வெள்ளைக்குள்ளரும் செல்வத்துக்கு அதிபதிமான குபேரர், யட்சர்களின் அரசர்.
செல்வம் குறைவில்லாமல் வேண்டுமா? குபேரன் இருக்க பயமேன்? வெள்ளைக்குள்ளரும் செல்வத்துக்கு அதிபதிமான குபேரர், யட்சர்களின் அரசர். அவருடைய தலை நகரம் அழகாபுரி. அவர் மனைவியின் பெயர் சித்ரரி. அவரின் நண்பர் இந்திரன். இந்திரன் ருத்ரனின் பக்தர். விஷ்ணுபிரானின் ஊழியர். குபேரர் தனக்கு ஒரு தேரோட்டியும் ஆயுதமாக கதையும் கொண்டவர். இலங்கை அரசனான இராவணன் குபேரனுக்கு ஒன்றுவிட்ட தம்பி. இராவணன் தனக்கு மிகவும் செல்வம் கொழிக்கக் குபேரனைப் பிணைக் கைதியாக வைத்திருந்தான். குபேரன் வேதகாலத்தில் நிழலிலும் இருட்டிலும் வாழும் அசுரர்களின் தலைவராகத் திகழ்ந்தார். இந்து மதத்தினரின் காலத்திலே குபேரர் கடவுள் அந்தஸ்த்திற்கு உயர்த்தப்பட்டு எட்டுக் காவல் தெய்வங்களில் (அஷ்டதிக் பாலகர்களில்) ஒருவரானார். புராணக் கதைகளின்படி குபேரர் பூர்வ ஜென்மத்தில் ஒரு திருடராயிருந்தார். முன் ஜென்மத்தில் ஒரு சிவன் கோயிலைக் கொள்ளையிடும்போது அங்கு எரிந்து கொண்டிருந்த விளக்கு அணைந்துவிட்டது. குபேரன் பத்து முறை விளக்கை எரிவிக்க முயன்றார். குபேரனின் முயற்சி பாராட்டப்பட்டு, அவர் அடுத்த ஜென்மத்தில் செல்வம் கொழிக்கும் கடவுளானார். குபேரன் தன் உயர்ந்த பதவியில் நகைகளையும் ஆபரணங்களையும் அணிந்திருந்தாலும், தன்னுடைய அருவருப்பையும் குள்ள உருவத்தையும் தவிர்க்க முடியவில்லை. குபேரனுடைய வெள்ளை நிற உடல் குள்ளமாகவே உள்ளது. குபேரனின் பிரயாணத்துக்கு உதவியாக இருக்கும் பொருட்டு பிரம்மா, விஸ்வகர்மாவைக் குபேரனுக்கு புஷ்பக விமானம் என்னும் ஒரு ரதத்தைச் செய்து கொடுக்கச் சொன்னார். அவ்விமானம் தானாகவே இயங்கக் கூடியது. அது ஒரு நகரத்தையே தன்னுள் அடக்கக் கூடிய பெரிய விமானம். அவ்விமானம் பூமியின் மீது செல்லும்போது ஆபரணங்களைப் பொழிகின்றது. இராவணன் தேவர்களைத் தாக்கவும் சீதையைக் கடத்திச் செல்லவும் அவ்விமானத்தைக் குபேரனிடமிருந்து திருடினான். விஸ்வகர்மா, ராக்ஷசர்களுக்காக இலங்கையை அமைத்தான். அக்கால இலங்கை செல்வந்த நாடாகவும் நன்கு பாதுகாக்கப்பட்ட நாடாகவும் இருந்தும் விஷ்ணுவின் தாக்குதலுக்குப் பயந்து ராக்ஷசர்கள் இலங்கையை விட்டுவிட்டுச் சென்றனர். அதனால் இலங்கையைக் குபேரன் கைப்பற்றினான். ஆனால் ராக்ஷசர்கள் மீண்டும் இலங்கைக்கு வர முடிவு செய்தனர். அவர்கள் தங்கள் தலைவர் ஒருவரின் மகளைக் குபேரனின் தகப்பனாரைக் காதலித்து மணம் புரியச் செய்தனர். அப்பெண் தன் முயற்சியில் வெற்றி பெற்றாள். அவர்களுக்கு ராவணனும் மேலும் மூன்று மகன்களும் பிறந்தனர். ராவணன் கடும் தவம் புரிந்து இறவா வரத்தை சிவ பெருமானிடமிருந்து பெற்றான். அவன் குபேரனைத் தோற்கடித்து இலங்கையையும் புஷ்பக விமானத்தையும் கைப்பற்றினான். இலங்கை மீண்டும் குபேரனுக்குக் கிடைக்காததால், விஸ்வகர்மா அவனுக்காக இமயமலைத் தொடரிலுள்ள கைலாய மலையில் மற்றொரு அரண்மனையைக் கட்டினான். அவனுக்கு அழகாபுரி என்ற ஒரு செல்வந்த நகரமும் சித்ரரதா என்ற அழகிய தோட்டமும் மந்தார மலையில் உள்ளது. குபேரனின் நாடு இமயமலைத் தொடரிலேயே உள்ளது. ஏனெனில் அவர் வடக்குத் திசையின் காவல் காரர். மேலும் இமயமலைத் தொடரில் தாதுப் பொருள்கள் மிகுந்த அளவில் உள்ளன. அவைகளையும் அவர் காக்கிறார். கிங்கரர்களை உதவியாளராகக் கொண்டு உலகிலுள்ள தங்கம், வெள்ளி அணிகலன்களைக் குபேரன் கண்காணிக்கிறார். முத்துக்களையும் அஷ்ட நிதிகளான பத்மா, மகா பத்மா, மகரா, கச்சபா, குமுதா, சம்கா,நில, நந்தனா ஆகியவைகளையும் கண்காணிக்கிறார். ''நம் வேத நூல்களில் குறிப்பிட்டுள்ள குபேர மந்திரம் ஒரு ரகசியமாகவே உள்ளது''. தீபாவளி அன்று குபேர யந்திரத்தை வழிபட்டால் செல்வம் கொழிக்கும், ஆஸ்வியுஜா பகுள திரயோதசி நாளில் வழிபடும் குபேர யந்திரமும் செல்வம் கொழிக்கச் ஒம்பும். மகோததி மந்திரமும், மஹர்நவ மந்திரங்களும் (யந்திரம்) வழிபடும் முறையை விளக்குகின்றன. இவ்வழிபாடு மூலிகைகளைக் கொண்டு 40 நாட்கள் வழிபடுவதாகும். இந்த நெறிமுறைகளுக்குப் பின் யந்திரத்தை நமக்கு வேண்டிய இடத்தில் பதித்து நாம் விரும்புவதைப் பெறலாம். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: குபேரன் : செல்வம் குறைவில்லாமல் வேண்டுமா? குபேரன் இருக்க பயமேன்? - குபேரன் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual notes: Kuberan : Want unlimited wealth? Are you afraid to be Kuberan? - Kuberan - Spiritual notes in Tamil [ spirituality ]