நம் நாட்டில் உணவிற்காக மீன் வளர்த்தல் தொழில் நடைபெறுகிறது. பெரும்பாலானவை கடல் மீன்கள், நன்னீர் மீன்கள் மனிதர்களின் உணவிற்காக பிடிக்கப்பட்டு, ஆரோக்யத்திற்காகவே அதனை சமைத்து உண்ணபடுகிறது.
மீன்கள் பற்றி தெரிய வேண்டுமா?
நம்
நாட்டில் உணவிற்காக மீன் வளர்த்தல் தொழில் நடைபெறுகிறது. பெரும்பாலானவை கடல் மீன்கள், நன்னீர்
மீன்கள் மனிதர்களின் உணவிற்காக பிடிக்கப்பட்டு, ஆரோக்யத்திற்காகவே அதனை சமைத்து
உண்ணபடுகிறது. அந்த மீன்கள் வரிசையில் பிரதானமாக உண்ணப்படுவது சாளை மீன், நெத்திலி
மீன், கிழாத்தி
மீன், வாளை
மீன், நகரை
மீன், வஞ்சிரம்
மீன், மத்தி மீன், இறால் மீன் போன்றவை ஆகும். இதில்
நெத்திலி மற்றும் மத்தி மீன்கள் சிறந்தது ஆகும். வஞ்சிரம், கொடுவா மீன்கள் ருசியாக
இருக்கும். இறால் மீன்களில் இனிப்புச் சுவை இருக்கும்.
அயிரை மீன் குழம்பு என்றாலே நாக்கு
அதற்கு அடிமை தான். இது எல்லா இடங்களிலும் கிடைப்பது அரிது. கிராமங்களில் ஓடைகள்,
வாய்க்கால் வயல்களில், கண்மாய்களில் பிடித்து சாப்பிடலாம். அப்படி அயிரை மீனில்
என்ன பலன் இருக்கிறது. இதோ!
1. உடலில் உள்ள சர்க்கரை அளவு மற்றும்
இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
2. அயிரை மீன்களில் இருக்கும்
கொழுப்பு அமிலமானது இரத்த ஓட்டத்தை சரி செய்து சீரான முறையில் இதயத்தை செயல்பட
வைக்கும் சக்தி இதற்க்கு உண்டு.
3. இதில் உள்ள விட்டமீன்கள் கண்களின்
பார்வையை மேம்படுத்தும். மாகுலர் சிதைவு நோய்களை வராமல் தடுக்கும் சக்தியும்
உண்டு.
இந்த வஞ்சிரம் மீன்கள் ஒவ்வொரு ஊரிலும் பல்வேறு விதமான
பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதன் சிறப்பே அதிக முற்கள் இருப்பது கிடையாது.
மேலும் அதிக சுவை மற்றும் விலை கொண்டது. ஷீலா மீன்களை மசாலா உடன் சேர்த்து
எண்ணையில் பொரித்து சாப்பிட்டால் அதன் சுவையே, ஏன் அதன் சுவையை நினைத்தாலே
நாக்கில் உமிழ் நீர் சுரக்கத் தான் செய்யும். குழந்தைகளுக்கு இதை கொடுத்தால்
மிகவும் விரும்பி சாப்பிடுவர். முற்கள் இல்லாததால் அதனை கேக் துண்டு மாதிரி
எடுத்து ஆசையுடன் சாப்பிடுவார்கள். விலை அதிகம் என்றால் என்ன? உடல் ஆரோக்கியம்
தானே முக்கியம்.
பாறை மீன்கள் பட்ஜெட் மீன்கள் என்றே சொல்லலாம். சுவையில் ஷீலா
மீன்கள் போன்று இல்லாவிட்டாலும், கொஞ்சம் சுவை குறைவு என்றாலும் விலையில் நடுத்தர
மக்களில் கனிசமான இடத்தை பிடிக்கிறது.
பொரிப்பதில் வஞ்சிர மீன்களுக்கு அப்புறம் இந்த வாவல் மீன்கள்
தான். சுவை சும்மா வேற லெவலில் இருக்கும். கடற்கரை ஓரங்களில் வாழை இலைகளில் சுடச்
சுட தருவார்கள். பார்த்த அனைவருமே அந்த இடத்தை சாப்பிடாமல் கடப்பது என்பது கஷ்டமான
சூழ்நிலை தான். ஆரோக்யத்திற்கு சாப்பிடுதல் என்பது அவசியானதும் கூட.
1. மீன்கள் தான் குறைந்த கொழுப்புக்கள் உள்ள அதிகமான புரத சத்துள்ள
உணவாகும்.
2. உடலுக்கு சத்துக்களை கொடுத்து பலவித ஆரோக்கிய பலன்களை
தந்து நீண்ட நாட்கள் மனிதனை ஆரோக்யத்துடன் வலம் வரச்செய்கிறது.
3. குறிப்பாக ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால்
மூளையின் நலத்திற்கும், இதயத்தை சீர் செய்யவும் மனிதர்களை நோய்களின் பிடியில்
இருந்து தொலைவில் வைக்கிறது.
எல்லாவகை மீன்களுமே சத்து நிறைந்த ஒன்றாகும். அடிக்கடி உணவில்
மீன்களை சேர்ப்பது மிகவும் நல்லது.
பொதுவாகவே மீன் குழம்பு என்றாலே தமிழர்களின் உணவுப்
பட்டியலில் முதலிடம் தான். அதன் வாசத்தை வைத்தே எதையும் சாப்பிடலாம். அப்படி
சுவையாகவும், அதை வைத்து தான் சாதம் அதிகம் சாப்பிடுவர்களும் இருக்கிறார்கள்.
சங்கரா, விலை மீன், பாறை மீன்கள் குழம்பில் இருத்தல் சூப்பராக இருக்கும். விரால்
மீன் குழம்புக்கும் தனி ரசிகப் பட்டாளம் உண்டு. மசாலாவை அம்மியில் வைத்து அரைத்து,
ஒரு நாலு தக்காளி, கொஞ்சம் புளி, ஒரு இள மாங்காய் கொஞ்சம் நறுக்கி போட்டு, சின்ன
வெங்காயம், பூண்டு சேர்த்து குழம்பு வைக்கும் போது மணக்காமல் இருக்குமா என்ன? பலமான
இதயம் வேண்டுமா? மீன்கள் சாப்பிடுங்கள். அதுவும் வாரம் இருமுறையாவது.
இதற்கு பெரும்பாலும் மீன்களின் செவுள்களை தொட்டு நிமிர்த்திப் பார்த்து விட்டு தான் அனுமானம் செய்வோம். ஒருவேளை
செவுள்கள் ஆனது இரத்த நிறத்தில் இன்றி வெண்மை
கலந்த வெளிர் நிறத்தில் இருந்தால் நீங்கள் அதை கெட்டுப் போய் விட்டது என்று உறுதி செய்து
விட வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம், இரசாயனங்கள் பூசப்பட்டு சந்தையில் வந்த மீன்களின் செவுள்களும்
ரத்த நிறத்தில்தான் காணப்படும். அப்படி இருந்தால் செவுல்களைப்
பிளந்து அந்த இடத்தை தொட்டுப் பார்க்கும் போது உங்களுக்கே தெரியும் உங்கள் கைகளில்
ஓட்டும் பிசினைப் போன்று ஒருவித கூழ்மப் பொருளைத் தொடுவது போல நீங்கள் உணர முடிந்தால்
மட்டுமே அந்த மீன்கள் ஃபிரெஷ் ஆகும்.
மேலும் மீன்களை வாங்கும்போது நீங்கள் மீன்களின் சதைப்பகுதியை உங்கள் கை
விரல்களால் அழுத்திப் பாருங்கள். அப்படிப்
பார்க்கும்போது மீன் விரைப்பாகவும், தடிமனாகவும் இருத்தல் வேண்டும். சும்மா
தொளதொளவென்று இருக்குமென்றால் கெட்டுப்போன மீன்கள் தான் அவைகள். என்று ஊர்ஜிதம்
செய்துக் கொள்ளலாம்.
மீன்களின் தலைப்பகுதியைக் தூக்கிப் பார்க்கும் போதே, மீனின்
வால்பகுதி ஆனது கீழே தொய்ந்து, சும்மா தொங்கிய நிலையில்
இருக்குமானால் கெட்டுப்போன மீன்கள் என்று சொல்லலாம். நல்ல மீனாக இருந்தால்
மீனின் தலைப்பகுதியைத் தூக்கும்போது வால் பகுதி சற்று விரைப்பாகத் தெரிய வரும்.
இன்னும் சில மீன்களில் ஃபார்மலின் ரசாயனம் பூசப்பட்டால் அந்த மீன்களில் இருந்து மருந்து வாடை வரும் அதை வைத்தே ரசாயனம் கலக்கப்பட்டது எனக் கண்டுபிடித்து விடலாம். மீனின் கண்கள் பளபளப்பாக இருக்க வேண்டும். மங்கிய வெள்ளை நிறத்திலோ மீனின் கண்கள் இருக்குமேயானால் அது நீண்ட நாட்கள் ஐஸில் வைக்கப்பட்ட மீன் தான் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கடல் மீன்களுக்கு மட்டுமல்ல, ஆறு,
குளங்களில் பிடித்த மீன்களையும் மேற்கூறிய வகைகளில் பரிசோதித்துப்
பார்த்தே வாங்குதல் உத்தமம் ஆகும்.
பொதுவாகவே மீன்களைச் சுத்தம்
செய்ததும் உப்பு, மஞ்சள் தூள் போட்டு மூன்று, நான்கு
முறை அலசினாலே போதும். எந்தவித ரசாயனங்கள் பூசப்பட்டிருந்தாலும்
அவற்றால் ஏற்படுகிற விளைவுகள் குறைவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
ஆரோக்கியம்: மீன்கள் : மீன்கள் பற்றி தெரிய வேண்டுமா? - அயிரை, வஞ்சிரம் அல்லது ஷீலா, பாறை, வாவல், மீன் ஏன் சாப்பிட வேண்டும்? [ ஆரோக்கியம் ] | Health: Fishes : Want to know more about fish? - Why eat millet, vanjiram or sheela, rock, waval, fish? in Tamil [ Health ]