புதிதாக உங்களையே முழுதாக நம்பி வரும் பெண்ணை காப்பாற்றும் அளவிற்கு போதுமான பணம் உங்களிடம் இருக்கிறதா? பணம் இல்லை என்று தெரிந்தால் நாளையே உங்கள் இருவருக்கும் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படலாம். உங்கள் குடும்ப சூழ்நிலையை அவர்களிடம் தெளிவாக பேசி விடுங்கள். இது பல பிரச்சனைகளை தவிர்க்கும் முழுக்க முழுக்க அம்மா பேச்சையே நம்பி அவரது முடிவின் படி செயல்படுபவர் என்றால் புதிதாக வரும் பெண்ணுக்கும் உங்களுக்கும் விரைவிலேயே பிரச்சனைகள் தொடங்கலாம் தயாராகுங்கள். உங்கள் நண்பர் வட்டாரம் பெரியதோ சிறியதோ அவர்களிடமிருந்து சற்று விலக ஆரம்பித்து விடுங்கள். வடிவேலு சொல்வது போல் பழக்க வழக்கங்களை பஞ்சாயத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். பெண்களைப் பற்றிய உங்களது கருத்து என்னவென்று தெரியவில்லை உங்கள் மனைவி கருப்போ சிவப்போ படித்தவரோ படிக்காதவரோ உயரமோ குட்டையோ அவருக்கு மனது என்று ஒன்று உண்டு அவருக்கும் ஆசாபாசங்கள் உண்டு முடிந்த அளவிற்கு அவருடைய விருப்பங்களை நிறைவேற்ற பாருங்கள். உங்கள் மனைவியைப் பற்றி பிறர் கருத்து கூறும் அளவிற்கு நடந்து கொள்ள வேண்டாம். எந்த சூழ்நிலையிலும் உங்களது மனைவியை விட்டுக் கொடுக்காதீர்கள் உங்கள் ஒருவரை மட்டுமே நம்பி தனது உற்றார் உறவினர் பெற்றோர் சுற்றத்தார் அனைவரையும் விட்டுவிட்டு உங்களை மட்டுமே நம்பி உங்கள் வீட்டிற்கு வந்துள்ளார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
திருமணத்திற்கு முன்பு நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?
புதிதாக உங்களையே முழுதாக நம்பி வரும் பெண்ணை
காப்பாற்றும் அளவிற்கு போதுமான பணம் உங்களிடம் இருக்கிறதா? பணம் இல்லை என்று தெரிந்தால் நாளையே உங்கள் இருவருக்கும்
ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படலாம். உங்கள் குடும்ப சூழ்நிலையை அவர்களிடம் தெளிவாக பேசி
விடுங்கள். இது பல பிரச்சனைகளை தவிர்க்கும்
முழுக்க முழுக்க அம்மா பேச்சையே நம்பி அவரது முடிவின்
படி செயல்படுபவர் என்றால் புதிதாக வரும் பெண்ணுக்கும் உங்களுக்கும் விரைவிலேயே பிரச்சனைகள்
தொடங்கலாம் தயாராகுங்கள்.
உங்கள் நண்பர் வட்டாரம் பெரியதோ சிறியதோ அவர்களிடமிருந்து
சற்று விலக ஆரம்பித்து விடுங்கள். வடிவேலு சொல்வது போல் பழக்க வழக்கங்களை பஞ்சாயத்தோடு
நிறுத்திக் கொள்ளுங்கள்.
பெண்களைப் பற்றிய உங்களது கருத்து என்னவென்று
தெரியவில்லை உங்கள் மனைவி கருப்போ சிவப்போ படித்தவரோ படிக்காதவரோ உயரமோ குட்டையோ அவருக்கு
மனது என்று ஒன்று உண்டு அவருக்கும் ஆசாபாசங்கள் உண்டு முடிந்த அளவிற்கு அவருடைய விருப்பங்களை
நிறைவேற்ற பாருங்கள்.
உங்கள் மனைவியைப் பற்றி பிறர் கருத்து கூறும்
அளவிற்கு நடந்து கொள்ள வேண்டாம். எந்த சூழ்நிலையிலும் உங்களது மனைவியை விட்டுக் கொடுக்காதீர்கள்
உங்கள் ஒருவரை மட்டுமே நம்பி தனது உற்றார் உறவினர் பெற்றோர் சுற்றத்தார் அனைவரையும்
விட்டுவிட்டு உங்களை மட்டுமே நம்பி உங்கள் வீட்டிற்கு வந்துள்ளார் என்பதை நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள்
உடல் ரீதியாக மன ரீதியாக திருமணத்திற்கு தயாராகுங்கள்.
இதுதொடர்பாக உங்கள் நண்பர்களே உங்களுக்கு ஏகப்பட்ட ஆலோசனைகளை அள்ளி வழங்குவார்கள்
நீங்கள் ஒரு புது உலகத்தில் நுழைய போகிறீர்கள்
ஓராண்டு கழித்து உங்களுக்கு ஒரு வாரிசு வரும் இது போன்ற நிகழ்வுகளை இப்போதிருந்தே கணித்து
உங்களது செலவுகள் உங்களது வருமானம் இவற்றை கணித்து பணத்தை முடிந்தளவிற்கு சேமிக்க பாருங்கள்.
இதுநாள் வரை உங்களுக்கு மது புகையிலை இன்னும்
வேறு ஏதேனும் கெட்ட பழக்கங்கள் இருக்குமானால் அவற்றை இன்றே நிறுத்துங்கள் அல்லது சில
நாட்களுக்குள் நிறுத்த முயற்சி செய்யுங்கள். நமக்கு வரும் மனைவி ஏதேனும் கெட்ட பழக்கங்கள்
உடன் வந்தால் நாம் ஒப்புக் கொள்வோமா?
மனதை நேர்மறையாக வைத்துக்கொள்ளுங்கள் எதிர்மறை
கருத்துக்களை தவிருங்கள்
பணம் நகை போன்றவை வெறும் ஆடம்பரப் பொருட்களே.
அவற்றிற்கு எந்த காலத்திலும் முக்கியத்துவம் கொடுத்து விடாதீர்கள்.
உங்கள் எதிர்காலத் திட்டங்களை உங்கள் மனைவியுடன்
விவாதிக்க தயாராகுங்கள் எல்லா முடிவுகளையும் நீங்களே எடுக்க வேண்டாம் எந்த முடிவாக
இருந்தாலும் மனைவியுடன் கலந்து ஆலோசித்து செய்யுங்கள் முடிவுகளை எடுக்கும் முன் அவர்களிடம்
கலந்தாலோசிப்பது அவர்களுக்கு மனதளவில் பெரிய உத்வேகத்தை தரும்
ஓராண்டு ஈராண்டு ஐந்து ஆண்டு என திட்டங்களை வகுத்து
உங்கள் மாதாந்திர ஊதியத்தை அதற்கென ஒதுக்கி திட்டங்களை நிறைவேற்ற பாருங்கள் அவசியமான
செலவுகளை மட்டுமே செய்யுங்கள் அனாவசியமான செலவுகளை தவிருங்கள். எது அவசியம் எது அனாவசியம்
என்பதை நீங்கள் இருவருமே சேர்ந்து முடிவெடுங்கள். இந்த விஷயத்தில் பிறரின் மூக்கை உள்ளே
விடாதீர்கள்.
சந்தோஷமான மணவாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்.....
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
குடும்ப பொறுப்பு : திருமணத்திற்கு முன்பு நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன - குறிப்புகள் [ ] | Family responsibility : What are the things we need to know before marriage - Notes in Tamil [ ]