அது ஒரு அழகிய கிராமம். அந்தக் கிராமத்தின் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் ஒரு குடிசை இருந்தது. அந்தக் குடிசையில் ஒரு துறவி வாழ்ந்து வந்தார்.
வளர்வதற்கு வழி
அது ஒரு அழகிய கிராமம்.
அந்தக் கிராமத்தின் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் ஒரு குடிசை
இருந்தது.
அந்தக் குடிசையில் ஒரு துறவி வாழ்ந்து வந்தார்.
அந்த ஊர் மக்கள் மட்டுமன்றி அயலூர் மக்களும் அந்தத் துறவி மேல்
மிகுந்த மதிப்பு வைத்திருந்தனர்.
துன்பப்பட்டவர்களுக்கு மன ஆறுதல் தரும் ஒரு இடமாக அந்த இடம்
விளங்கியது.
அவரது உபதேசங்களைக் கேட்பதற்கு மக்கள் திரண்டனர்.
தங்கள் சிறுவர்களை அந்தத் துறவியின் இருப்பிடத்திற்கு அனுப்பி நல்ல
பழக்கவழக்கங்களைப் பயிற்றுவித்தனர்.
ஒரு சிறுவன்.
கொஞ்சம் குழப்படிக்காரன். பெரியவர்களை மதிப்பதில்லை.
எவருடைய அறிவுரைகளையும் கேட்பதில்லை.
அவனை அந்தத் துறவியிடம் அனுப்பி வைத்தால் சில நாட்களில் திருந்தி
விடுவான் என நினைத்து அவனது பெற்றோர் அவனை அங்கு அனுப்பி வைத்தனர்.
அந்தத் துறவியின் குடிசை அமைந்திருந்த சூழல் மிகவும் துப்பரவானதாக
தூய்மையானதாக இருந்தது.
தெய்வீகச் சூழல் என்று சொல்லலாம்.
அங்குள்ள பூங்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது சிறுவர்களின்
முக்கியமான கடமையாகும்.
கிணற்றில் தண்ணீர் அள்ளிக்கொண்டு வந்து பூங்கன்றுகளுக்கு ஊற்ற
வேண்டும்.
அது ஒன்றும் கஷ்டமான வேலையில்லை.
சிறுவர்கள் உற்சாகமாகச் செய்வார்கள்.
அங்குள்ள சிறுவர்கள் பொதுவாக அந்தத் துறவி சொல்கின்ற வேலைகளை
எல்லாம் ஏன் எதற்கு என்று கேட்காமலேயே செய்வார்கள்.
அவர் சொல்வதெல்லாம் தங்களது நன்மைக்காகவே தான் என்ற நம்பிக்கை
அவர்களுக்கு உண்டு.
அங்கு வந்து சேர்ந்த அந்தப் புதிய சிறுவன் ஒருநாள் மாலையில்
தண்ணீர் அள்ளிக் கொண்டு வந்து பூங்கன்றுகளுக்கு ஊற்றிக் கொண்டிருந்தான்.
வாளியின் அடியில் மிச்சமாக இருந்த சிறிதளவு தண்ணீரை பக்கத்தில்
விசிறி வீணாக ஊற்றிவிட்டுச் சென்றான்.
அந்தச் சிறுவன் தண்ணீரை விசிறி வெளியில் ஊற்றி வீணாக்குவதைத் துறவி
கண்டார்.
கொஞ்ச நேரம் கவனித்துக் கொண்டு நின்றார்.
துறவி தன்னைக் கவனிப்பதை அந்தச் சிறுவன் காணவில்லை.
அவன் தொடர்ந்து அப்படியே தண்ணீரை விசிறி அடித்து வீணாக்கினான்.
துறவி அவனை அழைத்தார்.
அருகில் வந்து நின்றான்.
"நீ இப்படிச் செய்யலாமா?" என்று கேட்டார் துறவி.
“எப்படி...?" என்றான்
சிறுவன்.
“மிச்சத் தண்ணீரை இன்னொரு பூங்கன்றுக்கு ஊற்றலாமே.
இப்படி விசிறி அடித்து வீணாக்கத் தேவையில்லையே" என்றார் துறவி.
"கொஞ்சத் தண்ணீர் தானே..." என்றான்
சிறுவன்.
"கொஞ்சத் தண்ணீர் என்றாலும் பூங்கன்றுக்கு
ஊற்றியிருக்கலாமே” என்றார் துறவி.
“இந்தக் கொஞ்சத் தண்ணீரால் பூங்கன்று வளர்ந்து
விடுமா" என்றான் சிறுவன்.
"பூங்கன்று வளருமோ இல்லையோ, அதற்காக நான் சொல்லவில்லை. நீ வளர்வதற்காகத்தான் நான் சொல்கிறேன்' என்றார் துறவி.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
சிந்தனை சிறு கதைகள் : வளர்வதற்கு வழி - குறிப்புகள் [ ] | Thought short stories : Way to grow - Tips in Tamil [ ]