வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான எல்லா வசதிகளும் வாய்ப்புகளும் மனசுக்குள் நிறைந்துள்ளன. நீங்கள் மனதில் உள்ள சிந்தனைகளை வெளிக் கொண்டு வந்து, முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்... அமைதி கிடைக்கும்.
வாழ்க்கையில்
வெற்றியுடன் கூடிய அமைதி வேண்டுமா?
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான எல்லா வசதிகளும்
வாய்ப்புகளும் மனசுக்குள் நிறைந்துள்ளன.
நீங்கள் மனதில் உள்ள சிந்தனைகளை வெளிக் கொண்டு
வந்து, முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்...
அமைதி கிடைக்கும்.
༺🌷༻
ஓரிடத்தில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது பருந்து ஒன்று சட்டென்று வந்து ஒரு மீனைக் கொத்தி எடுத்துச் சென்றது. மீனைக்
கண்டதும் நூற்றுக்கணக்கான காகங்கள் பருந்தைத் துரத்தலாயின; கா கா என்று கத்தியவாறு அதைச் சூழ்ந்து கொண்டு
அமளிதுமளி செய்தன.
༺🌷༻
பருந்து எந்தத் திசையில் பறந்தாலும் அந்தத் திசையில்
காகங்கள் துரத்தின. பருந்து தெற்கில் பறந்தால் காகங்களும் தெற்கே சென்றன, வடக்கில் பறந்தால் வடக்கே சென்றன. பருந்தும் கிழக்கு, மேற்கு என்று எல்லா மகரயாழ் திசைகளிலும் பறந்து
பார்த்தது. கடைசியில் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தபோது அதன் அலகிலிருந்து மீன்
கீழே விழுந்தது. அவ்வளவுதான் காகங்கள் மீன் விழுந்த இடத்தை நோக்கிப் பாய்ந்தன; பருந்தை விட்டுவிட்டன.
༺🌷༻
பருந்து கவலையுற்று ஒருமரக்கிளையில் போய் உட்கார்ந்து
கொண்டது. பிறகு தனக்குள், 'இந்த மீன்
தான் இவ்வளவு குழப்பத்திற்கும் காரணம். இப்போது மீன் என்னிடம் இல்லை. அதனால் குழப்பங்களும்
இல்லை. நான் நிம்மதியாக இருக்கிறேன்!' என்று எண்ணிக் கொண்டது.
༺🌷༻
🌿எதுவரை நம்மிடம் மீன் இருக்குமோ அதாவது ஆசைகள்
இருக்குமோ அதுவரை உலக விவகாரங்கள் இருக்கும்; அவற்றால் உண்டாகக்கூடிய துன்பம், கவலை, அமைதியின்மை ஆகியவையும் கூடவே இருக்கும். ஆசைகளை
விட்டால், உடனேயே துன்பங்கள்
நம்மிலிருந்து அகன்று விடுகின்றன, அமைதி கிடைக்கிறது.
♻மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று, தேவையில்லாமல் நாமே நமக்குள் நினைத்துக் கொள்ளும்
ஒரு கண்ணோட்டம் மிகவும் தவறானது.
♻நம்மைப் பற்றிய நம் கண்ணோட்டத்தை விட, மற்றவர்கள் கண்ணோட்டத்திற்கு, நாம் பெரிதாக மதிப்பளிக்க ஆரம்பிக்கும் போதே,
♻நாம் மனதளவில் நம்மைத் தாழ்த்திக் கொள்ளத் துவங்கி
விடுகின்றோம்.. நாம் செய்யும் செயல்களையும்,அதன் விளைவுகளையும் மறந்து, அடுத்தவர்களின் எண்ணத்திற்கு அதிக மதிப்புக் கொடுப்பதால்,
♻ நம் செயல்கள் முழுதாக நடைபெறாமல், அதனால் மனம் புழுங்குவது வழக்கமாகி விட்டது.
♻ முன்னேற நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியை
இந்த எண்ணம் சாகடித்து விடும்.
♻ முளையிலேயே முயற்சி சாகடிக்கப்படுவதால், முன்னேற்றம் எங்கிருந்து வரும்?
♻ இந்தப் பயத்திலேயே பலர் மற்ற தகுதிகளை, திறமைகளை கைவிட்டு விடுகின்றனர்.
♻ இந்த அச்சம் இருந்தால், படைப்புத் திறனோ, முன்னேற வேண்டும் என்கிற உந்துதலோ இருக்காது.
நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாது; புரியாது.
♻ முதலில், இந்த எண்ணத்திலிருந்து வெளியில் வர வேண்டும்.
இப்படிப்பட்ட எண்ணத்தில் இருப்பது, இருளில் இருப்பதற்குச்
சமம்;
வெளியில் வந்து விட வேண்டும் என்று முனைவது முதல்
படி,.
மற்ற தடைகளை வரிசையாகக் களைய வேண்டும்...
♻ மனதில் ஆழப் பதிந்துள்ள எதிர்மறை எண்ணம், தாழ்வு மனப்பான்மை, பயம், தயக்கம், ஒப்பீடு என்று அனைத்தில் இருந்தும் வெளிவர முயற்சி
செய்ய வேண்டும்.
♻ வெற்றியை நோக்கி செல்லும் பயணத்தில், பிறர் கருத்துகளையும், அதிருப்தியையும் சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பிறர் உங்களைக் குறை கூறும் போது, சோர்ந்து போகாதீர்கள்;
♻ பிறர் இப்படி இருக்கின்றனரே என்று, உள்ளுக்குள் பொறுமாதீர்கள். இருக்கும் நிலையை
ஏற்றுக் கொள்ளுங்கள்; தீர்வு காணுங்கள்..,
😎ஆம். இனிய நண்பர்களே
🏵 "இந்த உலகம் உங்களைப் பார்க்கிற விதம் ஒவ்வொரு
நாளும் மாறிக் கொண்டே இருக்கும்.
⚽ சிலருக்கு இன்று உங்களைப் பிடிக்கும். நாளையே
அவர்களுக்கு பிடிக்காமலும் போகலாம்.
🏵 மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று யோசித்துக்
கொண்டிருந்தால் நம்முடைய வாழ்க்கையை நாம் வாழ முடியாது"..........
1) கடின உழைப்பு + நிலைத்தன்மை = வெற்றி.
2) இலக்கு+திட்டம்+செயல் = வெற்றி.
3) தோல்வி +கற்றல் +மீண்டும் முயற்சி = வெற்றி.
4) துளையிடல் + வாய்ப்பு = வெற்றி.
5) பொறுமை + விடாமுயற்சி = வெற்றி.
6) அறிவு + அனுபவம் = வெற்றி.
7) கனவுகள் + தியாகம் + முயற்சி = வெற்றி.
8) ஆரோக்கியம் + செல்வம் = வெற்றி.
9) சரியான தேர்வு + சரியான செயல் = வெற்றி.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
தன்னம்பிக்கை : வாழ்க்கையில் வெற்றியுடன் கூடிய அமைதி வேண்டுமா? - ஒன்பது வெற்றி சூத்திரங்கள் [ ] | self confidence : Want peace with success in life? - Nine Success Formulas in Tamil [ ]