வீட்டில் பண வரவு அதிகரித்து மகிழ்ச்சி கிடைக்க வேண்டுமா?

பண கஷ்டம் நீங்கி சேமிப்பு அதிகரிக்க

[ ஆன்மீக குறிப்புகள் ]

Want to increase cash flow at home and bring happiness? - To get rid of money problems and increase savings in Tamil

வீட்டில் பண வரவு அதிகரித்து மகிழ்ச்சி கிடைக்க வேண்டுமா? | Want to increase cash flow at home and bring happiness?

வீட்டில் பண வரவு அதிகரித்து உங்க பேங்க் பேலன்ஸ் அதிகமாக, இந்த காசுகளை மட்டும் யாருக்கும் தெரியாமல் மறைத்து வச்சுருங்க. அப்புறம் பாருங்க உங்க சேமிப்பு கிடு கிடுன்னு உயரும்.

வீட்டில் பண வரவு அதிகரித்து மகிழ்ச்சி கிடைக்க வேண்டுமா?

🔯 வீட்டில் பண வரவு அதிகரித்து உங்க பேங்க் பேலன்ஸ் அதிகமாக, இந்த காசுகளை மட்டும் யாருக்கும் தெரியாமல் மறைத்து வச்சுருங்க. அப்புறம் பாருங்க உங்க சேமிப்பு கிடு கிடுன்னு உயரும்.

 

🔯 வீட்டில் சண்டை, சச்சரவு இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் நிச்சயமாக அனைவரின் தேவையையும் பூர்த்தி ஆக வேண்டும். குடும்பம் ஒற்றுமையாக இருக்க புரிதல் இருந்தால் மட்டும் போதும். ஆனால் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக பணம் வேண்டும் தானே. அந்த பணத்தை எப்படி நம் கையில் தக்க வைக்க வேண்டும் என்பதற்கான எளிய பரிகாரத்தை தான் இப்போது பக்தி பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

 

🔯 பண வரவு அதிகரிக்க வேண்டும் என்றால் நாம் நிச்சயம் உழைக்க வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. உழைக்காமல் பாடுபடாமல் எதுவும் நமக்கு வராது. ஆனால் உழைத்துப் பாடுபடும் எத்தனை பேரிடம் பணமானது தங்குகிறது என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பணம் தடை இன்றி நமக்கு வரவும், வந்த பணம் நம்மிடம் தங்கவும், வீண் விரையம் ஆகாமல் இருக்கவும் சாஸ்திரத்தில் சில பரிகாரங்கள் உண்டு. அவற்றை செய்யும் போது பண வரவிற்கான தடைகள் நீங்கும். இப்போது அதை தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

 

பண கஷ்டம் நீங்கி சேமிப்பு அதிகரிக்க

🔯 பண வரவிற்கான இந்த பரிகாரத்தை செய்ய நமக்கு ஏழு காயின்கள் தேவை. அது ஏழு ஒரு ரூபாயாக இருக்கலாம், அல்லது ஏழு ஐந்து ரூபாயாக இருக்கலாம், ஏழு பத்து ரூபாயாக இருக்கலாம். இப்படி ஏழு காயினை எடுத்து அந்த காயினை நன்றாக சுத்தம் செய்து பூஜையறையில் வைத்த பிறகு, ஏழு காயின் மீதும் கொஞ்சம் எலுமிச்சை சாறு தெளித்து விட வேண்டும். அதன் பிறகு உங்கள் குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும், மகாலட்சுமி தாயாரையும் மனதார வேண்டிக் கொண்டு, உங்களின் பண தேவைகள் அனைத்தும் பூர்த்தியாக வேண்டும் என்றும், உங்கள் சேமிப்பு பன்மடங்கு அதிகரிக்கும் என்றும், பணமானது உங்களுக்கு தடை இன்றி கிடைக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டு, இந்த ஏழு காயினையும் உங்கள் வீட்டில் ஏழு இடங்களில் வைத்து விடுங்கள்.*

 

🔯 நீங்கள் வைத்த பிறகு இந்த காயினை நீங்களே எடுக்கக் கூடாது அந்த அளவிற்கு அதை மறைத்து, பிறர் பார்வைக்கும் படாத படி ஏழு காயினையும் வைத்து விடுங்கள். இதை எதுவும் செய்ய வேண்டாம் அப்படியே விட்டு விடுங்கள். உங்கள் வீட்டில் இந்த நாணயங்கள் இருக்கும் போது உங்களுக்கான பண வரவை இந்த நாயணங்கள் ஈர்த்துக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.*

 

🔯 இது மிக மிக எளிய சாதாரண ஒரு பரிகாரம் தான். ஆனால் இதன் மூலம் பணவரவானது நிச்சயம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதை வெள்ளிக்கிழமைகளில் ெய்தால் மிகவும் விசேஷம். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நாள். பணத்திற்கான எந்த பூஜையும் அவர்களை சரணடையாமல் நிறைவேறாது. எனவே அந்த நாளில் இந்த பரிகாரத்தை செய்தால் நல்லது.

 

🔯 இதை மட்டும் இன்றி வெள்ளிக்கிழமைகளில் தவறாது வீட்டில் பூஜை செய்ய வேண்டும். அந்த பூஜை நேரத்தில் அஷ்டலஷ்மி ஸ்தோத்திரம் உங்கள் வீட்டில் ஒலிக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இவை எல்லாம் பணத்தை உங்களுக்கு ஈர்த்து கொடுக்கும் ஆற்றல் வாய்ந்தவை.✍🏼


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம் 

ஆன்மீக குறிப்புகள் : வீட்டில் பண வரவு அதிகரித்து மகிழ்ச்சி கிடைக்க வேண்டுமா? - பண கஷ்டம் நீங்கி சேமிப்பு அதிகரிக்க [ ] | Spiritual Notes : Want to increase cash flow at home and bring happiness? - To get rid of money problems and increase savings in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்