வரத முத்திரை செய்தால் என்ன கிடைக்கும்?

செய்முறை, நேர அளவு, பலன்கள்

[ யோக முத்திரைகள் ]

What do you get when you do a Vaadam? - Recipe, time scale, benefits in Tamil

வரத முத்திரை செய்தால் என்ன கிடைக்கும்? | What do you get when you do a Vaadam?

வரத முத்திரை, கருணையையும் விருப்பத்தையும் வழங்கும் ஒரு அடையாளமாக இருக்கிறது. இந்த முத்திரை, பொருத்தருளும் ஒரு நல்ல குணத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. தாராள குணத்துக்கும் இந்த முத்திரையை ஒரு சின்னமாகக் கூறலாம்.

வரத முத்திரை செய்தால் என்ன கிடைக்கும்?

வரத முத்திரை, கருணையையும் விருப்பத்தையும் வழங்கும் ஒரு அடையாளமாக இருக்கிறது. இந்த முத்திரை, பொருத்தருளும் ஒரு நல்ல குணத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. தாராள குணத்துக்கும் இந்த முத்திரையை ஒரு சின்னமாகக் கூறலாம்.

வரத முத்திரை, வரமளிக்கும் முத்திரை. இரக்கம், கருணை ஆகிய நற்பண்புகளை அளிக்கிறது. ஞானத்தை அளிக்கக்கூடியது. இந்த முத்திரையில், ஐந்து விரல்களும் ஐந்துவித குணங்களுக்கு அடையாளமாகத் திகழ்கிறது.

1. தயாள குணம்

2. நல்லொழுக்கம்

3. பொறுமை

4. முயற்சி

5. தியானத்தில் முழு ஈடுபாடு

ஆனால், இவற்றைத் தவிர நாம் விரும்பும் மற்றவற்றையும் அளிக்கவல்லது. நம்மை காக்கும் ஒரு முத்திரையாகவும் உள்ளது.

செய்முறை

இந்த முத்திரையை இடது கையில் செய்ய வேண்டும். இடது கையை இடது தொடை மீது, உள்ளங்கை மேல் நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும். விரல்கள் நீட்டியபடி இருக்க வேண்டும். வலது கை, வலது தொடையின் மீது இருக்க வேண்டும். வலது கை விரல்கள், தரையை நோக்கியபடி நீட்ட வேண்டும்.

இந்த முத்திரையை பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் செய்ய வேண்டும்.

நேர அளவு

தினமும் 15 நிமிடங்களில் இருந்து 20 நிமிடங்கள் வரை செய்யலாம். பின்பு படிப்படியாக நேரத்தை அதிகரித்துக்கொண்டே வந்து 45 நிமிடங்கள் வரை செய்யலாம். முத்திரையைச் செய்யும்போது, சுவாசம் ஒரே சீராக இருக்க வேண்டும்.

பலன்கள்

1. மனத் தெளிவு உண்டாகி, விருப்பங்கள் நிறைவேறும்.

2. மனத்தில் இரக்கம், கருணை உண்டாகும்.

3. பேராசை, கோபம், ஏமாற்றுதல் போன்ற தீய குணங்கள் அகலும்.

4. தயாள குணம், நல்லொழுக்கம், பொறுமை, முயற்சி ஆகியவை ஏற்படும்.

5. தியானத்தில் முழு ஈடுபாடு உண்டாகும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

யோக முத்திரைகள் : வரத முத்திரை செய்தால் என்ன கிடைக்கும்? - செய்முறை, நேர அளவு, பலன்கள் [ ] | Yoga Mudras : What do you get when you do a Vaadam? - Recipe, time scale, benefits in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்