சிரிப்பதற்கு வாய்ப்பு வரும்போதெல்லாம், வாய்ப்பை தவறவிடாமல் சிரித்து விட வேண்டும். சந்தோஷமாக இருந்தால் வாய் விட்டு சிரித்து விடுங்கள்..... சிரிப்பை அடகு வைத்தால் சீக்கிரம் நோயாளி ஆகி விடுவீர்கள்..!!
வாழ்வின் நிலை அறிய வேண்டுமா?
வாழ்வில் உண்மையாக
இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.!.
சில சமயம், உண்மையை
வெளிப்படுத்துவதற்குப்பதிலாக, வாயை மூடிக் கொண்டு
இருந்தால்....
அது, சில இடங்களில், வெற்றி பெறுவதற்கும், பல இடங்களில்,
அவமானப்படாமல்
இருப்பதற்கும், உதவியாக இருக்கும்..!!.. ✍
சிரிப்பதற்கு வாய்ப்பு
வரும்போதெல்லாம்,
வாய்ப்பை தவறவிடாமல்
சிரித்து விட வேண்டும்.
சந்தோஷமாக இருந்தால்
வாய் விட்டு சிரித்து விடுங்கள்.....
சிரிப்பை அடகு வைத்தால்
சீக்கிரம் நோயாளி ஆகி விடுவீர்கள்..!!
சவால்களை
ஏற்றுக்கொள்ளுங்கள்,
அப்போதுதான் வெற்றியின்
உண்மையான மகத்துவத்தை உணர முடியும்!
புத்தகங்களும்
பேச்சுகளும் மனிதர்களை மாற்றுமெனில்
இவ்வுலகம் சுவர்க்கமாக
ஆகியிருக்கும்.
சலித்துக் கொள்பவன்
ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான்..
சாதிப்பவன் ஒவ்வொரு
ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்..
தானாக தவறை உணராத
எவரையும் நாமாக திருத்தி விட முடியாது...
அப்படி முயற்சிப்பது
கல்லிடம் கதை சொல்வதற்கு சமம்...!!
நூலகத்திற்குப் போ...
நீ எவ்வளவு முட்டாள்
என்பதை...
புத்தகம் சொல்லும்.
பத்துப் புத்தகங்களோடு
பழகிப் பாருங்கள்,
நீங்கள் பதினோராவது
புத்தகமாகப் படிக்கப்படுவீர்கள்.
நாம் நாமாகவே
இருப்போம்..
மற்றவரின் செயல்
நம்மைப் பாதிக்காது.
ஆர்வம் குறையும் வரை...
அத்தனை செயலும் அதிசயமாக
தான் காட்சியளிக்கிறது!
அவமானங்களைப்
புறந்தள்ளினால்தான் உங்களின் வெற்றியை நிலைநாட்ட முடியும்.
ஒரு மனிதன் விழாமலே
வாழ்ந்தான் என்பது ஒரு வகை வெற்றி, விழுந்த போதெல்லாம் எழுந்தான்
"பலமடங்கு சத்தியுடன்” என்பது மிகப் பெரிய வெற்றி.
இனி கஷ்டத்தை கடந்து
வந்தேன் என்று சொல்லாதீர்கள். எந்த கஷ்டத்தையும் கடந்து போவேன் என்று சொல்லுங்கள்.
தோல்வி பயப்படும் வெற்றி பணியும்.
தூங்காத இரவுகள்
இருக்கலாம். ஆனால் விடியாத இரவுமில்லை. முடியாத செயலுமில்லை முயன்று பாருங்கள்
வெற்றிக்கான பாதை தானாக திறக்கும்.
Align Your Focus with the Solution, Not
With the Problem.
கையில் மிஞ்சியதைப் பாதுகாத்து
வைத்துக் கொள்வதைப் போன்று ஆதாயம் வேறில்லை.
சின்ன சின்ன செலவுகளை குறையுங்கள். காரணம், எவ்வளவு பெரிய
கப்பலையும் சிறிய ஓட்டை
மூழ்கடித்துவிடும்.
வலிமை உள்ளபோதே சேமிக்கப் பழகுங்கள். கடைசியில் யாரும் கொடுத்து
உதவமாட்டார்கள்.
நேர்மையாக உழைத்து பணத்தை சம்பாதிக்கிறவர்கள் சாதாரண மனிதர்கள்.
அவ்வாறு சம்பாதிக்கிற பணத்தை, எதிர்கால வசதிக்காக, பாதுகாப்பாக சேமித்து
வைப்பவர்கள் மாமனிதர்கள்.
இனிமையான இந்த காலை நேரத்திற்கு நன்றி.
மற்றுமொரு இனிய நாளை அளித்த பிரபஞ்சத்திற்கு நன்றி.
இன்றைய தினம் மிகவும் மகிழ்ச்சியானதாக அமைகிறது.
இன்று பல நல்ல வாய்ப்புகள் என்னைத் தேடி வருகின்றன.
இன்று நான் சந்திக்க இருக்கும் அனைத்து மனிதர்களும் மிகவும்
அன்பானவர்கள்.
இன்று நான் அனைவரிடமும் அன்பை மட்டுமே பரிமாறிக் கொள்கிறேன்.
இன்று என்னை சுற்றி அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும்
நிறைந்து இருக்கும்.
இன்று நான் மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன்.
இன்று எனக்கு கிடைக்கும் அனைத்திற்கும் நன்றி! நன்றி! நன்றி!
🏛🔹🔸🌹✍🌹🔸🔹🏛
♻ இந்தத் தலைப்பையே உங்களுக்குள் ஒருமுறை கேட்டுப் பாருங்கள்.
வாழ்க்கை என்பது தான் என்ன..?
♻ உயிரோடு இருப்பதா?
மகிழ்ச்சியாக இருப்பதா?
பணம், புகழைத் தேடி தலைதெறிக்க ஓடுவதா?
தோல்விகளில் கற்றுக் கொள்வதா?
வெற்றிகளில் பெற்றுக் கொள்வதா?
தன்னலமற்ற அர்ப்பணிப்பா?
♻இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாகக் கூற முடியாவிட்டாலும், பிறந்தவர் அனைவரும்
வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில்உள்ளோம்.
♻வாழ்க்கை என்பது ஓர் அனுபவம்.ஆளுக்கு ஆள் மாறுபடும். சுகமோ துக்கமோ அனுபவம் நம்மைப் பலப்படுத்துகிறது., காயப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, அழ வைக்கிறது.
♻வாழ்க்கையைப் பற்றி தீர்மானமான விளக்கம் எதுவும் இல்லாவிட்டாலும், வாழ்க்கையின்
பிரச்சினைகளுக்கு மனோபலம் ஒன்று மட்டுமே தீர்வாக அமைகிறது.
♻ ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவங்களே அவர்களின் வழிகாட்டி. அனுபவங்களிலிருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
♻ அப்படிக் கற்றுக் கொண்டவன் வெற்றியடைகிறான். கற்றுக் கொள்ளாதவன் தவிக்கிறான்.
♻ நம்பிக்கை எனும் வானவில் நம்மிடம் எப்போதும் இருக்க வேண்டும். வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது. நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது.
♻ ஒவ்வொரு மனிதனின் கையிலும் அழகான வாழ்க்கை இருக்கிறது. அதை வளப்படுத்தும் நம்பிக்கை எனும்
வானவில் தான் தோன்ற மறுக்கிறது.
♻ அப்போது வாழ்க்கை வெறுமை ஆகிறது. அந்த வெறுமையை நிரப்ப யாராலும் முடியாது.
♻ நாம் நினைக்கும் எண்ணங்கள் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்.
♻ அந்தப் பாசிடிவ் எண்ணங்கள் நம் சூழ்நிலைகளை மாற்றியமைத்து நம்மை வெற்றிப் பாதையில் அழைத்துக் செல்லும்.
♻ நம் எண்ணம் ஒருநாள் செயலாகும் போது தான் அந்த எண்ணத்தின் வலிமை புரியும். நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாக மாறி விடுவோம்.
😎 ஆம்.,நண்பர்களே..,
🏵நம்மைவிட உடலில் பலசாலி யானை
நம்மை விட வேகத்தில் சிறந்தது குதிரை
நம்மை விட உழைப்பில் சிறந்தது கழுதை.
⚽இப்படி மிருகங்கள் நம்மை விடப் பலமடங்கு பலசாலிகளாக இருந்தாலும், நாம் தான் இவைகளை அடக்கி ஆள்கிறோம்.காரணம் நாம் மட்டுமே மனோபலம்
கொண்டவர்கள்
நமக்கு ஏற்படுகிற பிரச்சினைகளும் அப்படித் தான். அதனை அடக்கியாளும்
சக்தி நம்மிடம் உள்ளது.......
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
தன்னம்பிக்கை : வாழ்வின் நிலை அறிய வேண்டுமா? - வாழ்க்கை என்பது என்ன? [ ] | self confidence : Want to know the status of life? - What is life? in Tamil [ ]