பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளவில் உள்ளது. அதனால் ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து, தூபம் காண்பித்து வழிபட்டு வந்தால் வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும் என்பது ஆன்மிகவாதிகளின் கருத்து.
செல்வத்தோடு சேர்ந்த நிம்மதியும் வேண்டுமா? இதை செய்யுங்கள்....
பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளவில் உள்ளது. அதனால் ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து, தூபம் காண்பித்து வழிபட்டு வந்தால் வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும் என்பது ஆன்மிகவாதிகளின் கருத்து.
அத்துடன் பச்சை கற்பூரம்
இயல்பாகவே அதிக வாசனை நிறைந்தது. பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய சக்தி
இருக்கிறது.
2 அல்லது 4 துண்டு பச்சை
கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள். அப்படி பூஜை அறையில் வைப்பதால்
வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும்.
ஒருவருக்கு மன நிம்மதி
இல்லாமல் போவதற்கு காரணமே, வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள்தான். பச்சை
கற்பூரத்தின் வாசனையினாலும், அதன் மகிமையினாலும்
துர்சக்தியானது வீட்டை விட்டு வெளியேறி விடும். அதனால் வீட்டில் எப்போதும் மன
நிம்மதி இருக்கும்.
புள்ளி ஒழுங்கா இருந்தா
தான் கோலம் சரியாக போட முடியும் !
அதுபோல ஒருமனுசனுக்கு
மனசு சரியா இருந்தால் தான் முன்னுக்கு வர முடியும் !
மனசை சரியா
வைச்சுக்காதவங்க மாமன்னராக இருந்தாலும் சரி , மல்லு வேட்டி மைனராக
இருந்தாலும் சரி , மாடி வீட்டு ஏழையாக இருந்தாலும் சரி எந்த நொடி
வேண்டுமானாலும் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்து விடும்..
மனமே மாயஜால
மந்திரக்கோல்..💖
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : செல்வத்தோடு சேர்ந்த நிம்மதியும் வேண்டுமா? இதை செய்யுங்கள்.... - [ ] | Spiritual Notes : Want the peace of mind that comes with wealth? Do this…. - in Tamil [ ]