செல்வம் நிலைத்து தரித்தரம் மறைய வழிகள்

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Ways to make wealth last and poverty disappear - Tips in Tamil

செல்வம் நிலைத்து தரித்தரம் மறைய வழிகள் | Ways to make wealth last and poverty disappear

வாசற்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

செல்வம் நிலைத்து தரித்தரம் மறைய என்ன செய்ய கூடாது?

 

1. வாசற்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

 

2. ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.(வாசல் படி நரசிம மூர்த்திக்கு சொந்தம் ).

 

3. உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது.

 

4. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது/சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது,பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.

 

5. உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.

 

6. பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது

 

7. இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.

வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.

 

8. அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.

 

9. செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது;அப்படி வீசினால்,பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.

 

10. செல்வச் செழிப்போடு வாழ,நமது வீட்டில் நமது ஆடைகள்,துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது.நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும்,புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.

 

11. நமது வீட்டிற்குள் நுழைந்ததும்,எப்போதும் நறுமணம் வீச வேண்டும்.அப்படி இருந்தால்,செல்வம் சேரத்துவங்கும்.எங்கோ போக வேண்டிய பணம்,நமது வீட்டை நோக்கி வரும்.அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும்.

 

12. எச்சி தட்டை சேரவிடாமல்

உடனுக்குடன் கழுவி சுத்தம் செய்தால் செல்வம் பெருகும்..✍🏼


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : செல்வம் நிலைத்து தரித்தரம் மறைய வழிகள் - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Ways to make wealth last and poverty disappear - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்