தீபம் ஏற்றும் திரிகளை பொறுத்து ஏற்படும் பலன்கள் என்ன

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

What are the benefits of lighting candles? - Tips in Tamil

தீபம் ஏற்றும் திரிகளை பொறுத்து ஏற்படும் பலன்கள் என்ன | What are the benefits of lighting candles?

இப்படி செய்வதால் நமக்கு குபேரரின் அருள் கிடைத்து குடும்பத்தில் அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். தொடர்ந்து குபேர விளக்கை ஏற்றி வழிபட்டு வர குடும்பத்தில் இருந்த துன்பங்கள், கடன் பிரச்சினை, சங்கடங்கள் அனைத்தும் நீங்கி நல் வாழ்வு கிடைக்கும்.

தீபம் ஏற்றும் திரிகளை பொறுத்து ஏற்படும் பலன்கள் என்ன?

 

இப்படி செய்வதால் நமக்கு குபேரரின் அருள் கிடைத்து குடும்பத்தில் அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். தொடர்ந்து குபேர விளக்கை ஏற்றி வழிபட்டு வர குடும்பத்தில் இருந்த துன்பங்கள், கடன் பிரச்சினை, சங்கடங்கள் அனைத்தும் நீங்கி நல் வாழ்வு கிடைக்கும்.

 

குபேர திரி ( பெரிய தும்பை இலை)

 

குபேர திரி என்பது பெரிய தும்பையின் இலை. அதைத்தான் நாம் திரியாக பயன்படுத்துகிறோம். இந்த திரிக்கு அதிக விதமான சக்திகள் உண்டு. பச்சை இலையை திரியாக பயன்படுத்தினால் எரியக்கூடியது. தும்பை என்றால் "துன்பம்" என்று பொருள். அதனால் இதில் விளக்கு எற்றினால் :

 

🔥குடும்பத்தில் சந்தோஷம் பெருகம்

🔥நோய்களை குணமாக்கும்

🔥செல்வம் அதிகரிக்கும்

🔥கண் திருஷ்டி நீங்கும்

🔥நேர்மறை சக்திகள் அதிகரிக்கும்.

 

தாமரை நார் திரி / தாமரை தண்டு திரி

 

தாமரை நார் திரி அதாவது தாமரை மலர்களின் தண்டை உலர்த்தி, காய வைத்து விளக்கில் திரியாக போட்டு ஏற்றி வர வாழ்வின் செல்வ நிலை உயரும். உங்களுடைய முந்தைய பிறவிகளின் பாவங்கள் அனைத்தையும் போக்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்பினால் உங்களுக்கு இந்த வழி உதவியாக இருக்கும். தாமரை தண்டை திரி போல கத்தரித்து காயவைத்து அதில் நெய்தீபம் ஏற்றவும். இதில் விளக்கு ஏற்றுவதால் லட்சுமியின் பூரண அருள் கிடைக்கும்.

 

வாழை திரி

 

வாழைத்தண்டை கொண்டு திரி செய்து அதன் மூலம் விளக்கேற்றுவது நீங்கள் உங்களுக்கே தெரியாமல் செய்த தவறுகளுக்கு உங்களுக்கு கடவுளிடம் மன்னிப்பை பெற்றுத்தரும். இதுமட்டுமின்றி உங்கள் முன்னோர்கள் உங்களுக்கு அளித்த சாபங்களை நீக்கும்.

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : தீபம் ஏற்றும் திரிகளை பொறுத்து ஏற்படும் பலன்கள் என்ன - குறிப்புகள் [ ] | Spiritual Notes : What are the benefits of lighting candles? - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்