மனதை சரியாய் வைக்க வேண்டிய வழிகள்

கடைபிடிக்க வேண்டியவைகள்:

[ தன்னம்பிக்கை ]

Ways to set the mind straight - Things to observe: in Tamil

மனதை சரியாய் வைக்க வேண்டிய வழிகள் | Ways to set the mind straight

மனதுக்கு ஓய்வு கொடுங்கள் அது தரும் சுகம்! ''சும்மா கிடப்பதே சுகம்’ என்றார்கள் வாழ்வியல் ஞானிகள்.

மனதை சரியாய் வைக்க வேண்டிய வழிகள்

மனதுக்கு ஓய்வு கொடுங்கள் அது தரும் சுகம்!

 

''சும்மா கிடப்பதே சுகம்’ என்றார்கள் வாழ்வியல் ஞானிகள்.

 

நாம் என்ன நினைக்கிறோம். உடல் உறுப்புகளை அசைக்காமல் இருந்தால் என்ன ஆவது..! எப்படி நம்மால் அமைதியாக உட்கார்ந்திருக்க முடியும் என்றுதானே… ஆனால் அந்த ஞானிகள் நமக்குச் சொன்னது ஒரு மறை பொருள் சூத்திரத்தை.

 

நமது மனதை வெறுமையாக வைத்துக் கொண்டு இருப்பது என்பதே அந்த சுகம்.

 

 

அப்படி நம்மால் எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருக்க முடியுமா..!  முடியும் என்று அவர்கள் சொல்கிறார்கள். அப்படி இருந்ததால்தான் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது அளவிட முடியாத சுகம்.

 

ஆராய்ச்சி அற்று ''சும்மா இருப்பதே சுகம்''… இதைத் தேடுகிறேன், அதைத் தேடுகிறேன், ஆன்மீகத்தைத் தேடுகின்றேன், இறைவனைத் தேடுகின்றேன், என்னைத் தேடுகின்றேன் என்ற எந்தத் தேடுதலும் இல்லாமல் சும்மா இருந்தாலே சுகம்.

 

சும்மா ஆராய்ச்சி அற்று இருந்தால் மனம் ஒருமை நிலை ஏற்படும்.

 

 

முழு திருப்தி நிலை வந்துவிடும். அறிவு முழுமை அடையும்.

 

ஒரு மடத்தில் "சும்மா இருப்பது எப்படி?" என செய்முறை விளக்கம் தருமாறு தன் மாணவர்களுக்கு அந்த மடத்து குரு ஒரு பரீட்சை வைத்தார். யார் சிறந்த விளக்கம் அளிக்கிறார்களோ? அவன் தன்னை உணர்ந்தவன் எனப் பாராட்டித் தலைமைப் பொறுப்பு அளிப்பதாக அறிவித்தார்.

 

எல்லா மாணவர்களும் சுறுசுறுப்பாய்,''சும்மா'' 'இருப்பதற்குண்டான வழிகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தனர்.

 

 

சிலர் பேசாமலும்,சிலர் அசையாமலும், சிலர் உணவு உண்ணாமலும் இருந்தனர்.

 

 

சிலர் கண்களை மூடி தியானிப்பது போன்று சும்மா இருந்தார்கள்.

 

இன்னும் சிலர் மலைகள், காடுகள் என்று போய் சும்மா இருப்பதை செய்து காண்பித்தார்கள்.

 

ஆனால், ஒரே ஒரு மாணவன் மட்டும் ''சும்மா'' இருக்க எந்த முயற்சியும் எடுக்காமல், தன்னுடைய வேலைகளை  எப்போதும் போல செய்து கொண்டு இருந்தான்.

போட்டியின் முடிவு நாள் வந்தது..குரு முடிவை சொன்ன போது அனைவருக்கும் அதிர்ச்சி.

 

எந்த முயற்சியும் எடுக்காத அந்த மாணவனுக்குத்தான் குரு பாராட்டிப் பொறுப்பை அளிப்பதாக அறிவித்தார்.

 

இதை ஏற்காமல், எல்லா மாணவர்களும் குருவிடம் சென்று விளக்கம் கேட்டார்கள்.

 

அதற்கு குரு,

 

"நீங்கள் எல்லோரும் சும்மா இருப்பதைப் பற்றி சிந்தித்து சிந்தித்து, எப்படியெல்லாமோ சும்மா இருக்க முயற்சி செய்தீர்கள்..

 

நீங்கள் எடுத்த முயற்சியாலேயே நீங்கள் சும்மா இருக்கத் தவறி விட்டீர்கள்.

 

 

ஆனால், எந்த முயற்சியும் எடுக்காமல், அந்தந்த நேரத்தில் தன் முன் வரும் வேலைகளை செய்தபடி, உண்மையாகவே சும்மா இருந்துக் காட்டியது இவன் மட்டுமே" என்று கூறினார் குரு.

 

நடந்து ஒரு இடத்திற்கு சென்று அமர்கிறோம். அமர்ந்த பிறகும் கால் செயல்பட்டுக் கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்? வேலை முடிந்ததும் கால் தானே ஓய்வெடுப்பதைப் போல, மனமும் ஓய்வெடுக்க வேண்டும்.

அப்போதுதான் நம் மனம் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க முடியும். ஆனால் நாம் மனதிற்கு ஓய்வு கொடுப்பதே இல்லை.

 

கண்டதையும் அதுபாட்டுக்கு அசை போட்டுக் கொண்டே இருக்கிறது.

 

இதைக் கொஞ்சம் நிறுத்தி, ஒருநாளில் ஒரு சில நிமிடங்களாவது அமைதியாக சும்மா இருக்க வேண்டும். இப்படி இருந்து பாருங்கள், அப்புறம் புரியும் ''சும்மா'' இருப்பதில் உள்ள அருமையும், பெருமையும்.

உறுதியும் ஊக்கமும் உயிர்த் தன்மையோடு இருந்தால் உயிரின் தன்மையும் உயர்ந்தே இருக்கும்...!

 

எதுவுமே நிரந்தரம் இல்லாத இவ்வுலகில் உங்கள்  சிரமங்கள் மட்டும் எப்படி நிரந்தரமாகும்; கவலையை விடுங்கள்; வாழ்க்கையை முதலில் வாழ தொடங்குங்கள்!

நாம் நமது

கனவுகளை

அடையத் தவறினால்

கொள்கைகளை அல்ல

நமது வழிகளை

மாற்றிக் கொள்ளுங்கள்..!

🍁 தவறை வறென புரிந்து கொண்டால் தானாகவே திருத்திக் கொள்ள வேண்டும்🍁

 

🍁 தவறென பிறர் சொல்லும்‌ போதாவது

திருந்திக் கொள்ள வேண்டும்🍁

 

🍁 வாழ்க்கையில் தவறுகளைத் திருத்திக் 

கொள்வது தவறில்லை🍁

 

🍁 தவறுகளைப் பழக்கப்படுத்திக் கொள்வது தான் தவறு🍁

 

🍁 பழக எளிதாகவும் விடுவதற்கு கடினமாகவும் இருந்தால் அவை கெட்டப் பழக்கங்கள்🍁

 

🍁 பழகக் கடினமாகவும் விடுவதற்கு எளிதாகவும் இருந்தால் அவை நல்ல பழக்கங்கள்🍁

 

🍁 உங்களிடம் ஏராளமான சக்திகள் புதைந்து உள்ளது🍁

 

🍁 நீங்கள் அவற்றைக் கண்டு, அவற்றை மேலே கொண்டு வந்தால் அதில் சிகரங்களை எட்டலாம்🍁

 

🍁 கரைகள் இல்லாத ஆறுகளும் இல்லை

குறைகள் இல்லாத மனிதரும் இல்லை🍁

 

🍁 தவறை திருத்தி

உன்னை நிறைவாக்கி கொண்டால் வெற்றி நிச்சயம்👍

குடும்பத்தின் சந்தோஷம் என்பது சங்கடங்களையும் சவால்களையும் இணைந்து எதிர் கொள்வதில் தான் இருக்கிறது என்று புரிந்தவர்கள் வெற்றிகரமாகக் குடும்பம் நடத்துகிறார்கள்.

 

உருகத் தொடங்குகிற ஐஸ்கிரீமையும் வேகமாகப் பருகத்தொடங்குகிற குட்டி குழந்தைகளை போல் மனமிருந்தால் எந்தத் துன்பமும் நம்மை அணுகப்போவதில்லை. வனங்களைப் போல் நம் மனமும் மாறக்கூடாது, நம் தினங்களை ரணங்களால் மூடக்கூடாது.

 

கைதவறி விழுகிற கண்ணாடிக் குவளைகள் அல்ல நம் குடும்பங்கள், பட்டை தீட்ட தீட்ட ஜொலிக்கிற உறுதியான வைரங்கள் நம் குடும்பம் என்று உலகுக்கு உணர்த்துவோம். அப்படி இருந்தால், திருமலையில் திருவேங்கடமுடையான் அருள்பாலிக்கும் ஆலயம் மட்டுமன்றி, உள்ளம் பூரிக்கும் நம் இல்லமும் ஆனந்த நிலையம்தான்.

 

ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை சாலக் காத்திருக்குமாம் கொக்கு.

 

சந்தர்ப்பம், சூழ்நிலை என்று இயற்கையின் இழுப்பில் நாம் ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருந்தாலும்,

 

நமக்கே நமக்கு என்று - சில அபூர்வமான வேளை வருவதும் உண்டு.

 

அப்போது நாம் தேமே என்று வாழ்க்கையின் ஓட்டத்திலேயே ஓடாமல், லபக்குன்னு புடிச்சா ஆச்சு...

 

இல்லை , காலம் முழுக்க புலம்பிக்கிட்டே திரிய வேண்டியது தான்.. 

 

┈❀🌿🀼󟽀┈❀🌿🌺🌿❀┈❀🌿🌺🌿❀┈

மனிதனுடைய திறமை பெரிதல்ல. கிடைக்கின்ற சந்தர்ப்பமே அவனைப் பிரகாசிக்கச் செய்கிறது.

 

கடமையைச் செய்யும்போது மகிழ்ச்சியாகச் செய்தால், அதன் முடிவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

 

சின்ன சின்ன நல்ல விஷயங்களைச் சேர்த்துக்கொண்டே முன்னேறுங்கள், அதுவே இறுதியில் நம்மை முழுமையானதாக மாற்றுகின்றது.

 

வாழ்க்கையைப் பந்தயமாக எண்ணி ஓடுபவர்கள் களைத்துப்போய் விடுகிறார்கள். பயணமாய் எண்ணுபவர்கள் கலகலப்பாய் மகிழ்கிறார்கள்.

 

Never Give Space for Anyone to Treat You Like an Option. Because You're Much More than That.

கடைபிடிக்க வேண்டியவைகள்:

1. ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டு.

 

2. மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார்.

 

3. நன்றி, இந்த வார்த்தையை முடிந்தவரை அதிகம் உபயோகி.

 

4. உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள்.

 

5. உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து.

 

6. ரகசியங்களைக் காப்பாற்று.

 

7. புதிய நண்பர்களைத் தேடிக்கொள். பழைய நண்பர்களை மறந்துவிடாதே.

 

8. தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள்.

 

9. உன் தவற்றை தயங்காமல் ஒத்துக்கொள்.

 

10. தைரியமாக இரு. உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி.

 

11. ஒரு போதும் மற்றவரை ஏமாற்றாதே.

 

12. கவனிக்கக் கற்றுக்கொள். சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம் தான் வரும்.

 

13. கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதே.

 

14. உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும்.

 

15.மேலதிகாரிகளையோ பெரியவர்களையோ சந்திக்க செல்லும்போது காரணத்துடனும் நம்பிக்கையுடனும் செல்.

 

16. ஒரு வேலை முடியுமுன் கூலி கொடுக்காதே.

 

17. வதந்தி, வம்பு பேசுவதைத் தவிர்.

 

18. போரில் வெற்றி பெற சண்டையில் விட்டுக்கொடு.

 

19. ஒரே சமயத்தில் நிறைய வேலைகளை ஒத்துக் கொள்ளாதே. பணிவாக மறுத்து விடுவதில் தவறில்லை.

 

20. வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்கும் என்று எதிர்பாராதே.

 

21. பொருட்கள் வாங்கும்போது சிறந்ததையே தேர்ந்தெடு.

 

22. எனக்குத் தெரியாது, மன்னிக்கவும், என்பதை சொல்லத் தயங்காதே..!!! நீ தெரிந்து கொண்டதை மற்றவருக்கும் தெரியபடுத்து...

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

தன்னம்பிக்கை : மனதை சரியாய் வைக்க வேண்டிய வழிகள் - கடைபிடிக்க வேண்டியவைகள்: [ ] | self confidence : Ways to set the mind straight - Things to observe: in Tamil [ ]