வளர் பிறை பைரவ அஷ்டமி வழிபாடு

குழஅழகு பைரவ பூஜை

[ ஆன்மீக குறிப்புகள் ]

Waxing crescent Bhairava Ashtami worship - Bhairava Pooja in Tamil

வளர் பிறை பைரவ அஷ்டமி வழிபாடு | Waxing crescent Bhairava Ashtami worship

வளர் பிறை அஷ்டமி திதியில் மக்கள் நிறைவேற்ற வேண்டிய பூஜை முறைகளும் அதன் சிறப்புகளும் வெள்ளிக்கிழமை வரும் வளர்பிறை அஷ்டமி திருநாட்களில் மாலை வேளையில் , வில்வம் மற்றும் வாசனை மலர்களை பைரவருக்கு சமர்ப்பித்து,நெய் தீபம் ஏற்றிவைத்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் வறுமைகள் நீங்கும். செல்வம் பெருகும். சனிக்கிழமைகளில் வரும் வளர்பிறை அஷ்டமி திருநாட்களில் பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், சனி கிரகத்தால் ஏற்படும் சகலவிதமான தோஷங்களும் விலகும். தேய்பிறை அஷ்டமி திதியில் கால பைரவரின் பூஜை மகத்துவம் பெற்றுள்ளது போல் வளர் பிறை அஷ்டமி திதியில் மக்கள் நிறைவேற்ற வேண்டிய பூஜைமுறைகளே குழஅழகு பைரவ பூஜையாகும்.

வளர் பிறை பைரவ அஷ்டமி வழிபாடு

பற்றிய பதிவு.

 

வளர் பிறை அஷ்டமி திதியில் மக்கள் நிறைவேற்ற வேண்டிய பூஜை முறைகளும் அதன் சிறப்புகளும்

 

வெள்ளிக்கிழமை வரும் வளர்பிறை அஷ்டமி திருநாட்களில் மாலை வேளையில் , வில்வம் மற்றும் வாசனை மலர்களை பைரவருக்கு சமர்ப்பித்து,நெய் தீபம் ஏற்றிவைத்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் வறுமைகள் நீங்கும். செல்வம் பெருகும். சனிக்கிழமைகளில் வரும் வளர்பிறை அஷ்டமி திருநாட்களில் பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், சனி கிரகத்தால் ஏற்படும் சகலவிதமான தோஷங்களும் விலகும்.

 

தேய்பிறை அஷ்டமி திதியில் கால பைரவரின் பூஜை மகத்துவம் பெற்றுள்ளது போல் வளர் பிறை அஷ்டமி திதியில் மக்கள் நிறைவேற்ற வேண்டிய பூஜைமுறைகளே குழஅழகு பைரவ பூஜையாகும்.

 

குழஅழகு பைரவ பூஜை என்றால் என்ன?

 

கலியுலகில் அனைவரையும் ஆட்டிப் படைக்கும் கருவியே பணம் என்னும் மாயையாகும்.

 

மிகவும் சக்தி வாய்ந்த இந்த மாயையை எவராலும் வெல்ல முடியாது என்பதை அறிந்த சித்தர்கள் பணம் என்னும் மாயையை வெல்ல முடியாவிடினும் அந்த மாயையை வைத்து நற்காரியங்களை செயலாற்றும் வித்தையை தங்களை அண்டி வரும் அடியார்களுக்கு போதித்து வருகின்றனர்.

 

இம்முறையில் வளர்பிறை/தேய்பிறை கால பைரவ வழிபாடுகள் பணத்தை முறையாக சம்பாதிக்கும் வழிமுறையையும் அவ்வாறு முறையாக சம்பாதித்த பணத்தை முறையான தெய்வீக காரியங்களில் செலவு செய்யும் மார்கத்தையும் புகட்டுகிறது.

 

அந்த அற்புத மார்கத்தையே சித்தர்கள் குழஅழகு பைரவ பூஜையாக அளித்துள்ளார்கள்.

 

குழஅழகு பைரவ வழிபாட்டை கலியுக மக்களின் நல்வாழ்விற்காக அர்ப்பணித்த பெருந்தகையே பகலவ முனிவர் ஆவார்.

 

வளர் பிறை அஷ்டமி திதியில் நிறைவேற்றும் பைரவ பூஜை நமது சஞ்சித கர்மங்களையும் பாவங்களையும் நீக்கும் தன்மை கொண்டது.

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம் 

ஆன்மீக குறிப்புகள் : வளர் பிறை பைரவ அஷ்டமி வழிபாடு - குழஅழகு பைரவ பூஜை [ ] | Spiritual Notes : Waxing crescent Bhairava Ashtami worship - Bhairava Pooja in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்