செல்வத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
நீங்களும் செல்வந்தர் ஆக வேண்டுமா? செல்வத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த பூமியில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால் 'போதும்' என்ற மனம் மட்டும் இருந்துவிட்டால் போதாது; கொஞ்சம் செல்வமும் வேண்டும். என்னதான் இருந்தாலும் ஆசை இல்லாத மனிதர்கள் இல்லையே... பெரும்பாலானவர்கள் நிறைந்த செல்வத்திற்குதான் ஆசைப்படுகிறார்கள். அதற்கான தேடலில் தான் வாழ்க்கையின் பெரும் பகுதியை செலவு செய்கிறார்கள். நீங்களும் செல்வந்தர் ஆக வேண்டுமா? அப்படியென்றால், குபேர பூஜை செய்யுங்கள். செல்வத்திற்கு அதிபதிதான் குபேரன். திருப்பதி ஏழுமலையானே, தனது கல்யாணச் செலவுக்கு இவரிடம் கடன் வாங்கி, இன்னமும், அதற்கான வட்டியை செலுத்திக் கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம். குபேர பூஜையை, தீபாவளி அன்றோ அல்லது அதற்கு மறுநாளோ செய்ய வேண்டும். குபேர பூஜை செய்தால் அளவற்ற செல்வமும் பரந்து விரிந்த கல்வி அறிவும் கிடைக்கும். குபேரன், மிகச்சிறந்த சிவபக்தர். அமைதியான குணம் கொண்டவர். "ஏழையானவன், பணக்காரனாக வேண்டுமென்றால், சாந்த குணம் தேவை. அவன் மற்ற பணக்காரர்களைப் பார்த்து ஏங்கக்கூடாது. அதற்குப் பதிலாக, பணக்காரர்களின் பின்னணியில் எந்த அளவுக்கு உழைப்பு இருக்கிறது என்று பார்க்க வேண்டும்" என்பதே குபேர தத்துவம். குபேரனுக்கு மொத்தம் 2 மனைவிகள்... ஒருத்தி சங்கநிதி; மற்றொருத்தி பதுமநிதி. இதில், சங்கநிதியின் கையில் எப்போதும் வலம்புரிச் சங்கு இருக்கும். செல்வச் செழிப்பைக் குறிக்கும் அடையாளம்தான் வலம்புரிச் சங்கு. பதுமநிதி, தன் கையில் தாமரை மலரை வைத்திருப் பாள். தாமரை, கல்வி அறிவைக் குறிப்பதாகும். இவர்கள் இருவரிடமும் தான், தன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் குபேரன் கொடுத்து வைத்துள்ளார். எனவே, நீங்கள் குபேரனை வழிபடும்போது, சங்க நிதியையும் பதும நிதியையும் மறக்காமல் வழிபட வேண்டும். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்அது என்ன குபேர பூஜை?
ஆன்மீக குறிப்புகள்: குபேரன் : நீங்களும் செல்வந்தர் ஆக வேண்டுமா? - குபேரன் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual notes: Kuberan : Want to become rich too? - Kuberan - Spiritual notes in Tamil [ spirituality ]