சர்க்கரையின் அளவை குறைக்க வேண்டுமென்றால் முதலில் அதன் அளவை அதிகரிக்க விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
சர்க்கரை நோயின் அளவை குறைக்க வேண்டுமா?
சர்க்கரையின்
அளவை குறைக்க வேண்டுமென்றால் முதலில் அதன் அளவை அதிகரிக்க விடாமல் பார்த்துக்
கொள்ளவேண்டும். எப்போதும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காதபடி ஒவ்வொரு வேளை
உணவும் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடும் உணவும் ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும்.
நம் உடலில் சர்க்கரையின் அளவு 80
முதல் 120 வரை இருக்க வேண்டும். தீமை தரும்
உணவோ அல்லது அதிகப்படியான உணவோ ஒரு சர்க்கரை நோயாளி சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரையின்
அளவு 300க்கு மேல் செல்லும் போது உடலில்
உள்ள எல்லா உறுப்புகளும் பாதிப்படைந்து பலகீனமடைகிறது. எப்படி என்றால், நாம் சமையல் செய்கிறோம். அந்த சமையலுக்கு
பத்து கிராம் உப்பு சேர்க்க வேண்டும். நாற்பது கிராம் உப்பை அந்த உணவில் சேர்த்தால்
நாம் அதை சாப்பிட முடியுமா? உப்பு
சேர்த்து சமைக்கும் உணவு நமக்கு பயன்படுகிறது. அதுபோய் நமது ரத்தத்திலும் சர்க்கரையின்
அளவை அதிகரிக்கவிடாமல் உணவுகளை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் அடைகிறது.
சர்க்கரையின்
அளவு அதிகரிக்கும் போது உடலில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். சர்க்கரையின் அளவு
அதிகரிக்கும் போது அதிகரிப்புக்கு தக்கபடி சிறுநீரின் வழியாக நாம் சாப்பிட்ட உணவுகளின்
சத்துக்கள் வெளியேறும். இப்படி சிறுநீரின் வழியாக சாப்பிட்ட உணவுகளின் சத்துக்கள் தினமும்
வெளியேறுவதால் உடலுக்கு தேவையான சக்தி கிடைப்பதில்லை. அதனால் தான் மேலும் மேலும் உடல்
பலவீனமடைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி
நாளுக்கு
நாள் உடலில் குறைகிறது.
சிலர்
சமைத்த சைவ உணவுகளை ஒரு அளவுடன் சர்க்கரையின் அளவை அதிகரிக்காதபடி சாப்பிடுவார்கள்.
காபி டீயும் சாப்பிடுவார்கள். அவர்களுக்கு சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும்
உடல் பலகீனமாகத் தான் இருக்கும். இவர்கள் சாப்பிடும் உணவு சமைத்து கொல்லப்பட்டவை. அதனால்
தான் உடல் பலகீனமடைகிறது. இவர்கள் மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். இயற்கை
உணவும், சமைத்த உணவுடன் சேர்த்து சாப்பிட
கொடுக்கும் இயற்கை உணவுகளும் சர்க்கரையின் அளவை சிறிதும் அதிகரிக்க விடாது. இதனால்
சிறுநீரின் வழியாக சாப்பிட்ட உணவுகளின் சத்துக்கள் சிறிதும் வெளியேறாது. உணவின் சத்துக்கள்
உடலில் அப்படியே சேமிக்கப்படும்.
உயிர்ச்சத்துள்ள
உணவுகளை சரியான நேரப்படி சரியான அளவுப்படி மூன்று வேளையும் சாப்பிடுவதாலும், நோய்களின் பாதிப்புக்கு தக்கபடி
எட்டு வேளை மூலிகை கொடுப்பதாலும் தான் சர்க்கரை நோயாளிகளின் உடல் பாதிப்புகள் பலகீனங்கள்
படிப்படியாக குறைந்து உடல் புதிய சக்தியை பெறுகிறது. சாப்பிடும் ஒவ்வொரு வேளை உணவும்
சர்க்கரையை அதிகரிக்கச் செய்யாத உணவுகளாக இருக்க வேண்டும். சர்க்கரையின் அளவை அதிகரிக்கவிடாத
முதல் உணவு தேங்காய்தான். இங்கே மூன்று வேளை உணவுடனும் தேங்காய் அதிகமாக கொடுக்கப்படும்.
தேங்காயை வைத்துத்தான் சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தில்லாத மகிழ்ச்சியான ஆரோக்கியமான
வாழ்வு தருகிறோம். சர்க்கரை நோயாளிகளின் கடவுள் தேங்காய். தேங்காய் கடவுளின் துணை தினமும்
ஆயுள்வரை தேவை, மற்ற மருத்துவர்கள் தேங்காய் சாப்பிடாதீர்கள்.
அதில் அதிக கொழுப்பு இருக்கிறது
என்பார்கள். கொழுப்பு என்று சொல்லமாட்டார்கள். மக்களை பயமுறுத்தும் வகையில் கொலஸ்ட்ரால்
என்று சொல்வார்கள். இதனால்
தேங்காயில்
கொலஸ்ட்ரால் இருக்கிறது என்னும் பயம் மக்கள் மனதில் பதிவாகி விட்டது. ஒரு சர்க்கரை நோயாளிக்கு
இரண்டு தேங்காய்களை ஒரு வேளை
உணவாக
எடுத்து ஒன்றரை மணிநேரம் சென்றபின் பரிசோதனை செய்து பார்த்தால் ரத்தத்தில்
சர்க்கரையின் அளவு சரியான அளவில் இருக்கும். தேங்காய், முளைக்கட்டிய தானியங்கள் ஐந்து வகையான
பழங்கள் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் சென்றபின் பரிசோதனை செய்து பார்த்தாலும் சர்க்கரையின் அளவு சரியாக இருக்கும். ஒவ்வொரு
வேளையும் பலவிதமான சமையல்
உணவுகளை
சாப்பிட்டாலும் சர்க்கரையின் அளவு சரியாக இருக்க வேண்டும். சர்க்கரையின் அளவும் அதிகரிக்கக்கூடாது.
உடலுக்கு புதிய ரத்தத்தையும் வலிமையையும் கொடுக்கும் உணவுகளாக இருக்க வேண்டும். சர்க்கரை
நோயாளிகள் இந்த உணவு வகைகளை அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும். அதை கற்றுக் கொடுக்கும்
கல்விக்கூடம் தான் இயற்கை மருத்துவ இல்லம். சர்க்கரை நோயாளிகள் ஆயுள்வரை சர்க்கரையின்
அளவை அதிகரிக்கவிடாத உணவுகளாக சாப்பிட்டு வாழ வேண்டும். சமையல் உணவுகளிலும் இயற்கை
உணவுகளிலும் சர்க்கரையை சரியான அளவில் வைத்து ஆயுள்வரை நோயில்லாமல் வாழவைக்கும் உணவு
வகைகள் பல இருக்கிறது அவைகளை தெரிந்துகொள்ள இயற்கை மருத்துவத்தை நாடுங்கள். சாப்பிடும் உணவு சர்க்கரையின் அளவை
அதிகரிக்கச் செய்யக்கூடாது. உடலுக்கும் முழு ஆரோக்கியத்தை கொடுத்து, ஆயுள்வரை எந்த மருத்துவ உதவியையும்
நாடாமல் இருக்க வேண்டும். மருத்துவத்திற்கென்று ஒரு ரூபாய் கூட செலவழிக்கக் கூடாது.
குடும்ப வாழ்வு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட உணவுகளை சர்க்கரை நோயாளிகள்
தினமும் சாப்பிட்டு வரவேண்டும். இந்த உணவுகளை கண்டுபிடிப்பது சாதாரண காரியமல்ல. ஒவ்வொரு
வேளை உணவிலும் சர்க்கரையின் அளவு எவ்வளவு இருக்கிறது. எந்த உணவுகள் சர்க்கரையின் அளவை
அதிகம் கூட்டுகிறது. எந்த உணவு குறைவாக கூட்டுகிறது. எந்த அளவு சாப்பிட்டால் சர்க்கரையின்
அளவு சரியாக இருக்கும் என்பதை முழுமையாக கண்டுபிடிப்பதற்கு பல பரிசோதனைகள் செய்து
பார்த்த அனுபவம் மிக்க இயற்கை மருத்துவர்கள் இருக்கிறார்கள்.
நீங்கள்
சாப்பிட்டபின் உங்கள் உடலின் சர்க்கரையின் அளவை தெரிந்து கொள்ள ரத்தப் பரிசோதனை நிலையம்
சென்று பரிசோதனை பார்த்து தெரிந்து கொள்கிறீர்கள். இயற்கை மருத்துவர்கள் ரத்தப் பரிசோதனை
பார்க்காமலேயே சர்க்கரையின் அளவை சரியாக சொல்வார்கள். ஒரு சர்க்கரை நோயாளிக்கு வெறும்
வயிற்றில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால்
போதும். அவர் என்ன உணவு சாப்பிடுகிறார் அவர் சாப்பிடும் உணவின் அளவு எவ்வளவு என்பதை
நான் பார்த்து விட்டால் சர்க்கரையின் அளவை சரியாக சொல்லிவிடுவார்கள். உதாரணமாக இயற்கை மருத்துவம் பார்த்துக்
கொண்டிருக்கும் நான்கு சர்க்கரை நோயாளிகளுக்கு உணவு கொடுக்கிறார்கள். நான்கு பேர்களுக்கும்
ஒரே வகையான உணவுகள் அல்ல. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு உணவுகள். அவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன்
ஒவ்வொருவருக்கும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இவ்வளவு தான் இருக்கும் என்பதை பரிசோதனை
செய்யும் முன்பே சரியாக சொல்லி விடுவார்கள். அதன்பின் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம்
சென்ற பின் நால்வருக்கும் ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தால் ரத்தத்தில் சர்க்கரையின்
அளவு இயற்கை மருத்துவர்கள் சொன்னபடி சரியாக இருக்கும். அவர்களால் எப்படி சொல்லமுடிகிறதென்றால்
உணவு கொடுத்தவர்களே அவர்கள் தானே. சரியாக உணவுகளின் தன்மையும் சாப்பிட்ட அளவும் அவர்களுக்குத்
தெரியும். அதனால் தான் மருந்தில்லாத,
மருத்துவ
உதவியை நாடாத, மருத்துவ
செலவில்லாத மகிழ்ச்சியான வாழ்வை இயற்கை மருத்துவர் ஒருவரால் தான் தர முடியும். என்று உரிமையுடன் சொல்கிறேன். நம்பினார்
கெடுவதில்லை.
இயற்கை
மருத்துவரின் அணுகுமுறை அன்பாக இருக்குமா?
பராமரிப்புகள்
பாசத்துடன் இருக்குமா? சுவையான
உணவுகள் கொடுப்பார்களா? மருத்துவத்திற்கு
செலவழிக்கும் பணம் வீணாகி விடுமா? முழுமையான
ஆரோக்கியம் கிடைக்குமா? அல்லது
இதுவும் ஏமாற்றி பணம் பறிக்கும் மருத்துவமா?
இப்படி
எந்தவித குழப்பமும் நீங்கள் அடைய வேண்டாம். இயற்கை மருத்துவத்தின். உண்மையான செயல்பாட்டை
தெளிவாக எல்லோருக்கும் புரியும்படியாக எழுதியிருக்கிறேன். முழு நம்பிக்கையுடன் அவர்களை
அணுகலாம். இயற்கை அன்னையிடம் இருக்கும் பாச உணர்வு இருக்கும். நம்பி வருபவர்களுக்கு
இனிய நண்பனாக இருந்து மருத்துவப்பணி செய்வார்கள். நீங்களும் நல்ல முறையில் முழு ஒத்துழைப்பு
கொடுக்க வேண்டும். அங்கே பழகுவது நோயாளி மருத்துவர் என்று கிடையாது. நண்பர்களாகத் தான்
பழகுவார்கள். மனக்குழப்பம் சிறிதும் வேண்டாம். நீங்கள் வரும் போது நோயாளியாக வருவீர்கள்.
வந்தபின்பு ஆரோக்கியமான மனிதர்களாக மாற்றப்படுவீர்கள். உங்கள் ஊருக்கு செல்லும் போது
கடவுளாக செல்கிறீர்கள். இதன் விளக்கம். மனித வாழ்வைப் பற்றிய கருத்துக்களை உலகில் பலரும்
பலவிதமாக சொல்லலாம். இயற்கை ரீதியான உண்மைக்கருத்தும் என்னுடைய கருத்தும் என்னவென்றால்
இயற்கையால் படைக்கப்பட்ட மனித இனமும் மற்ற அனைத்து உலக உயிர்களும் வாழப்பிறந்தவைகள்
தான். மனிதர்கள் எவ்வுயிரையும் துன்புறுத்தவும், அடிமைப்படுத்தவும், கொல்லவும்,
திங்கவும்
கூடாது. இயற்கை மருத்துவம் வருவதற்கு முன் மாமிச வகைகளும் மாட்டுப்பால் பொருள்களும்
சாப்பிட்டிருப்பார்கள். இயற்கை மருத்துவ இல்லத்தில் தங்கியிருக்கும் நாட்களில் பூமியில்
விளையும் உணவுகளான இயற்கை உணவுகளும் சைவ உணவுகளும் சாப்பிடுவார்கள். என்னுடைய கருத்துப்படி
பூமியில் விளையும் உணவுகளை மட்டும் உண்பவர்கள் தான் மனிதர்கள். கடவுள்கள். அப்படியானால்
இங்கிருந்து செல்லும்போது நீங்கள் கடவுள்தானே? இயற்கை மருத்துவத்தில் நோய்
சரியான பின்பும் ஆயுள் உள்ளவரை கடவுளாக நீங்கள் வாழவேண்டும். ஒரு உண்மையை தெரிந்து
கொள்ளுங்கள் மற்ற எல்லா நோயாளிகளுக்கும் இயற்கை மருத்துவத்தின் உணவு முறைகளை எளிமையாக
சொல்லிவிடலாம் சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டும் அவர்களுக்கு அருகில் இருந்தே அமர்ந்து
சாப்பிடச் செய்து உணவுப்பழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் இதுவரை சாப்பிடாத
உயர்ச்சத்துள்ள உணவுகளையெல்லாம் சாப்பிடச் செய்து உடலுக்கு புதிய சக்தியை கொடுக்க வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் மட்டும் ஆயுள்வரை சரியான உணவுப் பழக்கத்தில் வாழ வேண்டும் என்ற
கட்டாயம் இருப்பதால் நீங்கள் பத்து நாட்கள் இயற்கை மருத்துவ இல்லத்தில் தங்குவது உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
சித்தா மருத்துவம் : சர்க்கரை நோயின் அளவை குறைக்க வேண்டுமா? - சித்தா மருத்துவம் [ ஆரோக்கியம் ] | Siddha medicine : Want to reduce diabetes? - Siddha medicine in Tamil [ Health ]