும் என்ற நேர்மறையான மனப்போக்குடன் இருக்கும்போது, நீங்கள் உங்கள் எண்ணத்திற்கு வடிவம் கொடுத்து உயிரூட்டுகிறீர்கள்.
இதில் ஒரு முக்கியமான விஷயம் உங்கள் யோசனை நேர்மறையானதாக இருக்க வேண்டும். என்பது நோமறையான யோசனை என்றால் என்ன?
1971ம் ஆண்டு, மார்க் முதன்முதலில் சொந்தமாக ஒரு தொழிலைத் துவங்கியபோது. கொலராடோ மாநிலத்தின் போல்டர் நகரில் தன் நண்பர் மோ சீகலுடன் இருந்தார். அவர்கள் இருவரும் உற்சாகமாகவும் துடிப்பாகவும் இருந்தனர் தினமும் மாலையில் அவர்கள் சூரிய அஸ்தமனத்தைக் காணச் சென்றனர்.
மோ எப்போதும் விதைகளையும் மூலிகைகளையும் சேகரிப்பார். "என்றேனும் ஒருநாள் லிப்டனுக்குப் போட்டியாக நான் ஒரு பெரிய தேயிலை நிறுவனத்தின் உரிமையாளராக ஆவேன்," என்று அவர் அடிக்கடிக் கூறி வந்தார். "ஆமாம், நீ நிச்சயமாக அவ்வாறு ஆவாய் என்று எல்லோரும் கூறினர்.
அவர் தனது தேயிலைகளை ஆரோக்கிய உணவுக் கடைகளுக்கு விற்கத் துவங்கினார். பிறகு சற்று விரிவுபடுத்தி, அமெரிக்காவின் ஒவ்வொரு சங்கிலித் தொடர்க் கடைகளுக்கும் அவற்றை அவர் விற்றுக் கொண்டிருந்தார். இன்று அவரது நிறுவனமான 'செலஸ்டியல் சீசனிங்ஸ்', கொலராடோவில் ஒரு மாபெரும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. அது நூற்றுக்கணக்கானோரை வேலையில் அமர்த்தியுள்ளது.
மோ தன் விற்பனையைத் துவங்கியபோது அவரிடம் ஏராளமான பணம் இருந்ததா? ஒரு பெரிய தொழிற்சாலையும் சேமிப்புக் கிடங்கும் அவரிடம் இருந்தனவா? அவருக்குப் பின்னால் ஒரு பெருநிறுவனம் இருந்ததா? அவர் எதிர்மறையாகச் சிந்தித்தாரா?
இந்த அத்தனைக் கேள்விகளுக்குமான விடை 'இல்லை' என்பதுதான். அவர் வெறுமனே ஒரு யோசனையோடும், துணிச்சலோடும் செழிப்பிற்கான பாதையில் அடியெடுத்து வைத்தார்.
நீங்கள் ஒரு யோசனையுடன் தொடங்குங்கள். அதைப் பேணிப் பராமரியுங்கள். ஒரு சிறு குழந்தையைக் கொஞ்சுவதைப்போல் அதை கொண்டாடுங்கள். அப்போது அது வளரும் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான மற்ற யோசனைகள் உங்கள் மனத்திற்குள் பளிச்சிடும். பிறகு அதை நீங்கள் செயல்படுத்துங்கள்
*யோசனைப் புத்தகம்*
எல்லாமே ஒரு யோசனையில் இருந்துதான் துவங்குகின்றன என்று நேர்மறைச் சிந்தனையை ஊக்குவித்த மாபெரும் பேச்சாளர்களில் ஒருவரான, உற்சாகத்தின் தூதுவர் என்று அழைக்கப்பட்ட, அமெரிக்காவைச் சேர்ந்த இரா ஹேய்ஸ் கூறினார். எடுத்துக்காட்டாக, போலராய்டு கேமரா, கண்ணாடி பாத்திரம் கழுவும் இயந்திரம், பால்பாயின்ட் பேனாக்கள், கேரம், சதுரங்கம் போன்ற அனைத்துமே ஒருவரின் யோசனையில் இருந்து உருவானவைதான். யோசனைகளை நடைமுறைப்படுத்துவதால் விளையும் நன்மைகளுக்கு முடிவே இல்லை என்று அவர் கூறினார்.
வாராந்திர யோசனைகளுக்கென்று ஒரு புத்தகத்தை வைத்துக் கொள்ளுமாறு ஹேய்ஸ் பரிந்துரைக்கிறார். அவர் தனது யோசனைப் புத்தகத்தில், ஒரு வருடத்திற்கு ஐம்பத்தியிரண்டு வாரங்கள் என்று குறித்து வைத்துக் கொண்டு, ஒவ்வொரு வாரமும் தனக்குத் தோன்றும் ஒரு யோசனையை அந்தந்த வாரத்தின் கீழ் அதில் எழுதிக் கொள்கிறார். கடந்த முப்பது வருடங்களாக வெற்றியை ஊக்குவிக்கும் ஒரு புதிய படைப்பு யோசனையை ஒவ்வொரு வாரமும் தனக்குத் தருவதற்கு அவர் தன் மனத்தைப் பயிற்றுவித்து வந்துள்ளார். இது அவரை ஒரு பிரபலமான, பேச்சாளராக்கியது. அவரது பேச்சை ஒருமுறை கேட்டுவிட்டால், பின்பு அதை யாராலும் மறக்கவே முடியாது.
இது ஒரு சிறந்த யோசனை என்று நாங்கள் நினைக்கிறோம். நாம் எல்லோரும் ஒரு யோசனைப் புத்தகத்தைக் கையோடு எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறோம். யோசனைகள் நம்முடன் எப்போதும் கண்ணாமூச்சி விளையாடும். ஒரு கணம் அவை நம் மனத்தை ஆக்கிரமித்திருக்கும், மறுகணம் மாயமாய் மறைந்துவிடும். "நீங்கள் சிந்திக்கும்போதே எழுதிக் கொள்ளுங்கள்” என்பது விதியாக இருக்க வேண்டும். ஏன் என்றால் பல யோசனைகளை நாம் அமைதியான நேரத்தில் தான் நினைக்குறோம். மேலும் அனைவருக்கும் அழகான வாழ்க்கை அமைவதில்லை. மாற்றாக அமைந்த வாழ்க்கையை அழகாக மாற்றுவதற்கே போராடுகிறோம். அனைவருக்கும் எல்லா வளங்களும் பெற தமிழர் நலத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.