கல்லீரலின் பிரதான வேலையே நாம் உண்ணும் உணவுகளை செரிமானம் செய்வதற்காக தேவைப்படும் வேதிப்பொருள்களை சுரத்தல் வேலையை செவ்வனே செய்கிறது.
கல்லீரல் பற்றித் தெரிய வேண்டுமா?
கல்லீரல் (liver)
கல்லீரல் என்பது மனிதர்களில் வயிறுக்கு மேலே வலது நெஞ்சுப் பகுதிக்கு
கீழே இருக்கக் கூடிய முக்கிய உறுப்பு. இது ஆப்பு வடிவத்தில் இருக்கும். அப்போதே
தெரிய வருகிறதா? சரிவர கவனிக்காமல் விட்டால் நமக்கு ஆப்பு தான். சிலர் மதுப்
போதைக்கு அடிமையாகி தானே அந்த ஆப்பில் போய் உக்காருவார்கள். அவர்கள் கதி அதோ கதி
தான். கல்லூரிகளில் படிக்கும்போது காதலிக்கும் நாம் கொஞ்சம் இந்த கல்லீரலையும் காதலிப்போமே!
ரெண்டுமே காலம் கடந்து செய்தால் நாம் எதிர்பார்த்த பலன் தர வாய்ப்புகள் குறைவு.
இனி கல்லீரலை காதலிக்க நீங்க தயாரா? அதைப் பற்றி தெரிந்துக்கொள்ள, படிக்க உங்களுக்குத் தயாராக இந்த கட்டுரைப் பதிவு
ரெடி. கல்லூரி முடித்து விட்டு வேலைக்குச் செல்வோம். ஆனால் இந்த கல்லீரலின் வேலையைப்
பற்றி தெரியுமா? படியுங்கள். விளக்கமாக அனைத்தும் இருக்கிறது.
கல்லீரலின் பணிகள்:
கல்லீரலின் பிரதான வேலையே நாம் உண்ணும் உணவுகளை செரிமானம்
செய்வதற்காக தேவைப்படும் வேதிப்பொருள்களை சுரத்தல் வேலையை செவ்வனே செய்கிறது. மேலும்
கல்லீரலில் சுரக்கப்படும் பித்த நீர் அதன் கீழ் இருக்கும் பித்தப் பையில்
சேமிக்கப்படுகிறது. இந்த பித்த நீர் கொழுப்புகளை செரிக்கச் செய்கிறது. ஹார்மோன்
உற்பத்தி செய்தல், இரத்த சிவப்பணுக்களை சிதைக்கும் வேலையும் இது செய்கிறது.
மனிதனின் உறுப்புகளில் அதிக எடைக் கொண்டது. (1.4 kg – 1.6 kg) மிகப் பெரிய சுரப்பியும் இதுவே. மேலும்
செரிமானம் செய்யப்பட்ட உணவை ரத்தத்திலிருந்து எடுத்து, தேவைப்படும் இடத்திற்கு
மீன்டும் கொடுக்கும் மிகப் பெரிய வேலையைச் செய்கிறது என்றால் எவ்வளவு பெரிய மகாப்
பணி... நாம் சாப்பிடும் உணவை ஆற்றலாக மாற்றி மனிதனை தெம்பாக நடக்கச் செய்கிறது.
நாம் கீழே விழுந்தால் ஏற்படும் காயங்களோ அல்லது ரத்தம் வந்தால் உறைய வைக்குற
வேலையும் இது தான் செய்கிறது. இப்போது நினைத்துப் பாருங்கள்.. வேலைய நிறுத்தினால்
இரத்தம் வெளியேறுவது நிக்குமா? உடம்பிலிருந்து இரத்தம் வெளியேறினால் இந்த
கல்லீரலுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, கல்லீரலானது இரத்தம் உறையத் தேவைப்படும்
என்சைம்களைத் தயார் செய்கிறது. நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களின் கூடுதல் ஊட்டச்
சத்தை தன்னுள் சேமித்து வைத்து, ஆற்றல் தேவைப்படும் நேரத்தில் இரத்தத்தினால்
தேவைப்படும் இடங்களில் கொண்டு போய்ச் சேர்க்கிறது. பல முக்கியமான தலைச்சிறந்த
வேலையை செய்யும் கல்லீரல் பாதிக்குமா? என்று கேட்டால் அதிக வாய்ப்பு இருக்கிறது. உண்மை
தான் எப்படியெல்லாம் பாதிப்புக்கு உள்ளாகும். பார்ப்போம். கல்லீரல் வீக்கம் என்று
கேள்விப்பட்டு இருப்பீர்கள்? கல்லீரலில் இருக்கும் திசுக்கள், உயிரணுக்கள்
வீக்கத்துடன் காணப்பட்டால் ஆப்பு வடிவத்தில் காணப்படும் கல்லீரல் நமக்கு ஆப்பு
வைத்துவிடும். நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்கும் உறுப்பே இந்த கல்லீரல் தான்.
அப்பேற்பட்ட இந்தக் கல்லீரலே கெட்டுப் போச்சுனா கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். காரணம்
யாராக இருக்க முடியும். உண்மை தான். நாம் தான் தேவைற்ற காரணத்தினால், மது
பழக்கத்தினாலோ வேறு பல காரணங்களை கொண்டும், நாம் தான் தொற்று நோய்களை எதிர்த்துப்
போராடும் இந்த முக்கியமான கல்லீரல் உறுப்பை சிதைக்குறோம். இப்படி கெட்டுப் போன
கல்லீரலுக்குப் பதில் ஆரோக்யமான நல்ல கல்லீரல் மாற்றும் சிகிச்சைக்கு கல்லீரல் மாற்று
அறுவைச் சிகிச்சை என்று பெயர். இது செய்ய 6 – 10 மணி நேரம் ஆகுமாம். இதற்க்கு
முக்கிய காரணம் சிரோசிஸ் ஆகும். சிரோசிஸ் என்பது அழுகிப்
போனத் திசுக்கலானது ஆரோக்யமான கல்லீரல் திசுக்களை பாழாக்குகிறது. அடுத்து
கல்லீரலில் புற்று நோய் வருவதும் ஒரு காரணமாகும். இந்த புதியக் கல்லீரலும் உடனே
கிடைத்து விடாது. நாம் பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் முன்னுரிமை பெற
வேண்டும். சரி முன்னுரிமை எப்படி வறையருக்கப்படுகிறது? நோயின் பாதிப்பு மதிப்பீடு,
பிலிரூபின் அளவு இன்னும் பல அளவுகோல்கள் உள்ளது. எவ்வளவு நாட்கள் ஆகும் என்றும்
குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.
கல்லீரலில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது?
மனிதர்கள் மது, பீடி, சிகரெட் பழக்கத்தினால் உடலில் தேங்கி
இருக்கும் toxins என்கிற நச்சுக்களை வெளியேற்றவும், உணவுப்
பொருள்களை செமிக்கத் தேவைப்படும் பித்த நீரை சேமிப்பதும் இந்த கல்லீரலே. இந்தக்
கல்லீரலில் பாதிப்புக்கு உள்ளாகும் போதே உடலின் மற்ற உறுப்புகளின் செயல்படும்
விதம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும். கல்லீரலில் உள்ள பிரச்சனையை
ஆரம்பித்திலேயே கவனிக்க தவறினால் முற்றி பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். சமயத்தில்
உயிரையே பரிசாக கேட்டு விடும்.
அறிகுறிகள்:
தலை: ஆல்கஹால் பிரியர் ஆக இருந்தால், அவர்களுக்கு இந்த கல்லீரல் தான் எமன்.
விரைவில் படு வேகமாக அதன் சேட்டையை காமிக்க ஆரம்பித்து விடும். தலை சுற்றல், தலை
வலி அடிக்கடி வந்து போகும். ஒரு கட்டத்தில் வராது. பாதிக்கப்பட்டவர் போயிருப்பார்.
புரிந்து இருக்கும். மேலும் கல்லீரலை வைரஸ் தாக்கினால் கல்லீரல் வீங்கி, வாந்தி,
மயக்கம், காய்ச்சல், சோர்வடைவு, குமட்டல், பசியின்மை, தீராத வலி ஏற்படும். இது
பயம் காட்டுவதற்காக பதிவிடப்படவில்லை. முன்னே பாதுகாக்க முன்னெச்சரிக்கைகாக
சொல்லப்படுகிறது அவ்வளவே. நம் உடல் நம் கவனம் அதை வலியுறுத்த தேவையான பதிவு.
கண்கள்: கண்களில் மஞ்சள் மற்றும் உடம்புப் பகுதிகளில்
காணப்பட்டால் கல்லீரல் தான் மையப்புள்ளி. அதில் பித்த நீர் தேங்கி இருக்கும்.
பிலிருபின் அளவு கூடி இருக்கும். மஞ்சள் காமாலையின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.
ஆரம்பத்திலேயே கவனித்தால் சரியான சிகிச்சை
முறையில் இதைக் குணப்படுத்தி விடலாம். மேலும் கண்களில் கண்ணை சுற்றி கரு வளையம்
கருப்பாக காணப்படுவதும் இதன் குறைபாடே ஆகும்.
வாய்: வாய் துர்நாற்றம் அதிகமாக இருக்கும். கல்லீரல்
பாதிக்கப்படும்போது அம்மோனியா அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.
வயிறு: கல்லீரலில் கட்டிகள் வருவது அரிது. ஆனால் இந்தக் கல்லீரல்
பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டால் ஒழிய கட்டி வராது. அப்படி கட்டிகள் வரும் போது
வயிறின் பகுதி முழுவதும் வீங்கி காணப்படுவதோடு, அடிவயிற்றின் மேல்பகுதியில் அதிக
வலி ஏற்படும். உப்பிய நிலையில் காணப்படும்.
சிறுநீரகம்: சிறுநீர் முதலில் மஞ்சளாக போகும். நாளடைவில் மஞ்சளின் நிறம் அடர் மஞ்சளாக
காணப்படும். அதுமட்டுமல்லாமல் கடுகடுத்து செல்லும். அறிகுறிகள் தென்பட்டாலே
ஆரம்பித்திலேயே மருத்துவரை அணுகுவது என்பது உத்தமம். அப்படி சென்றால் தான்
குணப்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். இல்லையேல் மிகவும் கடினம்.
கால்கள்: கால்களில் வீக்கம் ஏற்படும். திடீரென்று வீக்கங்கள் தென்பட்டால் மருத்துவரை அணுகவும். உடல் முழுவதும்
ஆங்காங்கே அரிப்பு ஏற்படுவதும் இதன் குறைபாடே ஆகும்.
• ஆட்கொல்லி
நோய்களில் நெஞ்சு வலி கூட சிகிச்சை செய்து 15 வருடம்
நீட்டிப்புக்கு வாய்ப்பு உண்டு. அதே மாதிரி சிறுநீரகம் பாதிப்புக்கும் டையலசிஸ் செய்தும்
மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்தும் வருடங்களை அதிகரித்துக் கொண்டு போக வாய்ப்பு
அதிகம் இருக்கிறது. ஆனால் கல்லீரலில் பாதிப்பு உண்டானால் அப்படி வாழ்கையை ஓட்டி
கொண்டு போகமுடியாது. அதிலும் ரத்தகொதிப்பு, சுகர் இருந்தால் அதைவிடக் மிக கடினம்.
கதம் கதம் தான்.
கல்லீரல் என்பவன் உடலுக்கு கதாநாயகன் போல் இருப்பான். எதற்கு சொல்கிறேன்
என்றால் நாம் வாய் வழியே சாப்பிடும் மாத்திரை, மருந்து, அனைத்து உணவு வகைகள், மதுப்பொருள்கள்
எல்லாம் சரியாக இருக்கிறதா என்று டிக்கெட் பரிசோதகர் போல சோதிக்கப்பட்டு தேவையில்லாதவற்றை
நீக்கிவிட்டு, தேவையானவற்றை தான் உடலுக்குள் அனுமதிக்கிறது. அப்பேற்பட்ட டிக்கெட்
பரிசோதகரிடமே நாம் விளையாண்டால் அவர் நம்மிடம் விளையாட்டை காண்பித்து விடுவார்.
அவர் அதற்க்கு அதிக வருடங்கள் எல்லாம் எடுத்துக்க மாட்டார். நேரிடியாகவே அந்த
டிக்கெட் பரிசோதகர் நமக்கு டிக்கெட் கொடுத்து விடுவார். அதனால் தான் சொன்னேன். அவர்
கதாநாயகன் என்று. நாம் வில்லன் ஆனால் அவரிடம் வில்லத்தனம் ஜெயிக்காது. மதுப்பிரியர்களுக்கு
நீண்ட நாட்கள் பழக்கம் இருந்தால் அறிகுறி உடனே தெரியாவிட்டாலும் பாதிப்பு
அடைவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதை அவர்கள் ரத்த பரிசோதனை செய்து தெரிந்து
கொள்ளலாம். ஒருவேளை ஆரம்ப நிலையில் இருந்தால் குடிப்பதை நிறுத்துவது நல்லது.
தொடர்ந்து மது அருந்தி வருபவர்களுக்கு ஈரல் நோய் ஏற்பட்டு கல்லீரல் மொத்தமாக
பாதிக்க பல வழிகளிலும் வாய்ப்பு உள்ளது. இந்தக் கல்லீரல் அழற்சி நோய் A, B, C, D,
E னு பல பெயர்களில் பல்வேறு காரணங்களினால் வருகிறது. எத்தனை பெயரிலும் வரட்டும் A-Z
வரையே இருக்கட்டுமே. நாம் கவனம் இருந்தால் அது பெயரில் மட்டும் தான் இருக்கும். பயம்
கொள்ளத் தேவைப் படாது. இந்தக் கல்லீரல் எவ்வளவு சிதைவு ஆகி இருக்கிறது என்று காண
கல்லீரல் திசுச் சோதனை செய்யப்படுகிறது. தடுப்பு ஊசிகள் இருக்கவும் செய்கிறது. கல்லீரலைப்
பற்றிய விளிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே ஏப்ரல் 19 உலக கல்லீரல் தினம்
அனுசரிக்கப்படுகிறது. மூளைக்கு அடுத்து முக்கியமான உறுப்பு இந்த கல்லீரல் தான் என்று
சொல்லப்படுகிறது. சுருங்கக் கூறின் இந்த கல்லீரல் இல்லாமல் எவரும் வாழ முடியாது.
மூளை செயல் இழந்தால் கூட கோமா நிலையில் வாழ்ந்து விடலாம். ஆனால் கல்லீரலுக்கு அந்த
வாய்ப்பு கிடையாது. கவனம் பத்திரம். மூளை மற்றும் இதயத்திற்கு அடுத்தப்படியாக அதிக
வேலையைச் செய்யும் ஒரு உறுப்பு ஆகும். உடம்புக்கு தேவையான நல்ல வேலைகளை நூற்றுக்கு
மேற்பட்ட வேலைகளை செய்கிறது என்றால் நம்ப முடிகிறதா? செய்கிறது. உடல் பருமன்
உள்ளவர்களுக்கும் கொழுப்பு மிகுதினால் கல்லீரல் நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
உடல் எடையை சரியாக பராமரித்து வாருங்கள்.
கல்லீரலை பாதுகாக்கும் உணவுகள்
• விட்டமின் C சத்து
உள்ளப் பொருள்களை சாப்பிடுங்கள். குறிப்பாக நெல்லிக்காய் சாப்பிட்டு வர, நெல்லிக்காய்
ஜூஸ் பருகி வர கல்லீரல் வலுப்பெற மிக மிக முக்கியப் பங்காற்றுகிறது.
• வாரம் மூன்று முறை கீரை
சாப்பிட்டு வாருங்கள். காய்கறிகள் நல்ல முறையில் எடுத்து வாருங்கள். சூப் போட்டு
குடித்து வரலாம்.
• எலுமிச்சை, கேரட்,
பீட்ரூட். வெள்ளரிக்காய், கொத்தமல்லி இது போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக்
கொள்ளுங்கள்.
• ரத்தத்தில் சில கேடு
செய்யும் ஹார்மோன்கள் இருப்பதால் அது கல்லீரலை சிதைக்க காரணமாகும். அதற்க்கு நாம்
பப்பாளி பழம், ஆழி விதைகள் மற்றும் பழ வகைகளை சாப்பிட்டு வாருங்கள். குறிப்பாய்
கடின உணவை அதாவது துரித உணவுகளை தவிருங்கள். தற்போது அதை சாப்பிடும் பழக்கம்
உள்ளவர்கள் அதிகரித்து கொண்டு இறுக்கிறார்கள். அதை குறைப்பது நல்லது. ஏனென்றால்
கல்லீரலுக்கு அதிகப் பணியை கொடுத்து விடுகிறோம். அது அதன் பணியை தாமதம் செய்வதால்
நமக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.
• ஓட்ஸ் உணவுகளை
எடுத்து வரலாம். இது கல்லீரலில் படிந்துள்ள கொழுப்புகளை கரைக்க வல்லது. அதனால்
கல்லீரலில் ஈரல் நோய் ஏற்பட வாய்ப்பை குறைக்கிறது.
• அதிகப்படியான
இனிப்புப் பொருள்களை தவிருங்கள். காரணம் சர்க்கரை கொழுப்பாக மாறி கல்லீரலில் படிய
வாய்ப்பு இருக்கிறது. அதனால் அதை தவிர்ப்பது நல்லது.
• கொட்டைகள் (nuts)
வகைகளில் விட்டமின் E உள்ளது. இது இதயத்தின் ஆரோக்யத்திற்கு நல்லது. மேலும் இது
கல்லீரல் நோய் ஏற்படாமல் இருப்பதற்கு உகந்தது ஆகிறது.
• கீரை வகைகளில் ஆண்டி
ஆக்ஸிடன்கள் உள்ளது. மொத்தத்தில் கீரையில் இல்லாத சத்துக்களே இல்லை எனலாம். அந்த
அளவுக்கு கீரையில் சத்து உள்ளது. அதனால் கீரைப் பொரியல், கீரை ஜூஸ், கீரை கடைந்து
கூட சாப்பிடலாம்.
• தவறான உணவு பழக்கமே
நோய்க்கு அடிப்படை காரணம். பர்கர், பாக்கெட் சமாச்சார ஸ்நாக்ஸ், பாட்டில் ஜூஸ்
இதையெல்லாம் தவிர்ப்பது மிகவும் நல்லது. காரம் நிறைந்த மசாலா பொருள்களை உங்கள்
உணவு லிஸ்ட்லிருந்து தூக்கி விடுங்கள். இது கல்லீரலுக்கு மட்டுமல்ல உடலின் அனைத்து
உறுப்புகளுக்குமே நல்லது.
• உடலின் இன்றியமையாத உறுப்பான கல்லீரலுக்கு நாம்
உடனடி தீர்வுக்காக உட்கொள்ளும் வலி நிவாரண மாத்திரைகள் சமயத்தில் கேடுகளை
விளைவிக்கும், இதை பழக்கப் படுத்தாதீர்கள். மருத்துவரின் ஆலோசனையை கேட்டு சாப்பிடுங்கள்.
மேலே சொன்ன அனைத்தையும் பின்தொடர்ந்தாலே
கல்லீரல் நோயில் இருந்து தப்பித்து விடலாம்னு சொன்னால் நம்புவீர்களா? உண்மை
தான்... நோய் வருவதற்கு முன்னரே வராமல் கண்டிப்பாய் எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய
முக்கிய உறுப்புகளில் கல்லீரலுக்கு எப்போதும் முக்கிய பங்கு உண்டு. நம்மை பல
வேலைகளை செய்ய சொல்லி வெறும் உணவு மட்டும் தான் சம்பளம் என்று சொன்னால் யாராவது
வேலை செய்வோமா? யோசித்து பாருங்கள். ஆனால் அப்படி தான் வேலை செய்கிறது. இந்த
கல்லீரல். பல நூறு வேலைகளையும் செய்து, அதற்க்கு மாறாக கொடுக்கும் உணவையும் ஆற்றலாக
மாற்றும் வேலையையும் செய்கிறது என்பதை நினைத்தால் வியப்பாய் தான் இருக்கிறது.
எப்போதும் சோர்வுத்தனமாக இருக்கிறது. வேலை செய்ய முடிய வில்லையா? அதுவும்
கல்லீரலின் வேலையாத் தான் இருக்கும். இது உடலின் உள்ளே பல நூறு வேலைகளை பார்ப்பது
போல் அது பழுதடைந்தால் வெளியேயும் வேலையை செய்ய ஆரம்பித்து விடும். அதனால் தான்
இந்தக் கட்டுரை பதிவிடப்படுகிறது. கல்லீரலை காப்பது கடமை.
வளர்ந்து வரும் மருத்துவ உலகில் கல்லீரல் தானம்
எளிதாக கிடைக்க ஸ்டெம் செல் மூலம் கல்லீரலை உருவாக்கி வருகின்றனர். இருந்தாலும்
நாம் நம் சொத்தை காப்பாத்துவது தான் அதை விட சிறப்பானது. மருத்துவம் வளர்வது ஒரு
புறம் என்றாலும், நாம் நல்ல முறையில் வளர்ந்தால் அது நமக்கு தேவை இல்லாத விசயமாக
ஆகிவிடும். அதை தேவை இல்லாமல் ஆக்குவதே உண்மையான வளர்ச்சி. நம்முடைய சுற்று சூழல்
தூசு, மாசு படிந்து காணப்படுகிறது இதை சுவாசிக்கும் நமக்கு இது அனைத்தும் உடலில்
செல்கிறது. நினைத்து பாருங்கள்! எவ்வளவு பெரிய குப்பைத் தொட்டியாகி நம் உடல் போய்
இருக்கும். அதை சத்தமே இல்லாமல் சுத்தம் செய்பவர் இந்த கதாநாயகர் கல்லீரல் தான்.
அவர் நமக்கு செய்த உதவிக்காவது பிரதி பலனாக நாம் அவரை நல்ல முறையில் பேணிக்
காப்போம். வணக்கம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நாளை ஒரு நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
மருத்துவ குறிப்புகள் : கல்லீரல் பற்றித் தெரிய வேண்டுமா? - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Want to know about the liver? - Medicine Tips in Tamil [ Medicine ]