• விலைமதிப்பற்ற தரமிக்க தூக்கத்தை மனிதன் பெறுவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? • எதையெல்லாம் செய்யக் கூடாது? • அந்த ஆழ்ந்த தூக்கம் என்னவெல்லாம் பலனைத் தருகிறது?
தூக்கமின்மை நோயின் ஆரம்ப அறிகுறியா?
ஆரோக்யத்தின் எதிரியா?
ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா?
முதலில் தூக்கம் என்பது அவசியம் வேண்டும் என்பதை மனதில் மிகவும் தெளிவாக பதியுமாறு,
உங்களுடைய வாழ்க்கை முறைக்கு தகுந்தவாறு,
தேவைப்படும் தூக்க நேரத்துக்கு ஏற்றவாறு அமைத்து கொள்ளுங்கள். ஆனால் சராசரியாக குறைந்தபட்சம்
இரவு 7 – 8 மணி நேரம், மதியம் நேரம் கிடைத்தால் 15 – 30 நிமிடங்கள் லேசா கண் அசந்தோம் என்று சொல்வோமே அந்த ஒரு
குட்டி தூக்கம் என்பதும் அவசியமானதே. தினமும் வயதுக்கு ஏற்றவாறு 2 – 5 லிட்டர் தூய
தண்ணீர் குடித்தல் வேண்டும். இதை மட்டும் செய்தாலே நாம் நோயின்றி நீண்ட வருடங்கள்
வாழலாம் என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அது தான் உண்மையும் கூட. இது
அனைவருக்கும் தெரியும். பின்பற்றுதலே சிரமமாக உள்ளது.
தூங்குதல் என்பது எளிது. தூக்கமின்மை ஆயுளை
குறைக்கிறது. அது எப்படி? நாம் உறங்குகின்ற பொழுது நம்முடைய உறக்கத்தில் பல
இரகசியங்களும் உறங்குகிறது. அப்படி தூக்கத்தில் என்ன தான் நடைபெற்று கொண்டிருக்கிறது?
• நாம் குறைந்த நேரம் தூங்கினாலும் தரமானதொரு
தூக்கத்தை பெறுவது எப்படி?
• விலைமதிப்பற்ற தரமிக்க தூக்கத்தை மனிதன்
பெறுவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்?
• எதையெல்லாம் செய்யக் கூடாது?
• அந்த ஆழ்ந்த தூக்கம் என்னவெல்லாம் பலனைத் தருகிறது?
ஆழ்ந்த தூக்கங்கள் அளப்பரிய ஆற்றலையும், விலை
மதிப்பற்ற நல் ஆரோக்யத்தையும் கொடுத்து மனிதனை அளவற்ற சாதனைகளைச் செய்ய தயார்படுத்துகிறது.
தற்காலங்களில் ஆழ்ந்த தூக்கம் என்பது கேள்விக்குறியாகிப் (?) போய்க் கொண்டிருக்கிறது. அதை விடுங்க... தூக்கம் என்பதே வருகிறதா? அதுவே
முதலில் ஒரு கேள்வி? சர்க்கரை வியாதிக்காரர்களிடம் ஏன் மற்ற நோய்களினால்
அவதிப்படும் மனிதர்களிடமும் கேட்டால் தூக்கமே வரமடுக்கிறது என்று சொல்வார்கள். நான்
சொல்ல கேள்விப்பட்டு இருக்கிறேன். நன்றாக தூங்கினால் இப்படி நிலை வருவதை தவிர்க்கலாம்.
நாம் ஏன் தூக்கத்திற்காக இப்படி போராடுகிறோம். அது எளியமுறையில் எல்லாரும்
பெறக்கூடிய விஷயமில்லையா? என்று நீங்கள் கேட்கும் கேள்வி புரிகிறது? அதற்க்கு முக்கிய
காரணம் பலதரப்பட்ட மன அழுத்தங்கள், வியாதிகள், புதுசு புதுசா பெயரில் வரும்
நோய்கள், கண்ணுக்கு புலப்படா கிருமிகளால் வரும் தொற்று வியாதிகள், வாயிலே
நோய்களின் பெயரைக் கூட சொல்ல முடியா வித்தியாசமான நோய் பெயர்கள், அதை பற்றிய
பயத்தில் வரும் பீதிகள், இது போன்று சொல்லிக் கொண்டே, அடுக்கிக் கொண்டே போகலாம். சரி
இதை எப்படி நிவர்த்தி செய்து, இதிலிருந்து தப்பிப்பது? இது போன்ற கேள்விகளுக்குப் பதிலின்
தொகுப்பாக இந்தக் கட்டுரை உங்களுக்காகப் பதிவிடப்படுகிறது. படித்துப் பயன்பெறுவது
மட்டுமே தமிழர் நலத்தின் முன்னுரிமை மற்றும் வெற்றியாகக் கருதப்படுகிறது.
ஒவ்வொன்றாகப் பார்போம்.
மன அழுத்தம் :
இன்றைய காலச் சூழ்நிலைகளில் மன அழுத்தம் சர்வ
சாதாரணமாக ஒவ்வொருவரிடமும் உலவிக் கொண்டிருக்கிறது. வீணான மன அழுத்தம், தேவையே
இல்லாத மனச்சோர்வு, உடலுக்கு ஒத்து கொள்ளாத துரித உணவு வகைகள், செரிமான பிரச்சனை
தரும் ஆகாரங்கள் இன்னும் இது போன்ற தேவையற்ற மது மற்றும் போதை பொருள்கள் நமது அன்றாட
தூக்க சுழற்சியை பெரிதும் பாதுகாக்கிறது.
இல்லறம் :
ஒவ்வொரு இல்லங்களிலும் மகிழ்ச்சி வரவேன்றுமென்றால்
இல்லற உறவு நல்ல முறையில் சந்தோசமாக, ஆதர்ஷ தம்பதியாய் வலம் வர கணவன் மனைவிக்குள் கண்டிப்பாக
புரிதல் தன்மை இருத்தல் வேண்டும். தம்பதிகள் தங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர்
விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்து, மற்றவர்கள் முன்னிலையில் கணவன் மனைவியையும்,
மனைவி கணவனையும் ஒருவருக்கொருவர் விட்டுகொடுக்காமல் தனக்கு வாய்த்தவர்களே
மிகப்பெரிய வரமாகக் கருதினால் சந்தோசம் என்னும் நதி மகிழ்ச்சி என்கிற கடலில்
கலக்கும் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் தற்போது அந்த இடத்திலிருந்து வெகுத் தொலைவில்
போய்க் கொண்டிருக்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மையும் கூட. ஒரு நகைச்சுவைக்காக கணவன்
மனைவிக்குள் நடந்த உரையாடலை சொல்கிறேன். வரலக்ஷ்மி விரதம் அன்று கணவன் மனைவிடம்
கேட்கிறார். வரலக்ஷ்மி விரதம் ஏன் கொண்டாடுகிறீர்கள் என்று. அதற்க்கு மனைவி உடனே
அடுத்த வினாடிக்குள் படார்னு உங்களுக்காகத் தான் என்று. நீங்க நோய் நொடியின்றி
ஆரோக்யமாக 100 வருடம் வாழ வேண்டும் என்று தான் கொண்டாடுகிறோம். அதற்க்கு நக்கலாக
கணவன் சொல்கிறார் நீங்க உங்க வாயை மூடி சும்மா இருந்தாலே நாங்க நூறு வயசுக்கும்
மேலயும் வாழ்வோம். அனால் நீங்க இதை செய்யாமல் எதையெல்லாமோ செய்கிறீர்கள் என்று
உரையாடல் நக்கல் நையாண்டியுமாக செல்கிறது. இத மாதிரியான உரையாடல்கள் வருவதிற்கு
காரணம் கணவன், மனைவிக்குள் உள்ள குறைபாடு மற்றும் புரிதல் இல்லாமை இன்னும்
காரணங்கள் பல.... இருவரும் பேசும் இடத்தில
பேசியும், பேசக்கூடாத இடத்தில சூழ்நிலைக்கு ஏற்றவாறு புரிந்து கொண்டு சிவனேன்னு
சும்மா இருத்தலே போதுமான மகிழ்ச்சியை இல்லத்தில் அழைத்துக் கொண்டு வரும். இல்லம்
மகிழ்ச்சிப் பாதையில் பயணிக்கும். செழிக்கும். வளரும். தலைமுறைகள் விருத்தியாகும்.
தாம்பத்யம் என்பது கணவன், மனைவி தங்களுக்குள், ஒருவருக்கொருவர்
மனம் இடம்பெயரும் ஒரு அற்புதமான, புனிதமான, இரகசிய, அடுத்த தலைமுறையை ஏற்படுத்திக்
கொடுக்கும் ஒரு அற்புதமான நெகிழ்ச்சியான நிகழ்ச்சி. அந்த தருணங்களில் இன்பங்கள் ஆற்பரிக்கும்.
அணைக்க அணைக்க இன்பத்தை அள்ளி அள்ளி கொடுத்து கொண்டே இருக்கும். எப்போதும்
குறையாத, எதிர்பார்ப்பும், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மேலும் மேலும்
எதிர்பார்ப்பை எதிர்பார்க்க வைக்கும் என்றும் குறையாத ஒரு அமுதசுரபி என்னும் அட்சய
பாத்திரம். அதீதக் காதல் என்பது ஒரு வகை காமத்திற்கு இழுத்து கூட்டிச் செல்லும்.
காமத்தை வெல்ல அதீதக் காதல் தேவை என்பதே நான் சொல்ல வரும் கருத்து. ஆனால் காதலில் வெற்றி
அடைவதற்கு குறைந்த காமம் வேண்டும் அவ்வளவே!
ஏன் இந்த தாம்பத்யத்தை இவ்வளவு விலாவரியாக
விவரிக்கிறேன் என்று பார்க்கிறீர்களா? விசயமிருக்கிறது.. என்னவென்றால் இது ஒரு ஆழ்ந்த
தூக்கத்தை ஏற்படுத்த மிகப் பெரிய விருட்சமாக இருக்கிறது. எப்பேற்பட்ட துன்பக்
கடலில் மூழ்கி தத்தளிச்சவனும் கூட, தாம்பத்ய மகிழ்ச்சியில் மனம் போய்த் தான் தீர
வேண்டும். அதற்கு காரணமும் சொல்கிறேன். ஒருவன் மலை உச்சிலிருந்து கீழே விழுகிறான்
என்று வைத்துக் கொள்வோம். அவன் உயிருக்கே போராடுகிறான் என்று தானே அர்த்தம். அவன்
விழும்போதே இடையில் மரக்கிளையில் மாட்டிக் கொண்டு தொங்குகிறான். இப்போது கூட அவனுடைய
போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று வைத்துக்
கொள்வோம். அப்போது அவனுடைய அருகே உள்ள மரத்திலுள்ள தேன் கூட்டில் இருந்து ஒரு
சொட்டு தேன் அவன் வாயில் விழுகிறது. இப்போது அவன் என்ன செய்வான்? அந்த தேன் சுவையை
சுவைப்பானா அல்லது அவன் மனம் பயத்தில் இருக்குமா?
அவன் மனநிலை எப்படி இருக்கும்? உளவியல் முறைப்படி ஒருவனுடைய மனது ரெண்டு
சிந்தனைகளை ஒரே நொடியில் அனுமதிப்பது என்பதற்கு வாய்ப்புகள் குறைவு. அந்த நேரத்தில்
தேனின் சுவையை சுவைக்கத் தான் செய்வான். நான் சொல்ல வருவது என்னவெனில், அதுபோல்
மகிழ்ச்சி நம்மைத் தேடி வரும் போது மகிழ்ந்து பாருங்கள். அதுவே உங்களுடைய நீண்ட
கால சந்தோசமாய், மகிழ்ச்சியாய் மாறிப் போகும் என்பதில் மாற்றம் இல்லை. அப்பேற்பட்ட
அரிது என்று தற்போதய காலங்களில் நினைக்கத் தோன்றும் மகிழ்ச்சியை தேடி வரும் போது
பெற்றுக்கொண்டும், கிடைக்காத இடங்களில் நாமே மகிழ்ச்சியுடன் சென்று அந்த இடங்களில்
மகிழ்ச்சியை பரப்பி கொண்டே இருங்கள். அப்போது தெரியும் உங்கள் அகமாகிய உள்மனதும், புறமாகிய
வெளி உடலும் எப்படி மின்னுகிறது என்று பாருங்கள். அப்பேற்பட்ட ஆற்றல்
மகிழ்ச்சிக்கு உண்டு. அனால் இது எளிதில் கிடைப்பதில்லை என்று எண்ணுகிறோம்.
அதற்கும் மனம் தான் காரணம். மனதை தெளிவாக, மகிழ்ச்சியாக, சந்தோசமாக வைத்தலே ஒரு
நல்ல ஆரோக்கியத்தை நமக்கு கொடுக்கும்.
இவ்வளவு விவரமாக ஏன் சொல்கிறேன் என்றால் தூக்கமின்மைக்கு முழுக்காரணம் மனம்.
துக்கம்
துக்கமுள்ள மனது தூக்கம் கொள்ளாது. கவலை
கொள்ளும் மனது கவலையைப் பற்றிக் கனவுக் கொண்டே தான் இருக்கும். இதெல்லாம் ஒரு
கவலையா என்று கடந்து போய்ப் பாருங்கள். உங்கள் கனவு நினைவாகும். தூக்கமின்மைக்கு
மகிழ்ச்சியற்ற கவலையுள்ள மனமே காரணம். ஒருவர் மிகுந்த கஷ்டத்தில், துன்பத்தில், ஏக்கத்தில்,
துக்கத்தில் இருக்கும்போது எப்படி தூக்கம் வரும். சாப்பிடக் கூட மனதுக்கு பிடிக்காது. உண்டால் தான் உறக்கம் உடனே வரும். இந்த நிலையை
மாற்ற தெரிந்த அற்புத கலையை, விலையற்ற வித்தையை கற்றவர்கள் மட்டுமே வரலாறு படைத்து
வாழ்ந்து விட்டு செல்கிறார்கள்.
உற்சாகம்
நம்முடைய உணவு இயற்கை முறையில் இருந்தால் இந்த
தூக்கத்தை ஊக்குவிக்க ஓர் அடிப்படை ஆதாரக் காரணமாய் அமைகிறது. எத்தனை பெரிய விசயமாக
இருந்தாலும் முடியும் வரை முயற்சி செய்து விட்டு போவோம் என்று மட்டும்
எண்ணாதீர்கள். அப்படிப்பட்ட சிந்தனை நம்மால் முடியாம போவதற்குத் தான் அதிக அளவு
மிகப் பெரிய வாய்ப்பைக் கொடுத்து விட்டுச் செல்லும். அதே நேரத்தில் நாம் நினைப்பதை
எப்பேற்பட்டாலும் முடிக்கும் வரை முயற்சி செய்து கொண்டே இருப்பேன் என்ற சிந்தனை
விதையை தூவி விட்டு வீறு கொண்டு எழுந்து செயல்படுங்கள். கண்டிப்பாக அது விருட்சமாகி எவ்வளவு முடியாத
காரியங்களும் முடித்து வைத்து அழகு பார்க்கும் ஆற்றல் வந்து விடும்.
நம்பிக்கையுடன் சில விதிகளை பின் தொடருங்கள். கட்டுப்பாடுகளை கட்டமையுங்கள்.
உற்சாகம் தரும் நேர்மறை சிந்தனைகளை எப்போதும் சதா எண்ணி கொண்டே இருங்கள். அது
போதும் அதுவே உங்களை வெற்றி பயணத்திற்கு வெகு விரைவில் அடையச் செய்யும். நிச்சயமாக,
கண்டிப்பாக, உறுதியாக, ஆணித்தரமாக சொல்ல முடியும் ஒரு சிறு துளி கூட முடியாமல்
போவதற்கு வாய்ப்பு இருக்கவே இருக்காது. பல வெற்றியாளர்கள், சாதனையாளர்களின்
அளப்பரிய சாகசங்கள் நடத்துவதற்கும், அற்புதமான வாழ்வு வாழ்வதற்கும் மிகப் பெரிய
பின்புலமே இந்த சூத்திரம் தான். இந்த நேர்மறை மன நிலை தான். இது அனைவருக்கும்
தெரிந்ததே. நாமும் நம் மனதில் இதை ஆழமாக, நுட்பமாகப் புரிந்து நாமும் முயற்சியை,
முடியும் வரை அல்ல முடிக்கும் வரை செய்து முடிப்போம். நமது மனது காயப்படும்
இடங்களை தவிர்க்க கற்றுக்கொள்ளவும், மற்றவர்களின் மனதைக் காயப்படுத்தவாறும்
கற்றுக் கொள்ள வேண்டும். ஆனந்தமாக மகிழ்ச்சியாக நாம் இருப்பதற்கு லட்சக்கணக்கில் வழிகள்
இருக்கத் தான் செய்கிறது. நாம் வழிகளை விட்டுவிட்டு வலிகளுக்கு வழி கொடுக்கிறோம்.
நாம் கவலை இன்றி மனதை செதுக்குவதற்கு சிறப்பாக வாழ்வதற்கு மூன்று வழிகள்
இருக்கிறது.
1. வருவது எந்த சூழ்நிலையாயினும் வரட்டும்.
2. போவதும் எவ்வளவு பெரிய இழப்பு இருந்தாலும், நம்மை
விட்டு போவது போகட்டும்.
3. நடந்து கொண்டிரிக்கிறதும் மிகப் பெரிய வலியைத்
தந்தாலும் அதிலும் நாம் நமக்கான வழியைக் கண்டுபிடித்து செயல்படவும்.
எந்தச் சூழ்நிலையிலும் விடு. பார்த்துக்கிடலாம்
என்று சொல்லிவிட்டு கடந்து போவாரே இவ்வுலகில் வாழத் தகுதியானவர். வரலாறு படைக்கும்
பட்டியலில் வரிசையில் வீர நடை போட்டு நிற்பவர்கள் ஆவார். இவர்கள் தான் உறக்கம்
இல்லாத அல்லது வராத நேரங்களிலும் உயர்ந்த சிந்தனைக்களை சிந்தித்து அதை
செயல்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.
தூக்கம் வர பின்பற்றும்
வழிகள்:
• வாழைப்பழங்கள் சாப்பிட்டு தூங்கப் போகுதல்
நல்லதொரு தூக்கத்தை தர வல்லது. காரணம் பழங்களில் உள்ள ட்ரிப்டோபன் அமினோ அமிலம்
என்பது மூளைக்கு தூங்குவதற்க்கான தகவலை கொடுத்து தூக்கத்தை வருவதற்கு சிவப்பு கம்பளம்
போட்டு வரவேற்கும்.
• சாமந்திப்பூ தேனீர் பருகுதல் நல்லதொரு
தூக்கம் வர வழி வகுக்கும்.
• பாலுடன் கொஞ்சம் மஞ்சள் மற்றும் குங்குமப்பூ
சேர்த்து குடித்து வர தூக்கம் விரைவில் வரும்.
• ஓட்ஸ் சாப்பிடுதல் மற்றும் இரவு குறைவான
அளவில் சாப்பிடுதல் நல்லதொரு ஆழ்ந்த தூக்கத்தை
தரும். ஓட்ஸ் விட்டமின் B ஆறு கொண்டது. இது மன அழுத்தத்தை குறைக்க
வல்லது.
• பாதாம் பருப்பு, பூசணி விதைகள் சாப்பிட்டு வர
தூக்கம் வர தோதுவாக இருக்கும்.
• இரவு நேரங்களில் முன் தூங்கி விடியற்
காலையில் முன் எழுதல் பழக்க வழக்கங்களை மேற்கொள்ளுதல் என்பது தூக்கத்திற்க்கான மிகப்
பெரிய அற்புதத்தை உங்களுக்குக் காண்பிக்கும்.
• தினம் இரண்டு நாழிகை நாற்பது நிமிடங்கள் நடை
பயிற்சி, மெது ஓட்டம் (ஜாக்கிங்), உடற்பயிற்சி வயதுக்கு மற்றும் உடம்புக்கு
தகுந்தவாறு செய்தல் என்பதும் தூக்கத்திற்க்கான வழிமுறைகளில் பிரதானமானது.
• தற்போதைய காலங்களில் மொபைல் மற்றும் கணினி
பயன்படுத்துதல் அதிகமான இடத்தைப் பிடித்து இருக்கிறது. மேலும் இன்றியமையாத ஒன்றாக இருந்து
வருகிறது. இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன் ஒரு மணி நேரம் தள்ளி வைத்தல்
கண்ணுக்கும், தூக்கம் வரவும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
• யோகா மற்றும் தியான பயிற்சிகளை பழகி வர வர
தூக்கமின்மைக்கு டாட்டா சொல்லிவிடலாம்.
• அனைத்தையும் குறைந்த பட்சம் 21 நாட்கள்
இன்னும் சிலருக்கு கூடுதலாக ஒரு மண்டலம் செய்து வாருங்கள். தூக்கமின்மை என்கிற
வார்த்தையே அகராதிலிருந்து எடுத்து விடலாம்.
மகிழ்ச்சி
மகிழ்ச்சி என்பது இத்தனை பெரிய விஷயமா. ஆம். மகிழ்ச்சி
என்ற விஷயம் இல்லையென்றால் வாழ்க்கை விஷம் தான். மருந்துகள் குணப்படுத்தாத, குணப்படுத்த
முடியாத பல வியாதிகள் இந்த மகிழ்ச்சியால் குணப்படுத்தி வியாதிகள் செத்து போய்
இருக்கும் பல சம்பவங்களை கேள்விப்பட்டு இருப்பீர்கள்! இந்த மன மகிழ்ச்சி
இல்லையென்றால் வியாதிஸ்தர்கள் செத்து போய் விடுவார்கள். ஏன் வியாதி
இல்லாதவர்களுக்கும் கூட மகிழ்ச்சி இல்லாவிட்டால் கவலை அவருடைய நாற்காலியில்
உக்கார்ந்து அவரை படுக்க வைத்து விடும். ஒருவருக்கு நேர்மறை எண்ணங்கள் எதிர்மறை
எண்ணங்களை விட அதிகமாக இருக்க வேண்டும். பாதிப் பாதி இருந்தாலும் விளிம்பு எல்லை
தான். எந்நேரம் ஆனாலும் எதிர்மறை எண்ணங்களுக்கு தாவும் வாய்ப்பு உள்ளது. நூறு
சதவீதம் இருப்பவர்களிடமே மகிழ்ச்சி போட்டி போட்டுக் கொண்டு வரிசையில் நாம் எந்த
மகிழ்ச்சியை தேர்வு செய்யலாம் என்று நாம் தேர்வு செய்யும் படி பல மகிழ்ச்சிகள் காத்து
கொண்டு நம் வாசற் வாயிலில் இருக்கும்.
கடல்களில் அலைகள் இருப்பது போலவே உடல்களிலும்
ஊனம், நோய்கள், வியாதிகள் இருப்பது குறையே இல்லை. ஆனால் அந்தக் குறையை நிவர்த்திச்
செய்ய முடியாமல் இருப்பது தான் குறையே! நவீன உலகத்தில் மூச்சை கூட விற்பனை
செய்யும் அங்காடிகள் வரும் என்றால் ஆச்சரியப்படுவதிற்க்கில்லை! அப்படிப்பட்ட
உலகத்தில் நம்மை நாமே நம் உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுதல் என்பது மிகவும்
இன்றியமையாதது ஆகும். இளமைக் காலங்களில் நாம் நம் குடும்பத்திற்காக, உணவிற்காக
ஓடுகிறோம் என்ற தொனியில் சாப்பிடாமல் கூட ஓடுகிறோம். சிங்கம் வேட்டையாடி
வேட்டையாடி மிச்ச சொச்ச விலங்கு உடலை கழுதைப் புலிகளுக்கு விட்டுச் செல்லுமாம்.
ஓய்ந்து வேட்டைக்கு செல்ல முடியாத வயதான காலத்தில் ஒதுங்கி இறக்கும் போது அந்த
கழுதைப் புலிகளே சிங்கத்தின் உடலை திண்ணு பசியாருமாம். எப்பேற்பட்ட வாழ்க்கை
சுழற்சி. அது போலவே இங்கு மனிதர்களும் எதற்கு ஓடுகிறோம் என்று தெரியாமலே உண்ணாமல்,
உறங்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இன்னும் சிலர் மது, போதை பொருள்களில்
அடிமையாகி ஆட்டம் ஆடுகின்றார்கள். அந்த ஆட்டம், ஓட்டம் நிக்கும் போது, அவர்கள்
உடம்பு ஆட்டத்தை ஆட ஆரம்பிக்கிது. இரத்த ஓட்டம் குறைய ஆரம்பிக்கிறது. மாறாக நல்ல
ஆரோக்கியத்தை இழந்து விடுகிறோம். இதற்கு பதிலாக நாம் ஓடும் போதே எதிர் கால
சிந்தனைகளை பிறர் அனுபவத்தின் வாயிலாக கேட்டுத் தெரிந்து, உடம்பை நல்ல முறையில்
பார்த்து, சரிவர பேணித்து, நம் எதிர்காலத்தை ஆரோக்யத்துடன் நெடு நாள்கள் வாழ்ந்து
மற்றவருக்கும் இடையூறு செய்யாமல், நம் குடும்பத்திர்க்கும், சமுதாயத்திற்கும்
கடைசி வரை நம்மால் முடிந்த வரை உதவிகள் செய்து விட்டு, நாம் மறைந்தாலும், நம்மை
மறக்காத வரை வாழ்ந்து விட்டு போகலாம். இது அனைவராலும் முடியுமா என்றால் ஒவ்வொரு தனி
மனிதனாலும் முடியும் என்பதே என் தாழ்மையான கருத்து.
பலன்கள்
கண்ணீருடனும், கவலையுடனும் வாழ்தலை விட, புன்னகையுடனும், நன்மனதுடனும் வாழ்வதே சிறப்பு. அப்பேற்பட்ட சிறப்பைப்
பெறுவதற்கு ஆரோக்கியம் மிகவும் அவசியம். உணவுகள், உணவு கட்டுப்பாடுகள் அவசியம்.
துரித உணவைத் தவிர்த்தல் என்பது மிகவும் நல்லது. நமது உடம்பும் இயந்திரம் போலத்
தான் இயங்கும். இயந்திரங்களில் பழுதோ அல்லது கோளாறு ஏற்பட்டால் இயந்திரம்
எப்போதும் போல் இயங்காமல் திடிரென்று நின்று விடும். பழுதுகளைச் சரி செய்தோ அல்லது
வேறு பாகங்களை பொருத்தினால் மட்டுமே இயந்திரம் இயங்கும். அது போலவே நம் உடம்பும், மனமும்
சரியில்லை என்றால் சரிசெய்ய நாம் தெரிதல் அவசியம் என்பது முக்கியமான ஒன்றாகும்.
உடம்பும் மனமும் ஒரு சேர நல்ல முறையில் அழகாக இருந்தால் மட்டுமே முகமும் அழகாக
தோற்றமளிக்கும். அகம் அழகு முகம் ஜொலிக்கும். அகம் பேணுதல் என்பது முகம் பேணித்தலை
விட முதன்மையானது. உளவியல் முறைப்படி
அகத்தை, மனதை அழகாக வைத்தாலே அற்புதங்கள் தானாகவே உங்கள் வாழ்வில் நடக்கும். மனதை
அழகுபடுத்துதல் என்பதும் ஒருவித மனக்கலையே. அதை இலமைகாலங்களிலேயே கற்றுக் கொண்டால்
முதுமை காலம் சந்தோஷத்திற்க்கான வாழ்க்கைக்கு,
அந்த அழகான இனிமையான பயணத்திற்கு பாதைகளை ஏற்படுத்தித் தரும் என்பதில் மாற்றுக்
கருத்துக்கள் இல்லை. மருந்துகளை உடம்புக்கு கொடுத்தலை விட முதலில் மனதிற்கு
மருந்தாக நம்பிக்கை, மகிழ்ச்சி, சந்தோஷம், தெளிவான சிந்தனைகள், நற்பண்புகள் இன்னும்
பல நல்லவற்றை வாழ்க்கையில் கூட்டி சேர்த்துக் கொண்டே இருங்கள். ஏன் என்றால்
மருந்துகள் கூட பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடியது. மனதிற்கு வலிமை படுத்தும்
குணங்கள் நல்ல விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும். சீனர்கள், ஜப்பானியர்கள் நீண்ட
காலம் வாழ்வோம் என்பதை மனதில் புகுத்தி விடுகிறார்கள். அதனால் தான் என்னவோ அவர்களுடைய
வாழ் நாள் வருடம் நீடிக்கிறது. அவர்களது அந்த எண்ணங்கள் மருந்து போல உடலில், நாடி
நரம்பு மற்றும் இரத்த நாளங்களில் கலந்து திறம்பட செயல்பட வைக்கிறது. வளர்ச்சியும்
கூடுகிறது. நம்முடைய எண்ணங்களே நாம் நினைத்த மாதிரி நமக்கு தீனி போடுகிறது. அதனால்
தான் வெற்றியாளர்கள் சாதனையாளர்கள் மென்மேலும் வெற்றி, சாதனை, மகிழ்ச்சிகளைத்
தொட்டு, உயர்ந்த இடத்தை நோக்கி பயணம் செய்கிறார்கள். நம் பயணம் என்பது மிக மிகக்
குறுகியது என்ற நினைப்பை முதலில்
விட்டுவிடுங்கள். அனைவரிடம் கேட்டால் வாழ்க்கை குறுகியது என்று நம்மை சின்ன
எல்கைக்குள் குறுக்கி விடுவார்கள். இந்த மகத்தான மானிடப் பிறவி என்பது பல வருடம்
வாழும் நீண்ட பயணம் என்றே மனதில் பதியுங்கள். அப்போதே நீங்கள் உங்களுக்கான வாழ்கையை
வாழத் தயாராகி விட்டீர்கள் என்றே அர்த்தம். மேலும் அந்தப் பயணத்தில் பலரை, நாம்
மகிழ்ச்சியுடன் பயணம் செய்ய வைப்போம் என்று சபதம் செய்து சப்தமாக உலகில் உரக்கச் சொல்லுவோம்.
இதை திடமான உறுதித் தன்மையோடு உங்கள் நினைவில் செலுத்துங்கள். அப்புறம் பாருங்கள்.
உங்கள் பயணம் எப்படி சொகுசுப் பயணமாக மாறுகிறது என்று நீங்களே வியப்பீர்கள்.
எண்ணத்திற்கு அவ்வளவு மகத்தான சக்தி இருக்கிறது. அதுவும் உங்கள் மனதிலேயே
இருக்கிறது. அந்த மன ஓட்டத்தை இப்போதே தொடங்க ஆரம்பியுங்கள்.உங்களுக்கு அணைத்து
செல்வ வளங்களும் கிடைக்கும். அன்பால், பண்பால், நல்ல பழக்க வழக்கங்களால், நல்ல
நட்பால், நல்ல சமுதாயத்தால், நாம் நம்மை மாற்றி இனிமையான பயணம் செய்வோம். அந்த
சிறப்பு பயணம் நாம் நின்றாலும், பயணம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். நம்முடைய
ஆன்மீகப் பூமிக்கு அப்பேற்பட்ட சக்திகள் குவிந்து அபரிவிதமாய் மலை போலக் குவிந்து
கிடக்குகிறது. இந்தக் கட்டுரை மனதை வளமுடன் தயார் படுத்தலேயே முன்னிலைப்படுத்தி
பதிவிடப்படுவதற்குக் காரணம் தெரிய வந்திருக்கும். நோயில்லா, நீண்ட ஆரோக்யமான வாழ்க்கையை
வாழ்வதே அது. சுருங்க கூறின் மருத்துவம் இல்லாமல் மக்கள் வாழ வேண்டும்.
ஆதிகாலங்களில் மருத்துவர்கள் இல்லை. மக்கள்
ஆரோக்யத்துடன் இருந்தார்கள். தற்காலங்களில் மருத்துவர்கள் இல்லாமல் மக்கள் வாழவே
முடியாத சூழ்நிலை என்கிற கட்டாயத் திணிப்பிற்கு தள்ளப்பட்டிருக்கிறோம் மறுக்க
முடியாத கருத்து. ஆனால் இதுவும் மாறும் சூழல் உருவாகும். ஏன் இன்றைய காலங்களில்
கூட மலைவாளிடங்களில் மருத்துவர்கள் இல்லாமல் ஆரோக்யத்துடனும், திடமான தேகத்துடனும்
உலா வரத் தான் செய்கிறார்கள். இன்னும் அனைவருக்கும் அப்பட்டமாக தெரியும் படி சொல்லவேண்டும்
என்றால் கொரானா காலங்களில் கூட மற்ற வியாதிகள் மறைந்து போய் விட்டது. மருந்துகள்
விற்பனை கூட குறைந்து விட்டது. காரணம் நம்முடைய நாம் நோயின் மீது காட்டும் விழிப்புணர்வே
அந்த நிலைக்கு காரணமாக அமைகிறது. நம்முடைய உடம்பை பேணிக்காப்பது என்பது நம்முடைய
தலையாய கடமை ஆகும். ஒரு மனிதனின் ஆரோக்யத்துக்குத் தேவை என்பது நல்ல உணவு, நல்ல
நீர், நல்ல காற்று, நல்ல சிந்தனைகள், பொதுநல குணங்கள், செல்வங்கள், தேவையானப் பொருள்கள்
மற்றும் வளமான வாழ்க்கை இருந்தால் அங்கே தூக்கமின்மை நோய்க்கு ஒரு மிகப் பெரியக்
குட் பை கொடுத்து விடலாம். இப்போது
தெரிகிறதா? தூக்கமின்மை என்பது ஒரு நோயே கிடையாது. இன்னும் கூடுதலாக சொல்வதென்றால்
நோய் என்பது கூட ஒரு வார்த்தை தான் நாம் ஆரோக்யமாக வாழ்ந்தால்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நாளை ஒரு நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆரோக்கிய குறிப்புகள் : ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா?. - ஆரோக்கிய குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Health Tips : Want to stay healthy for life? - Health Tips in Tamil [ Health ]