கடவுள் நிலை அடையக்கூடிய வழிகள்

ஓஷோவின் காதல், கர்மயோகம், தியானம், உண்மையான பக்தி

[ ஆன்மீக குறிப்புகள் ]

Ways to attain godhood - Osho's Love, Karma Yoga, Meditation, True Bhakti in Tamil

கடவுள் நிலை அடையக்கூடிய வழிகள் | Ways to attain godhood

கடவுள் நிலை அடைய இரு வழிகள் என்று ஓஷோ கூறுகிறார் இது சரியா ? ஆராய்வோம். கடவுள் தன்மை அடையும் வழி என்று கிருஷ்ணர் கூறுவது அன்பு, கர்ம யோகம்

கடவுள் நிலை அடையக்கூடிய வழிகள்:


கடவுள் நிலை அடைய இரு வழிகள் என்று ஓஷோ கூறுகிறார்

 

இது சரியா ? ஆராய்வோம்

 

கடவுள் தன்மை அடையும் வழி என்று கிருஷ்ணர் கூறுவது அன்பு, கர்ம யோகம்

 

கிரிஷ்ணர் கூறிய அன்பை ஓஷோ காதலாக்கி விட்டார்

 

கர்மயோகத்தை தியானமாக்கி விட்டார்

 

அன்பு என்பது மற்றவர்க்காக தன்னை ஈவது என்று பொருள் கொள்ளலாம்

இதில் கணவன், மனைவி, குழந்தை, உறவு, சமூகம், மற்ற உயிரினங்கள் எல்லாம் வந்துவிடும்

தன்னை ஈவது என்றால் தன்னை முழுவதுமாக மறப்பது / இழப்பது என்று கொள்ளலாம்

உம்

ஆதிசங்கர் தன்னை பலி கொடுக்க விரும்பிய ஒரு காபாலிகரிடம் தன்னை ஒப்புக்கொடுத்தார், எந்த காளிக்கு பலி கொடுக்க காபலிகன் விரும்பினானோ அதே காளி ஆதிசங்கர் உயிரை காப்பாற்றினாள்

இங்கு அன்பு என்பது பாரா பட்சமாகிறது, நிகழ் பொழுதிலும் கடவுள் தன்மையோடு இருப்பது

 

ஓஷோவின் காதல்:

காதலன் காதலி இருவரும் மற்றவரிடம் தன்னை முழுவதுமாய் இழப்பது

அன்பு macro என்றால் காதல் micro

இந்த micro மூலம் பெரும் கடவுள் தன்மை  காலத்தில் கட்டுண்டது

உம்

சிற்றின்பம் குறைந்த காலத்தில் முற்றுப் பெறுவதுபோல்

காதல் யுக யுகாந்திரத்திற்கு பிறகே முடிவுறும்

 

ஆக

அன்பு காலத்தை விஞ்சி  நிற்கிறது

 

காதல் ஒருவரோடன இணைப்பில் பல யுகத்தில் கட்டுண்டது

 

அடுத்து

 

கர்மயோகம் / தியானம்

 

கர்மயோகம்:

கர்மத்தின்  பலனை நோக்காது எல்லாவற்றையும் அவ்வாறே ஏற்பது.

கர்மங்கள் அனைத்தும்  நிகழ் பொழுதில் நடப்பதால் கடவுள் தன்மையில் எப்போதும் இருக்கும் வாய்ப்பு அதிகமாகிறது

 

தியானம்:

பொதுவாக குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தியான நிலை சித்திக்கும்

தியானமே இயல்பாவது என்பது இயலாது.

அப்படியானால் புத்தர் போன்றவர் அந்த நிலையை அடைந்ததாக சொல்கிறார்களே அது எப்படி ?

 

பதில் :-  புத்தர் என்ற ஒரு ஜீவாத்மா தியானத்தை இயல்பாக்கி கொண்டார். அது அவர் முயற்சியின் பலன்.

 

கடவுள் தன்மை என்பது செயல் பலனுக்கு அப்பாற்பட்ட ஒன்று

செயல் முயற்சியே இல்லாத ஒருவனிடம் கூட கடவுள் தன்மை உண்டு. அவன் அதை அறிந்து கொள்ள  முயற்சிக்கவில்லை அவ்வளவே

உம்

ஓர் அறிவு to 5 அறிவு ஜீவனில் இறை தன்மை உண்டு ஆனால் அவை அதை  அறிந்து கொள்ள முயற்சிக்க முடியாது

( சில விதி விலக்குகள் உண்டு )

 

முடிவாக நாம் தெளிவது

 

micro வான காதலில் முதலில் சுயத்தை இழந்து அனுபவம் அடைந்து பின் macro வான அன்பாக நிகழ் பொழுதின்  கடவுள் தன்மையாக வேண்டும்

அதேபோல் தியானத்தில் துவங்கி கர்ம யோகமாக வாழ்வை நடத்த நிகழ் பொழுது கடவுள் தன்மையில் இருக்கும் ஞான யோகமாகும்

ஒரு மனிதன் வாழும்போது பூரண கடவுள் தன்மை அடைந்தால் அந்த கணமே அவன் உயிருக்கும் அப்பாற்பட்ட பரம் ஆகிவிட அந்த உடலில் ஜீவன் இருக்காது

 

கடவுள் தன்மை என்பது கடவுள் துளிகள் தான் கடவுள் அல்ல

God particles are  only  God's particles

But  not the whole " GOD "

உங்கள் கனவுகளைப் பார்த்து நீங்களே பயப்படாதீர்கள். உங்களை பயமுறுத்தும் பெரிய கனவுகளைத் தொடர்ந்து காணுங்கள்.

 

உண்மையான பக்தி:

 

ஒரு முறை நாரத -மகரிஷி கவலையுடன் காணப்பட்டார். அவரது கவலையை கண்ட அன்னை மஹாலக்ஷ்மி மகனே ஏன் கவலையாக இருக்கிறாய் என்று கேட்டாள்

நாரதர் - தாயே நான் செய்யும் செயல்கள் யாவும் இறுதியில் நன்மையில் முடிந்தாலும் அந்த நேரம் ஏற்படும் கலகங்களுக்கு நான் தானே காரணமாக விளங்குகிறேன் அதை எண்ணித்தான் வருத்தமாக உள்ளது தாயே என்றார்

 

மஹாலக்ஷ்மி - நாரதா அப்படி என்றால் ஒன்று செய் ரிஷிகேசம் சென்று புனித கங்கையில் நீராடி விட்டு வா உன் கவலை யாவும் போய்விடும் பாரேன் என்றாள்

நாரதரும் ரிஷிகேசம் வந்தார். கங்கையில் நீராடலாம் என்று நினைக்கும் போது பல வண்ணங்கள் கொண்ட விசித்திரமான மீன் ஒன்று நீரில் நீந்திக்கொண்டே நாரதரிடம் என்ன நாரதரே சௌக்கியமா என்றது

பேசும் மீனை அதிசயமாக பார்த்துக்கொண்டே நாரதர்

ம்ம்... எதோ சௌக்கியமாக இருக்கிறேன் நீ நலமா மீனே என்று நாரதர் திருப்பி மீனிடம் கேட்டார்

மீன் கொஞ்சம் சலித்து கொண்டே நானும் எதோ நலமாக இருக்கிறேன் நாரதரே என்றது.

நாரதர் ஏன் மீனே உன் சலிப்புக்கு என்ன காரணம் ஏதாவது தேவையா என்று சொல் நான் வரவழைத்து தருகிறேன் என்றார்.

மீன் நாரதரே என் நலத்தில் ஒன்றும் குறைச்சல் இல்லை ஆனால்...

நாரதர் ஆனால்....

மீன் - ஒரே தாகமாக இருக்கிறது. குடிக்க தண்ணீர் தான் கிடைக்க மாட்டேங்கிறது அதுதான் என் சலிப்புக்கு காரணம் என்றது மீன்.

மீன் கூறியதை கேட்டதும்  நாரதருக்கு கோபம் வந்தது என்ன மீனே என்னிடமே விளையாடுகிறாயா ?

நீருக்குள் நீந்தி கொண்டே தாகத்துக்கு நீர் கிடைக்கவில்லை என்று என்னிடம் சலித்து கொண்டு சொல்கிறாயே உன் முட்டாள் தனத்தை என்னவென்று சொல்வது ?

மீன் சிரித்துக்கொண்டே நீர் மட்டும் என்னவாம் பேரானந்தம் தரும் நாராயண மந்திரத்தை உம்முள் வைத்துக்கொண்டே கவலையாக எதோ நலமாக இருக்கிறேன் என்று கூறுகிறீரே நீர் கூறுவது மட்டும் நியாயமோ என்று கேட்க...

நாரதர் வியப்புடன் மீனை பார்க்க மீன் உருவம் மறைந்து திருமால் நாரதர் முன் காட்சியளித்து,

நாரதா என் பெயரை கூறி கொண்டு நீ செய்யும் செயல்கள் யாவும் நன்மையில் தானே முடிவடைகிறது.

கலகம் என்பது அவர் அவர்கள் மனநிலையை பொறுத்து உள்ளது அதை நினைத்து நீ வருந்தி என்ன பயன் யாவரும் நலம் பெறவேண்டும் என்று எண்ணி தானே நீ உன் கலகத்தை துவக்குகிறாய்.

உன் நோக்கம் உயர்வாக இருக்கும் போது அதில் நடக்கும் செயல்களை கண்டு நீ ஏன் வருந்தவேண்டும் என்று கூறி நாரதரை திருமால் ஆசிர்வதித்து விட்டு மறைந்து போனார். நாரதரும் உள்ளம் தெளிவடைந்து புனித-கங்கையில் நிம்மதியாக ஆனந்தமாக நீராடினார் என் கருத்து என்ன கவலையாக இருந்தாலும் சரி கூறுவோம் நாராயண மந்திரம் அதுவே நாளும் பேரின்பம் யாவும் நலமாகவும் முடியும்.

 

ஓம் நமோ நாராயணா !

 

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

 

🌷🌷முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

 

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

இந்த நாள் இனிய நாளாகட்டும்

 

வாழ்க 🙌 வளமுடன்

 

அன்பே🔥இல்லறம்

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

 

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

 

💦💦💦💦💦💦💦💦💦💦💦💦

ஆன்மீக குறிப்புகள் : கடவுள் நிலை அடையக்கூடிய வழிகள் - ஓஷோவின் காதல், கர்மயோகம், தியானம், உண்மையான பக்தி [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Ways to attain godhood - Osho's Love, Karma Yoga, Meditation, True Bhakti in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்