எழுந்ததும் பார்க்க வேண்டிய அதிர்ஷ்டம் தரும் பொருட்கள் என்னென்ன?

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

What are the lucky things to see when you wake up? - Tips in Tamil

எழுந்ததும் பார்க்க வேண்டிய அதிர்ஷ்டம் தரும் பொருட்கள் என்னென்ன? | What are the lucky things to see when you wake up?

காலையில் எழுந்ததும் இந்த ஒரு விஷயத்தை முதன் முதலில் நீங்கள் பார்த்தால் உங்களை வெல்ல எவராலும் முடியாது தெரியுமா? எழுந்ததும் பார்க்க வேண்டிய அதிர்ஷ்டம் தரும் பொருட்கள் என்னென்ன?

எழுந்ததும் பார்க்க வேண்டிய அதிர்ஷ்டம் தரும் பொருட்கள் என்னென்ன?

காலையில் எழுந்ததும் இந்த ஒரு விஷயத்தை முதன் முதலில் நீங்கள் பார்த்தால் உங்களை வெல்ல எவராலும் முடியாது தெரியுமா? எழுந்ததும் பார்க்க வேண்டிய அதிர்ஷ்டம் தரும் பொருட்கள் என்னென்ன?

 

🔯 காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நம்முடைய கவனம் எதன் மீது இருக்கிறதோ, அதன் அதிர்வலைகள் அன்றைய நாள் முழுவதும் நம்முடைய வாழ்வில் ஒளிர்வதாக சாஸ்திரங்கள் குறிப்பிட்டு கூறுகிறது. அந்த வகையில் நாம் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக உள்ளங்கையை பார்ப்பது உண்டு. ஒருவருடைய உள்ளங்கையில் மகாலட்சுமி வீற்றிருப்பதாக ஐதீகம் உண்டு, எனவே மஹாலட்சுமியை காண்பதாக நினைத்துக் கொண்டு நம்முடைய இரு கைகளை இணைத்து கண்களைத் திறந்து உள்ளங்கையை பார்த்துவிட்டு பின்னர் மற்ற வேலைகளை துவங்குவது உண்டு. அந்த வகையில் காலையில் நீங்கள் பார்க்க வேண்டிய அதிர்ஷ்டம் தரும் பொருட்கள் என்னென்ன? என்பதைத் தான் பக்தி பதிவில் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

 

🔯 காலையில் எழுந்ததும் நீங்கள் பூரண கும்பத்தை பார்க்க நேர்ந்தால் அன்றைய நாள் முழுவதும் பூரணமான தன்மையுடன் இருக்குமாம். அதாவது நீங்கள் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் அது இடையில் நிற்காமல் பூரணமாக முடிவடையும். *

 

🔯 ஒரு விஷயத்தில் வெற்றி காண வேண்டும், இன்டர்வியூக்கு செல்கிறீர்கள் என்றால் அதில் சாதக பலன் வர வேண்டும், பூரணம் பெற வேண்டும் என்று நினைத்தால், எழுந்ததும் பூரண கும்பத்தை பார்த்துவிட்டு பின்னர் நீங்கள் இன்டர்வியூக்கு செல்லலாம்.

 

🔯 அதே போல நீங்கள் மங்களகரமான ிஷயத்திற்கு செல்ல இருக்கிறீர்கள் அல்லது பேச்சு வார்த்தைகளை நிகழ்த்த இருக்கிறீர்கள், முதல் முதலாக திருமண சம்பிரதாயங்களை செய்ய இருக்கிறீர்கள் என்றால் அன்றைய நாளில் நீங்கள் காலையில் எழுந்ததும் மஞ்சள், குங்குமத்தை பார்த்து விட்டு எழலாம், இதனால் மங்களம் நிறையும், தடைகள் வராது.

 

🔯 மனம் முழுக்க குழப்பங்களும், எதிர்மறை எண்ணங்களும் அதிகரித்து இருக்கும், மனம் இறுக்கமாகவும், உளைச்சல் ஆகவும் இருக்கும் சமயங்களில் நீங்கள் காலையில் எழுந்ததும் திருமண் எனப்படும் திருநீற்றை பார்த்துவிட்டு எழலாம். இது ரொம்பவே மன தைரியத்தை கொடுக்கக் கூடிய ஒரு பொருளாக இருக்கிறது. இரவு தூங்கும் பொழுதும் நீங்கள் இதை நெற்றியில் இட்டுக் கொண்டு தூங்கலாம்.

 

குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் இருக்கிறது, ஒருவருக்கு ஒருவர் மனஸ்தாபம் நீடித்துக் கொண்டிருக்கிறது, பிரச்சனை தீர்வுக்கு வரவில்லை என்றால், அந்த சமயங்களில் நீங்கள் காலையில் எழுந்ததும் முதல் முதலாக திருவிளக்கை அதாவது குத்து விளக்கை பார்த்துவிட்டு எழலாம்.

 

🔯 அதிலும் தீபம் எரிந்து கொண்டிருக்கும் சமயத்தில் நீங்கள் பார்த்துவிட்டு எழுந்தால் சீக்கியப் உங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை முடித்துக் கொள்வீர்கள்.

 

🔯 பகை நீங்கி எல்லோரிடமும் பரஸ்பர ஒற்றுமை மற்றும் நட்பு வளர்வதற்கு நீங்கள் ஆசைப்படுகிறீர்கள், ஆனால் உங்களை சுற்றி இருப்பவர்கள் அதற்கு தடையாக இருக்கிறார்கள் அல்லது முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்றால் அந்த சமயங்களில் நீங்கள் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக சிவன், பைரவர், நரசிம்மர், மகாகாளி, குலதெய்வம், கண்ணாடி, யானை போன்றவற்றினை பார்த்துவிட்டு பின்னர் அன்றைய நாள் வேலைகளை நீங்கள் செய்தால் உங்களை சுற்றி இருக்கும் சூழ்ச்சிகள் எதுவாயினும் அதை ஒன்றுமே இல்லாமல் செய்து விடும். நீங்கள் நினைத்ததை நடத்தி காட்டும். உங்களை வெள்ளை எவராலும் முடியாத அளவிற்கு உங்களுக்கு அது நற்பலன்களை அள்ளிக் கொடுக்கும்.✍🏼


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம் 

ஆன்மீக குறிப்புகள் : எழுந்ததும் பார்க்க வேண்டிய அதிர்ஷ்டம் தரும் பொருட்கள் என்னென்ன? - குறிப்புகள் [ ] | Spiritual Notes : What are the lucky things to see when you wake up? - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்