குளிர் காலம் ஆரம்பிச்சாச்சு. அடுத்து வீட்டில் ஒவ்வொருவராய் மாறி மாறி சளி, காய்ச்சல் என வந்து குளிரோடு உடல் நிலையும் பாதித்து இம்சை பண்ணும். குளிர்கால தட்பவெப்பம் கிருமிகள் பெருக்கத்திற்கு ஏதுவான காலமென்பதால் விரைவில் நமது உடலில் புகுந்து நோய்களை உண்டாக்குகின்றன.
ஜலதோஷத்தை குணப்படுத்த என்னவெல்லாம் செய்யலாம்?
குளிர் காலம்
ஆரம்பிச்சாச்சு. அடுத்து வீட்டில் ஒவ்வொருவராய் மாறி மாறி சளி, காய்ச்சல் என வந்து
குளிரோடு உடல் நிலையும் பாதித்து இம்சை பண்ணும். குளிர்கால தட்பவெப்பம் கிருமிகள்
பெருக்கத்திற்கு ஏதுவான காலமென்பதால் விரைவில் நமது உடலில் புகுந்து நோய்களை
உண்டாக்குகின்றன.
சளி பிடித்தால், நமது உடலிலுள்ள
வெள்ளையணுக்களே அக்கிருமிகளுடன் சண்டையிடும். அவற்றை பூஸ்ட் அப் செய்வது போல் நமது
மூலிகைகளைய அவற்றிற்கு தரும் போது வெள்ளையணுக்கள் பலம் பெற்று கிருமிகளை
வெளியேற்றும். இது நடப்பதற்கு குறைந்தது 3 -5 நாட்களாகும்.
இப்படி இயற்கையாக
நடக்கும் நிகழ்வுகளை நாம் மாத்திரைகள் கொண்டு தடுக்கும்போது, வெள்ளையணுக்கள்
எதிர்த்து போரிடாமல் சோம்பேறியாகும். நமது உடல் எல்லாவ்ற்றிற்கும் மாத்திரைகளையே
எதிர்பார்க்கும். ஆகவே முடிந்தாரை மாத்திரைகளை தவிர்த்து இயற்கை வைத்தியங்களை
முயற்சியுங்கள்.
குறிப்பு 1 :
கொய்யாப்பழத்தை மிளகுத்
தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.
குறிப்பு 2
ஆரஞ்சு ஜூஸில் தேன்
மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில்
இருந்து விடுபடலாம்.
குறிப்பு 3 :
ஒரு டம்ளர்
அன்னாசிச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு
மறையும் சளித்தொல்லை குணமாகும்.
குறிப்பு 4 :
வெங்காயத்தை தீயில்
சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.
குறிப்பு 5 :
மாட்டுப் பாலை நன்கு
கொதிக்க வைத்து,
அதில் தேன் கலந்து
குடிப்பதன் மூலமும் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
குறிப்பு 6 :
கற்பூரவள்ளி இலையை
நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும்.
குறிப்பு 7 :
வெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து
குடித்தாலும்,
இருமலில் இருந்து உடனடி
நிவாரணம் கிடைக்கும்.
*உடல்சூடு தணிக்கும்
நார்த்தம்பழம். நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது.
இதன் பழங்கள் பெரிதாக
அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின்
மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு
நார்த்தம் பழத்தில்
நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது.
இந்தப் பழம் எல்லாக்
காலங்களிலும் கிடைக்கும்.
நன்கு பழத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து
காணப்படும்.
பழத்தின் தோல்பகுதி
கனமானதாக இருக்கும்.
இவற்றில் நீர்
நிரம்பியிருக்கும். புளிப்பு சுவை மிகுதியாக இருப்பதால் இந்தப் பழத்தை சிலர்
விரும்பி சாப்பிடுவதில்லை.
ஆனால் நன்கு கனிந்த பழம்
நல்ல சுவையுடன் இருக்கும்கிராம மக்களின் சாத்துகுடியாக நார்த்தம்பழமே
விளங்குகிறது.*
நார்த்தை மரங்கள் நூறு
ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. நார்த்தையில் வேர்,மலர்,கனிகள் பயன்கொண்டவை
செயல்திறன் மிக்க
*வேதிப்பொருட்கள்:
கனிகளில் அமினோ
அமிலங்கள்,
வைட்டமின்கள்,கொழுப்பு அமிலங்கள்
*உள்ளன.
அஸ்கார்பிக் அமிலம், அலனைன்,நியசின்,வைட்டமின் பி, அஸ்பார்டிக் அமிலம்,* இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்கமோட்டின், நாரிங்கின், சிட்ரல்,லிமோனின், நார்டென்டாடின், வெலென்சிக் அமிலம்
மலர்கள் தசை இறுக்கி, செயல்ஊக்கி, வேர் வாந்திக்கும்
வயிற்றுப் *புழுக்களுக்கும் எதிரானது.
மலச்சிக்கல் மற்றும்
சிறுநீரகக்கல்* *நோய்களுக்கு மருந்தாகிறது.
கனியின் தோலுறை*
*வயிற்றுப் போக்கை நிறுத்தும்.
வயிற்றில் ஏற்பட்ட
புண்ணிற்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது.*
*நாரத்தங்காயை அல்லது
பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வர ரத்தம் சுத்தமடையும்.
வாதம், குன்மம் (வயிற்றுப்
புண்), வயிற்றுப் புழு இவை நீங்கும்.
பசியை அதிகரிக்கும்.*
*கனிந்த கனிகள்
வலுவேற்றி,
ஊக்குவி, இதன் சாறு வாந்தி
நிறுத்தும்.
பசி தூண்டுவி, தசை இறுக்கி குளிர்ச்சி
தரும்.
காய்ச்சலின் வெப்பம்
மற்றும் தாகம் போக்கும்.
நாரத்தை பழத்தின் மேல் தோலை தேன் அல்லது
சர்க்கரைப் பாகில் ஊற வைத்து நன்கு ஊறிய பின் சீதக் கழிச்சல் உடையவர்களுக்கு
கொடுக்க நல்ல பலன் தரும்.*
*உடல் சூடு அதிக
பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு
வந்தால் உடல் சூடு தணியும்.
உடலுக்கு புத்துணர்வு
கிடைக்கும். இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம்
குறையும்.*
பித்த அதிகரிப்பால் ஈரல்
பாதிக்கப்படுவதுடன் இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த
அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு
வந்தால் பித்தம் தணியும்.
*நார்த்தம் பழத்தை சாறு
எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல்
வலுப்பெறும்.
இரத்தம் மாசடையும்போது
இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன.
இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.
நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால்
இரத்தம் சுத்தமடையும்.
நோயின் தாக்கத்தினால்
அவஸ்தைப்பட்டு விடு பட்டவர்களின் உடல்நிலை தேற நார்த்தம்பழச் சாறு அருந்துவது
மிகவும் நல்லது.*
கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச்
சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து
அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்
*சிலர் கொஞ்சம்
சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத்
தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து
அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல்
நீங்கும்.
எல்லாக் காலங்களிலும்
கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட ஆயுளோடு வாழலாம்*
*நாரத்தங்காய்
இலைகைளை நரம்பு நீக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, அதனுடன் வெள்ளை உளுந்தம்
பருப்பு, கடலைப் பருப்பு, தேங்காய் துருவல் வறுத்து
சேர்த்து மிளகாய், உப்பு, புளி, பெருங்காயம், கறிவேப்பிலையும் சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து
சாப்பிடலாம்.
இப்படி சாப்பிட்டு
வர பித்தம் குறையும்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும்
நா சுவையின்மை, குமட்டல், வாந்தி நிற்கும்.
பசியின்மை குறைந்து
நன்கு பசிக்கும்.
பொதுவாக உணவுடன் நார்த்தங்காய்
ஊறுகாய் சேர்த்துக் கொண்டால் செரியாமை பிரச்சினை வரவே வராது.
சாப்பிட்டதும் ஏப்பம்
வந்து கொண்டிருந்தாலும், ஜீரணமாக நெடுநேரம் ஆனாலும் நார்த்தங்காய் ஊறுகாயை சாப்பிட்டால்
உடனடி பலன் கிட்டும்.
வயிற்றில் வாயுப் பிரச்சினை
ஏற்படும் நிலையில் ஒரு ஊறுகாய் துண்டை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால்
வாயுக் கோளாறு விரைவில் நீங்கும்.*
*வயிற்றில் ஏற்பட்ட
புண்ணிற்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது.
நாரத்தங்காயை வட்ட வட்டமாய்
நறுக்கி உப்பு சேர்த்து ஒரு மண் பானையில் இட்டு வாயை துணியால் மூடி விடவும்.
இதனை அவ்வப்போது வெயிலில்
உலர்த்தி வரவும். இப்படி 40 நாட்கள் செய்து பிறகு அதில் இருந்து தினமும்
ஒரு துண்டை எடுத்து காலையிலும், மாலையிலும் சாப்பிட்டு வர வயிற்றுப் புண்
குணமாகும்.
நாரத்தங்காயை அல்லது
பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வர ரத்தம் சுத்தமடையும்.
வாதம், குன்மம் (வயிற்றுப்
புண்), வயிற்றுப் புழு இவை நீங்கும்.
பசியை அதிகரிக்கும்.
நாரத்தை பழத்தின் மேல்
தோலை தேன் அல்லது சர்க்கரைப் பாகில் ஊற வைத்து நன்கு ஊறிய பின் சீதக்
கழிச்சல் உடையவர்களுக்கு கொடுக்க நல்ல பலன் தரும்.
நாரத்தை பழத்தை சாறு பிழிந்து
குடித்து வர உடல் வெப்பத்தை போக்கி குளிர்ச்சி தரும். வாந்தியையும், தாகத்தையும் தணிக்கும்*
*உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும்
சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்
ஆரோக்கியத்தை காப்போம் !!மகிழ்ச்சியுடன் இருப்போம்.!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.
- தமிழர் நலம்
ஆரோக்கியம் குறிப்புகள் : ஜலதோஷத்தை குணப்படுத்த என்னவெல்லாம் செய்யலாம்? - நார்த்தங்காயின் மருத்துவ குணங்கள் [ ] | Health Tips : What can be done to cure a cold? - Medicinal properties of Narthangai in Tamil [ ]