நம்மால் முடிந்த மட்டும் உதவுவோம்

ஆல்பர்ட் ஜன்ஸ்டீன் சமுதாயமும் தனி மனிதனும்

[ உதவி ]

We will help as much as we can. - Albert Justin Society and the Individual in Tamil

மாமேதையான ஆல்பர்ட் ஜன்ஸ்டீன் கூறுகிறார் சமுதாயமும் தனி மனிதனும் என்ற புத்தகத்தில் அவரது எண்ணங்களின் சாரம் இது: "தனிப்பட்ட நம் வாழ்க்கையை நாம் கூர்ந்து நோக்கினால், நமது பெரும்பாலான எண்ணங்களும் செயல்களும் பிற மனிதர்களின் வாழ்வைச் சார்ந்தே உள்ளதைக் காணலாம். நமது இயல்பே கூடி வாழும் தன்மை உடையது தான்.

நம்மால் முடிந்த மட்டும் உதவுவோம் ..!

மாமேதையான ஆல்பர்ட் ஜன்ஸ்டீன் கூறுகிறார்
சமுதாயமும் தனி மனிதனும் என்ற புத்தகத்தில் 
அவரது எண்ணங்களின் சாரம் இது:

"தனிப்பட்ட நம் வாழ்க்கையை நாம் கூர்ந்து நோக்கினால், நமது பெரும்பாலான எண்ணங்களும் செயல்களும் பிற மனிதர்களின் வாழ்வைச் சார்ந்தே உள்ளதைக் காணலாம். நமது இயல்பே கூடி வாழும் தன்மை உடையது தான்.

பிற மனிதர்கள் பயிராக்கிய தானியங்களையே நாம் உட்கொள்கிறோம், 

பிறர் நெய்த ஆடைகளையே நாம் உடுத்துகிறோம், 

பிறர் கட்டிய வீடுகளிலேயே நாம் வசிக்கிறோம். 

நாம் வாழ்வதற்கான அன்றாட அறிவும் தகவல்களும் நமது நம்பிக்கைகளும், பெரும்பாலும் பிற மனிதர்கள் மூலமே நம்முள் வியாபித்துள்ளன.

சமுதாயம் என்ற சத்தான விளை நிலம் இல்லாமல் எப்படி தனிமனிதனால் வளர்ச்சியடைய முடியாதோ, அதே போன்று, சிந்தனைத் திறன்மிக்க தனிமனிதர்கள் இல்லையென்றால், சமுதாயத்தால் முன்னேற முடியாது" 

மரம் உதவுகிறது நிழல் தந்து ..

புல்லங்குழல் உதவுகிறது இசைக்கு தன் உயிர் தந்து ..

ஏணி கூட உதவுகிறது நம்மை மேலே ஏற்றி விட ...

நாம் சற்று கவனித்தோமானால் எல்லாமே உதவுகின்றன என்று தோன்றும்!

ஆகவே முடிந்த அளவு கண்டிப்பாக பிறர்க்கு உதவி செய்ய வேண்டும்.

அடுத்தவருக்கு உதவி செய்தால் பின்னால் அது உங்களுக்கே திரும்பக் கிடைக்கும்.

நீங்கள் செய்கிற உதவியைப் பெறுபவர் அவர் மனசார வாழ்த்துகிறார்ப்போல் போல் அது இருக்கட்டும் ... 

உதட்டால் அல்ல ..!

நாம் செய்தது நமக்கே திரும்ப வரும் என்பதுதான் பிரபஞ்ச விதி ..!

முடிந்த மட்டும் உதவுவோம் ..!

நாம் எதை தேடுகிறோமோ அதுவே கிடைக்கும்.

நாம் எதை நினைக்கிறோமோ அதுவே நடக்கும்.

எனவே நல்லதையே தேடுவோம் நல்லதையே சிந்திப்போம் நல்லதே நடக்கட்டும்!

நாம் ஒருவருக்கொருவர் உதவியாய் இருப்போம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம் 

உதவி : நம்மால் முடிந்த மட்டும் உதவுவோம் - ஆல்பர்ட் ஜன்ஸ்டீன் சமுதாயமும் தனி மனிதனும் [ ] | help : We will help as much as we can. - Albert Justin Society and the Individual in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்