அனைத்து நோய்களும் தோன்ற காரணமாக இருப்பது இரண்டு ஒன்று மலம் மற்றொன்று கபம் இவை இரண்டில் எது காட்டினாலும் ஒரு நோய் தோன்ற இதுவே கரணம் என்று சித்த நூல் குறிப்பிடுகிறது,
மூல நோய் குணமாக என்ன செய்யலாம்??
👇👇
அனைத்து நோய்களும் தோன்ற
காரணமாக இருப்பது இரண்டு ஒன்று மலம் மற்றொன்று கபம் இவை இரண்டில் எது காட்டினாலும்
ஒரு நோய் தோன்ற இதுவே கரணம் என்று சித்த நூல் குறிப்பிடுகிறது,
முதலில் மூலத்திற்கு
காரணமா குணங்களை குறைப்பதால், பின்பு நாம் எடுத்துக்கொள்ளும்
மருந்து அதை குணமாக்க உதவும்.
திரிபலா சூரணம் இரவு உணவுக்கு பின்
1ஸ்பூன் எடுத்து கொள்வதை பழக்கமாக கொள்ளுங்கள், மலச்சிக்கல்
இல்லாமல் இருக்க , 1 பூவன் வரழைப்பழம், 1 ஸ்பூன் வெளக்கெண்ணை உணவுக்கு பின்
சாப்பிடலாம், மசாலா உணவை தவிக்கவும் , நெய் மற்றும் வெண்ணை
சேர்த்துக்கொள்ளுங்கள், மூலத்திற்கு மருந்து
எடுத்துக்கொள்ளும்போது மதிய வேளைக்கு தயிர் சேர்த்துக்கொள்ளவும்,
வீட்டில் பயன்படுத்தும் மிளகாய் தூள்
உடன் விளக்கெண்ணெய் சேர்த்து பயன்படுத்துவது நல்லது .
1 கிலோ வீட்டில் அரைத்த மிளகாய்
தூளுக்கு , 1/4 கிலோ பூண்டு , 1/4 கிலோ வெளக்கெண்ணை
பூண்டை இடித்து வைத்து கொண்டு
காய்ச்சிய வெளக்கெண்ணெயில் போட்டு நுரை அடங்காக்கும்வரை வறுத்துவிட்டு எண்ணெய்
ஆறிய பிறகு அதை மிளகாய் தூளில் கலந்து கட்டிகள் இல்லாமல் நன்றக கிளறி எடுத்து
வைத்து கொள்ளுங்கள் இவற்றை அனைத்து குழம்பு , சாம்பார்
என்று பயன் படுத்தலாம் சுவையில் எந்த வித்தியாசமும் இருக்காது. மூல வியாதிக்கு
மருந்து எடுத்துக்கொள்ளும் போது இந்தமுறைஇல் செய்த மிளகாய் தூளை பயன்படுத்தலாம்.
துத்தி மலரை நிதம் துய்க்கின்ற
பேர்களுக்கு
மெத்த விந்துவும் பெருகும்
மெய்குளிரும் - சத்தியமே
வாயால் விழுமிரத்த மாறு மிருமலறுந்
தேயாமதி முகத்தாய் செப்பு' என்று `அகத்தியர் குணபாடம்’ துத்தியின் மேன்மையைப் குறிப்பிடுகிறது
இந்த கீரை தானாக வளரக்கூடியது , இதை உணவில் தினமும் சேர்த்து கொள்வதன்
மூலம் மூலத்தை கட்டுப்படுத்தலாம்,
துத்தி கீரை பொரியல்
துத்தி கீரை 100 GM
சின்ன வெங்காயம் 50GM
நாலென்னை 2 ஸ்பூன்
கடுகு அரை ஸ்பூன்
2 காய்ந்த மிளகாய்
5 பல் பூண்டு
20 கிராம் தேங்காய் துருவல்
உப்பு தேவைக்கு ஏற்ப
நெய் ஒரு ஸ்பூன்
பெருங்கயம் ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை 10 இலை
கால் ஸ்பூன் மிளகு பொடி
துத்தி கீரை சுத்தம் செய்து , நறுக்கி கொள்ளவும் , நாலென்னை விட்டு கடுகு , காய்ந்த மிளகாய் , கறிவேப்பிலை , நறுக்கிய பூண்டு போட்டு வதக்கி
கொள்ளவும் , பிறகு சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கி
கொள்ளவும் , பெருங்காயம் மற்றும் உப்பு
சேர்த்துக்கொள்ளவும் , பின்னர் துத்தி கீரை சேர்த்து நன்றக
பச்சை வாசம் போகும் வரை வதக்கி கொள்ளவும் , நீர்
வற்றி வரும்போது நெய் சேர்க்கவும் , 3
நிமிடம் வதக்கிய பிறகு மிளகு பொடி சேர்த்து 1 நிமிடம் கழித்து தேங்காய் துருவல்
சேர்த்து பிரட்டி கொண்டு இறக்கி ஒரு தட்டு கொண்டு மூடி விடவும் 10 நிமிடம் கழித்து
, சாப்பிடலாம் .
துத்தி கீரை குழம்பு
துத்தி கீரை 200 கிராம்
பாசிப்பருப்பு 100 கிராம்
மிளகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1/4 ஸ்பூன்
தக்காளி 2
காய்ந்த மிளகாய் 3
10 சிறிய வெங்காயம்
நல்லெண்ணெய் 2 ஸ்பூன்
பெருங்காயம் 1/4 ஸ்பூன்
கடுகு உளுந்து 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து
உப்பு தேவைக்கு ஏற்ப
வெண்ணை 2 ஸ்பூன்
கொத்துமல்லி தழை
பாசிப்பயறு, துத்தி கீரை, தக்காளி, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து ,வேகவைத்து
கொள்ளவும், பாசி பயிறு வெடித்து குழையும் நிலைக்கு
வரவேண்டும் , பின்னர் இவற்றை மத்து கொண்டு நன்றாக
கடைந்து கொள்ளவும். ஒரு வாணலில் வெண்ணை சேர்த்து, கடுகு உளுந்து பெருங்காயம், கறிவேப்பிலை, வெட்டி வாய்த்த சிறிய வெங்காயம்
சேர்த்து வதக்கி கொள்ளவும் வெங்காயம் நன்றக வதங்கிய பின்னர், கீரை கடைசலை சேர்த்து ஒரு கொதி
வந்ததும் இறக்கி மல்லி தழை போட்டு இறக்கவும்.
இப்படி பயன் படுத்தலாம், கருணை கிழங்கு லேகியம் நல்ல பலன் தரும்,
பிரண்டை துவயல் வாரம் ஒருமுறை
பயன்படுத்தலாம்.
🟥🟥🟥👇🟥🟥🟥
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்.
வாழ்வில் வளம் பெறுவோம்.✍🏼🌹
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
சித்தா மருத்துவம் : மூல நோய் குணமாக என்ன செய்யலாம்? - குறிப்புகள் [ ] | Siddha medicine : What can be done to cure hemorrhoids? - Tips in Tamil [ ]