வாழ்க்கை முழுவதும் இன்பமாக இருக்க வேண்டுமா?

எல்லாம் இன்பமயம், வாழ்க்கை...

[ ஊக்கம் ]

Want to be happy all through life? - Everything is fun, life... in Tamil

வாழ்க்கை முழுவதும் இன்பமாக இருக்க வேண்டுமா? | Want to be happy all through life?

இந்த ரகசியத்தைப் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும்.

வாழ்க்கை முழுவதும் இன்பமாக இருக்க வேண்டுமா?


எல்லாம் இன்பமயம்

🌴🌷🌴✋😇🤚🌴🌷🌴

🌴 எல்லாம் இன்பமயம் 🌴

🌴🌷🌴தமிழர் நலம்🌴🌷🌴

🌷

🌸🌼🌿இந்த ரகசியத்தைப் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும்.

🌷

 

ஒரு பள்ளிக் கூடத்துக் குழந்தைகள் கிட்டே விஞ்ஞானப் பூர்வமா ஒரு சோதனை நடத்திப் பார்த்திருக்காங்க!

 

அதாவது அவங்களுக்கு ஒரு பரீட்சை வைத்தாங்க. பரீட்சை வைப்பதற்கு முன்னாடி அவங்களைப் பார்த்து ..

 

நீங்கள்லாம் ரொம்பப் புத்திசாலிகள்... ரொம்பக் கெட்டிக்கார பிள்ளைங்க... உங்ககிட்டே நல்ல திறமை இருக்கு ..

 

இந்தப் பரீட்சை உங்களுக்கு ரொம்பச் சுலபமா இருக்கும்!" அப்படின்னு சொல்லிப் பரீட்சை எழுத அனுப்பினாங்க.

🌷

இந்தப் புகழ் உரையைக் கேட்டுட்டு அவங்க பரீட்சை எழுதப்

 

போனாங்க... எழுதினாங்க! என்ன ஒரு ஆச்சரியம்!

 

சராசரிக்கும் மேலாக அல்லவா இருந்துது அவங்க எழுதினது! எல்லாருக்கும் நல்ல மார்க் எடுத்தார்கள்.

🌷

அதே பள்ளிக் குழந்தைகள்கிட்டே இன்னொரு பரீட்சை வச்சாங்க. அதுவும் முதல்லே வச்சது மாதிரியே ரொம்பச் சுலபமான பரீட்சைதான்! இருந்தாலும் பரீட்சை எழுதப் போற பிள்ளைங்களைப் பார்த்து..... 'இந்தப் பரீட்சை ரொம்பக் கஷ்டமா இருக்கும்... இதை திறமையா எழுதற அளவுக்கு உங்களுக்குப் புத்திசாலித்தனம் போதாது!' அப்படின்னு ஆரம்பிச்சி அவங்க குறைகளையே சுட்டிக் காட்டி பேசிவிட்டு அதுக்கப்புறம் பரீட்சை எழுத அனுப்பி வச்சாங்களாம். இவங்க பரீட்சையை சரியாவே எழுதலையாம்..... மார்க்கும் ரொம்பக் குறைந்துப் போச்சாம்! இந்த வித்தியாசத்துக்கு என்ன காரணம்?

🌷

புகழ்ச்சிதான். அவங்களை புகழ்ச்சியா பேசி அனுப்பினாங்க. அதிக மார்க்!

 

இவங்களை குறைகளை சுட்டிக் காட்டி இகழ்ச்சியா பேசி அனுப்பினாங்க.... குறைச்சல் மார்க்!

 

'புகழ்ச்சி -ங்கறது ஒரு அற்புதமான மருந்து' அப்படிங்கறாங்க நிபுணர்கள்.

🌷

'இந்த புகழ்ச்சி மருந்தை நாம் சுலபமா தயார் பண்ணலாம் தாராளமா மத்தவங்களுக்குக் கொடுக்கலாம் -ங்கறாங்க அவங்க!' இதுக்குக் காசு பணம் செலவில்லே ஆனா பலன் அதிகம்!

 

பள்ளிக் கூடத்துக் குழந்தைகள் கிட்டே இந்த மருந்தைக் கொடுங்க..... அவங்க நல்லா படிப்பாங்க... நிறைய மார்க் வாங்குவாங்க!

 

வியாபாரத்திலே உங்க கூட்டாளிக்கு இந்த மருந்தை நீங்க கொடுங்க.... நல்லா ஒத்துழைப்பாங்க..... மேலும் பணம் சம்பாதிக்க அவர்கள் கண்டிப்பாய் உங்களுக்கு உறுதுணையாக நிற்பார்கள்.

உங்க குடும்பத்திலே உள்ளவங்களுக்கும் சொந்தக்காரங்களுக்கும் இந்த மருந்தைக் கொடுங்க.... சந்தோஷப்படுவாங்க.... பாசமா இருப்பாங்க.....

🌷

இந்த மருந்து உங்க கைவசம் இருந்தா நீங்க எங்கே போனாலும் மகிழ்ச்சியைப் பரப்ப முடியும்....

 

இந்த மருந்தை நீங்க இன்னொருத்தர்கிட்டே கொடுக்கும் போது .... உங்களுக்கும் அது போதுமான அளவுக்குக் கிடைக்குது. உங்களை சந்தோஷப் படுத்துது புகழும் பணமும் சேர அது உதவுது.

 

இப்படியெல்லாம் சொல்றார் ஓர் உளவியல் நிபுணர் (எம்.ஆர். காப்மேயர்) புகழ்ச்சி -ங்கற மருந்துக்கு அவ்வளவு சக்தி இருக்குது.

🌷

ஆல்ஃபிரெட் ஆட்லர் -ன்னு ஒரு மனவியல் நிபுணர். அவர் ஒரு டாக்டர். அவர் என்ன பண்ணுவாராம் கவலை, பயம், கலக்கம் இதுகளுக்கெல்லாம் இரையான தன்னுடைய நோயாளிகள்கிட்டே போவாராம். அவங்களைப் பார்த்து சொல்வாராம்.

 

"நீங்கள்லாம் என்ன செய்யணும்ன்னா யாரையாவது ஒன்னு திருப்தி செய்யணும் இல்ல யாருக்காவது மன மகிழ்ச்சியை உண்டாக்கணும்... அல்லது அனைவரையும் மகிழ்ச்சியில் உண்டாக்கி அதை அந்த மகிழ்ச்சியை தொடர்ந்து நினைச்சுக்கிட்டு இருங்க...... அது போதும்!

 

அப்படி இருந்தா 14 நாள்லே உங்க குறைபாடுகள்லாம் நீங்கிவிடும்!'- ன்னு சொல்வாராம். அதே மாதிரியும் ஆயிடுமாம்.

🌷

அடுத்தவங்களைத் திருப்திபடுத்தறதுக்கு என்ன வழி? பொதுவா அடுத்தவங்க நம்மகிட்டே இருந்து என்னத்தை எதிர்பார்க்கிறாங்க....? நமது புகழ்ச்சியைத்தான் எதிர்பார்க்கிறாங்க... பாராட்டைத்தான் எதிர்பார்க்கிறாங்க.

 

வில்லியம் ஜேம்ஸ் - அமெரிக்க தத்துவஞானி - மனோதத்துவ நிபுணர். அவர் என்ன சொல்றார் தெரியுமா?

 

"மனித இயல்பின் ஆழமான தத்துவம் என்பதை ஆராய்ந்து உற்று நோக்கினால் ஒவ்வொரு மனிதனுக்கும் பாராட்டைப் பெறுவதற்காக ஏங்குவது தான் என்பது தெரிய வரும்!

 

இந்த ரகசியத்தைப் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும். வாழ்க்கையிலே வெற்றியடையறது சுலபம்.

 

வாழ்க்கை...

பல ஊர்களுக்கும் யாத்திரை சென்ற ஒரு ஞானி ஒரு ஊரில் வந்து தங்கினார். அப்போது அந்த ஊரில் உள்ள பணக்காரர் ஒருவர் அந்த ஞானியை பார்த்து  தன் வீட்டிற்கு விருந்து சாப்பிட அழைத்தார். அது மட்டுமல்ல ஒரு கர்வத்துடன் கொஞ்சம் மேலாதிக்கம் கலந்த திமிர் பேச்சுடன் இந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் நான் தான் என்றும் எது நினைத்தாலும், நினைத்ததை சாதிக்கும் பலம் என்னிடம் இருக்கிறது என்றும் சொன்னார். சரி உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள், என்றும் தூக்கலாக கர்வ பெருமையுடன் தன்னை அறிமுகப்படுத்தி சொன்னார்.

சற்று யோசித்த ஞானி, ரொம்ப நல்லது. அவரை வாழ்க்கை என்னவென்று புரிய வைக்க சொன்னார். எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமே! என்று அந்த பணக்காரரிடம் கேட்டார். என்ன சுவாமி.. ஓகே. எது எப்படி இருந்தாலும், எதுவாக இருந்தாலும் தயங்காமல் என்னிடம் சொல்லுங்கள். அதே கர்வத்தில் பதில் நான் செய்ய காத்திருக்கிறேன் சுவாமி என்றார் அந்த பணக்காரர்.

அதற்க்கு அந்த ஞானி தன் பையில் இருந்து ஊசி ஒன்றை எடுத்து அந்த பணக்காரரிடம் நீட்டினார். அதற்கு அந்த பணக்கார மனிதர் இந்த பழைய ஊசியைக் கொண்டு நான் என்ன செய்ய வேண்டும். அதற்கு அந்த ஞானி இதைப் பத்திரமாக வைத்திருங்கள் அது போதும்.. மேலும் நாம் இருவரும் மேலுலகத்தில் சந்திக்கின்ற வேளையில் திருப்பிக் கொடுத்தால் போதும் என்று சொன்னார் அந்த ஞானி. அதற்க்கு அந்த மனிதர் இறந்த பிறகு எப்படி அய்யா இந்த ஊசியை கொண்டு வரமுடியும் என்று உடனடி கேள்வி கேட்டார் பணக்கார மனிதர். அவரைப் பார்த்து சிரித்த படியே அந்த ஞானி, இப்போது சொல்லுங்கள் நீங்கள். இந்த உலகை விட்டுப் போனால் எதையாது ஏன் இந்த சிறு ஊசியைக் கூட கொண்டு போக முடியாது என்று நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள் அல்லவா. அப்படி இருக்க நீங்களே நினைத்ததை சாதிக்கும் வல்லமை மற்றும் வலிமை இருப்பதாக தாங்களே தற்பெருமை பேசுகிறீர்களே.... இதில் எதாவது நியாயம் இருக்கிறதா? ஒன்று புரிந்துக் கொள்ளுங்கள். ஒருவன் செய்த நன்மை, தீமை மட்டுமே இறந்த பிறகு கூட பேசும் அதுவே கூடவே வரும். செல்வத்தால் யாரும் கர்வப்படத் தேவையில்லை. அது இடையில் வந்தவை இன்று ஒருவர் கையில் இருக்கும் நாளை இன்னொருத்தர் கையில் போகிவிடும். ஆதலால் அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள். அது தான் வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சியைத் தரும். அதுவே பேரின்பம் ஆகும்.


வாழ்த்துக்கள்!!

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் நமது  ஆன்மீக பயணம் தொடரும்!

இறைபணியில்

அன்புடன்....

🌷தமிழர் நலம்🌷

💥நன்றி!

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

🌷🌷முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

 

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

இந்த நாள் இனிய நாளாகட்டும்...

 

வாழ்க 🙌 வளமுடன்

 

அன்பே🔥இல்லறம்

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

 

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

 

💦💦💦💦💦💦💦💦💦💦💦💦

ஊக்கம் : வாழ்க்கை முழுவதும் இன்பமாக இருக்க வேண்டுமா? - எல்லாம் இன்பமயம், வாழ்க்கை... [ ஊக்கம் ] | Encouragement : Want to be happy all through life? - Everything is fun, life... in Tamil [ Encouragement ]