மனிதர்கள் கொண்ட வாழ்வில் தான் நாம் என்னும் கவிதை

குறிப்புகள்

[ அனுபவம் தத்துவம் ]

We are poetry in the lives of human beings - Notes in Tamil

மனிதர்கள் கொண்ட வாழ்வில் தான் நாம் என்னும் கவிதை | We are poetry in the lives of human beings

எனக்குக் கிடைக்காதவை அத்தனையும் என் மகளுக்கு கிடைக்கட்டுமென எனக்காய் யோசித்த தந்தையை எத்தனை முறை பார்த்தாயிற்று எனக்கில்லா விட்டாலும் பரவாயில்லை நீ அனுபவித்துக் கொள் என எத்தனை தடவை வலியிலும் வழி விட்ட தாயைப் பார்த்தாயிற்று எனக்கும் தேவை தான் இருந்தும் இப்போதைக்கு நீ உபயோகப்படுத்து எனச் சொல்லி என்னை முற்படுத்திய உடன் பிறப்பை எத்தனை முறை பார்த்தாயிற்று உனக்குப் பிடிக்குமென தெரிந்து தான் தேடிப் பார்த்து இதை வாங்கி வந்தேனென திடீர் வியப்பில் ஆழ்த்தும் உற்ற தோழியை எத்தனை முறை கண்டாயிற்று மனைவியின் உலகினுள் சருகெனக் கூட சோகம் அப்பி விடக் கூடாதென தன்னையே தியாகம் செய்யத் துணியும் எத்தனை கணவன்மாரை பார்த்தாயிற்று எல்லாம் நல்லதாகவே நடக்கட்டுமென முகம் மலர வாழ்த்துச் சொல்லும் எத்தனை புது முகங்களை இதுவரை பார்த்தாயிற்று

மனிதர்கள் கொண்ட வாழ்வில் தான் நாம் என்னும் கவிதை!!!

 

எனக்குக் கிடைக்காதவை  

அத்தனையும் என் மகளுக்கு

கிடைக்கட்டுமென

எனக்காய் யோசித்த தந்தையை

எத்தனை முறை பார்த்தாயிற்று

 

எனக்கில்லா விட்டாலும் பரவாயில்லை

நீ அனுபவித்துக் கொள் என

எத்தனை தடவை வலியிலும் வழி விட்ட தாயைப் பார்த்தாயிற்று

 

எனக்கும் தேவை தான்

இருந்தும் இப்போதைக்கு

நீ உபயோகப்படுத்து

எனச் சொல்லி என்னை

முற்படுத்திய உடன் பிறப்பை

எத்தனை முறை பார்த்தாயிற்று

 

உனக்குப் பிடிக்குமென

தெரிந்து தான் தேடிப் பார்த்து

இதை வாங்கி வந்தேனென

திடீர் வியப்பில் ஆழ்த்தும்

உற்ற தோழியை

எத்தனை முறை கண்டாயிற்று

 

மனைவியின் உலகினுள்

சருகெனக் கூட

சோகம் அப்பி விடக் கூடாதென

தன்னையே தியாகம் செய்யத் துணியும் எத்தனை கணவன்மாரை

பார்த்தாயிற்று

 

எல்லாம் நல்லதாகவே நடக்கட்டுமென

முகம் மலர வாழ்த்துச் சொல்லும்

எத்தனை புது முகங்களை

இதுவரை பார்த்தாயிற்று

 

உண்மையில் நமக்காகவும்

கொஞ்ச நேரத்தை ஒதுக்கி

நம்மை சந்தோஷப்படுத்துவதற்கும்

சிற்சில சந்தர்ப்பங்களை அமைத்திடும் மனிதர்கள் கொண்ட வாழ்வில் தான்

உலாவிக் கொண்டிருக்கிறோம்

நீயும் நானும் நாமும்!


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

அனுபவம் தத்துவம் : மனிதர்கள் கொண்ட வாழ்வில் தான் நாம் என்னும் கவிதை - குறிப்புகள் [ ] | Philosophy of experience : We are poetry in the lives of human beings - Notes in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்