ஒரு மனிதன் தன் வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறானா இல்லையா என்பதை சில அறிகுறிகள் மூலம் நாம் அறிந்துகொள்ள முடியும். பொதுவாகவே நாம் நம்மைப்பற்றி நினைப்பதை விட, இரு மடங்கு சிறப்பாக செயல்படும் தன்மை கொண்டவர்களாகத் தான் இருக்கிறோம். 1. ஒரு வருடத்திற்கு முன்னர் நீங்கள் இருந்தது போல், தற்போது இருக்க மாட்டீர்கள். வாழ்க்கையிலும் மனதளவிலும் பல மாற்றங்களை அடைந்திருப்பீர்கள். 2. வாழ்க்கையில் பல கடினமான சூழல்கள் பலவற்றைக் கடந்து வந்திருப்பீர்கள். அந்தப் பயணம் உங்களை தைரியசாலியாக மாற்றியிருக்கும். 3. பலருக்கு இலக்குகள் என்றால் என்னவென்றே தெரியாதபோது, நீங்கள் உங்களுடைய இலக்குகள் மீது மிகவும் கவனத்தை செலுத்துவீர்கள்.
வாழ்க்கையை சிறப்பாக வாழ உதவும் சில வாழ்க்கைத்
தந்திரங்கள் என்னென்ன?
ஒரு மனிதன் தன் வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறானா
இல்லையா என்பதை சில அறிகுறிகள் மூலம் நாம் அறிந்துகொள்ள முடியும்.
பொதுவாகவே நாம் நம்மைப்பற்றி நினைப்பதை விட, இரு மடங்கு சிறப்பாக செயல்படும் தன்மை கொண்டவர்களாகத்
தான் இருக்கிறோம்.
1. ஒரு வருடத்திற்கு முன்னர் நீங்கள் இருந்தது போல், தற்போது இருக்க மாட்டீர்கள். வாழ்க்கையிலும் மனதளவிலும்
பல மாற்றங்களை அடைந்திருப்பீர்கள்.
2. வாழ்க்கையில் பல கடினமான சூழல்கள் பலவற்றைக் கடந்து
வந்திருப்பீர்கள். அந்தப் பயணம் உங்களை தைரியசாலியாக மாற்றியிருக்கும்.
3. பலருக்கு இலக்குகள் என்றால் என்னவென்றே தெரியாதபோது, நீங்கள் உங்களுடைய இலக்குகள் மீது மிகவும் கவனத்தை
செலுத்துவீர்கள்.
4. உங்களுடைய நட்பு வட்டம் வெகுவாக குறைந்திருக்கும்.
ஒருவர்/ இருவர் மட்டுமே நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள்.
5. கிளர்ச்சிக்கு நடுவே அமைதியைத் தேர்ந்தெடுப்பீர்கள்.
அமைதிதான் உங்களுக்கு அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
6. தவறுகளைக் கண்டு மனம் கலங்குவதற்கு பதில், அதை ஒரு பாடமாக ஏற்றுக்கொள்ள முற்படுவீர்கள்.
7. எவ்வளவு தோல்விகள் அடைந்தாலும், அனைத்தையம் உங்களால் சரி செய்ய முடியும் என்ற
நம்பிக்கை ஏற்படும்.
இவை அனைத்தும் உங்களிடம் இருந்தால், வாழ்த்துகள் நீங்கள் உங்கள் வாழ்வின் வளர்ச்சிப்
பாதையில் உள்ளீர்கள்.
இவை ஏதும் உங்கள் வாழ்வில் நிகழவில்லை என்றால், இவற்றை ஏற்படுத்திக்கொள்ள முற்படுங்கள்.
இதுவே வாழ்க்கையை சிறப்பாக வாழ உதவும் சில வாழ்க்கைத்
தந்திரங்களாகும்.
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...
இந்த நாள் இனிய நாளாகட்டும்
வாழ்க வளமுடன்
அன்பே சிவம்
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
வாழ்க்கை பயணம் : வாழ்க்கையை சிறப்பாக வாழ உதவும் சில வாழ்க்கைத் தந்திரங்கள் என்னென்ன - குறிப்புகள் [ ] | Life journey : What are some life tricks to help you live a better life - Notes in Tamil [ ]