சர்க்கரை நோயிலிருந்து விடுதலை பெற வேண்டுமா?

சித்தா மருத்துவம்

[ சித்தா மருத்துவம் ]

Want to get rid of diabetes? - Siddha medicine in Tamil

சர்க்கரை நோயிலிருந்து விடுதலை பெற வேண்டுமா? | Want to get rid of diabetes?

இன்று இளம் வயதில் கூட சர்க்கரை நோய் வருவது கொடுமையிலும் கொடுமை.

சர்க்கரை நோயிலிருந்து விடுதலை பெற வேண்டுமா?

 

சர்க்கரை நோயாளி எந்த மருத்துவ உதவியையும் நாடாமல் ஆயுள்வரை ஆரோக்கியமாக வாழ இயற்கை உணவும், சில வகையான சமையல் உணவுகளும், அதை தயாரிக்கும் முறைகளையும், சாப்பிடும் அளவும், தெளிவாக தெரியப்படுத்தும் உணவுக் குறிப்பு புத்தகம், கட்டுரைகள் வலை தளங்களில் நிறையக் குவிந்து கிடைக்கத் தான் செய்கிறது. ஆனால் அதை படித்து மேற்கொள்ளும் முறையை தான் நாம் தவற விடுகிறோம். சர்க்கரை நோயாளிக்கு மட்டுமல்ல மனிதராகப் பிறந்த எல்லோருக்கும் உதவும் வகையில் ஆரோக்கியம் சார்ந்த கட்டுரைகள் நமது தமிழர் நலத்திலும் அதிகம் வர இருக்கிறது. படித்து பயன் பெறுங்கள். சர்க்கரை நோயாளிக்கு உணவு முறையை சரியாக கடைப்பிடிக்க, முளைக்கட்டிய தானியங்களும், பலதானியம் சேர்ந்த மாவும், மூலிகை பல்பொடியும், மூலிகை குளியல் பொடியும், சிறுநீரில் சர்க்கரையின் அளவை பரிசோதிக்க பயன்படும் பொருள்களும் கிடைக்கிறது..

 

முன்பு இயற்கை மருத்துவம் பார்த்தவர்கள் மூலிகையை பொடிகளாக சாப்பிட்டார்கள். மூலிகைப் பொடிகளை தண்ணீரில் கலந்து குடிக்க சிலருக்கு சிரமமாக இருந்தது. இப்போது மூலிகை பொடிகள் ஒவ்வொன்றையும் நாம் தனித்தனியாக மாத்திரை வில்லைகளில் வாங்கியும் சாப்பிடலாம். இனி மருத்துவத்தை சரியாக கடைப்பிடித்து நோயில்லாமல் வாழ வசதியாக இருக்கும். ஆயுள்வரை ஆரோக்கியம் தரும் உணவுக் குறிப்பு புத்தகங்கள் இருப்பதால் வாங்கி பின் தொடர்ந்தால் ஆயுள் நீடிக்கும். அது மட்டும் அல்லாமல் ஆயுள் வரை ஆரோக்யமாகவும், மகிழ்ச்சியாகவும் நீண்ட காலம் வாழலாம் என்பது மறுக்க முடியாத, மறைக்க முடியாத உண்மை ஆகும்.

 

இன்று இளம் வயதில் கூட சர்க்கரை நோய் வருவது கொடுமையிலும் கொடுமை. அதற்க்கு மன அழுத்தம், வாழ்கின்ற வாழ்க்கை முறை, முறை இல்லா உணவு மேற்கொள்ளுதல், இன்னும் காரணங்கள் வரிசை நீண்டு கொண்டே போகலாம். சரி அந்த நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும். சில உணவு முறைகளை கடை பிடித்து வந்தால் குறைக்க வாய்ப்பு இருக்கிறது. வெந்தயம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்து, கல்லீரலை உத்வேகப் படுத்தி, உடம்பில் பித்தத்தின் அளவையும் குறைக்க வல்லது. நெல்லிக்காய் ஜூஸ் பருகி வர எதிர்ப்பு சக்தி கிடைத்து, ரத்தத்தில் கலக்கின்ற இன்சுலினை கிரகிக்க வல்லது. வெறும் வயிறில் பருகாமல் இருப்பது நல்லது. பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து பருகி வர உடம்பில் இன்சுலின் சீராக சுரக்க உதவுகிறது. நாவல் பழம் அதனுடைய துவர்ப்பு தன்மையானது ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கச் செய்யும். மேலும் இதயத்தின் தசைகள், குடல், இரைப்பை அனைத்தும் வலுப்படும். பாகற்காய் விட்டமின் c கொடுத்து, ஆண்டி ஆக்சிடன்ட்யாகவும் செயல்பட செய்யும்.  மேலும் தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமாகும். தோல் பளபளப்புத் தன்மையை கொடுக்கும். வேப்பம் பூ நல்ல ஒரு பூச்சி கொல்லியாகவும், இன்சுலினை சுரக்கவும் செய்யும். துளசியும் அதன் துவர்ப்புத் தன்மையும் கணையத்தில் இருக்கும் பீட்டா செல்களை நன்கு செயல்பட வைக்கும். ஆவாரம் பூக்களின் பொடியானது சிறந்த ஆண்டிபயாடிக்காகவும், சர்க்கரை அளவையும் குறைக்க வல்லது. அதே போல் மஞ்சளும் நல்ல ஒரு ஆண்டிபயாடிக் ஆகும். இதுவும் பாலுடன் பருகி வர ரத்தமானது சுத்தப் படுத்தப் பட்டு சர்க்கரை அளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. அடி ஆத்தி! அத்தி பழம் இத்தனை அபூர்வம் கொண்டதா? ஆம். அத்தி பழம் நார்ச்சத்து கொண்டிரிப்பதால் ரத்த விருத்தி மற்றும் சக்தியை கொடுத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்து விடும் சக்தி பெற்றது. மேலும் எந்த உணவு எடுத்தாலும் ஒரு மருத்துவரின் அறிவுரையின் படி மேற்கொள்ளுதல் என்பது தான் சரியான வழியாகும்.

 

சர்க்கரை நோயாளிகள் நோயிலிருந்து முழுமையாக விடுபட அனைத்து வழிகளும் சொல்லப்பட்டு இருக்கிறது. ஒரு சக்கரை நோயாளிக்கு கணயம் எந்த அளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டுமானால், காலை உணவுக்கு முன் ரத்தப்பரிசோதனை செய்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். 120க்குள் சர்க்கரையின் அளவு இருந்தால் கணயம் அதிகம் பாதிக்கவில்லை. சிலருக்கு காலை வெறும் வயிற்றில் சர்க்கரையின் அளவு 350 வரை இருக்கும். இவர்களுக்கு கணையம் அதிகம் பழுதடைந்திருக்கும். இயற்கை மருத்துவம் பார்க்க ஆரம்பிப்பதற்கு முன் காலை வெறும் வயிற்றில் ரத்தத்திலும், சிறுநீரிலும் சர்க்கரையின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டுதான் மருத்துவம் மேற்கொள்ள வேண்டும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

சித்தா மருத்துவம் : சர்க்கரை நோயிலிருந்து விடுதலை பெற வேண்டுமா? - சித்தா மருத்துவம் [ ஆரோக்கியம் ] | Siddha medicine : Want to get rid of diabetes? - Siddha medicine in Tamil [ Health ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்