ரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு மூன்று முறை குளிக்க வேண்டும் என்பது நியதி. எப்படி தெரியுமா? சிவபெருமான் மனிதர்களுக்கு ஒரு நாளைக்கு எத்தனை முறை குளிக்க வேண்டும்? எத்தனை முறை சாப்பிட வேண்டும்? என்கிற கோட்பாட்டை சொல்லி வர சொல்லி நந்தி பகவானிடம் தூது அனுப்பினார். ஆனால் நந்தி பகவான் செய்தது என்ன தெரியுமா? அது என்ன? என்பதையும், மாலையில் குளித்து, துணி துவைப்பதனால் ஏதாவது தரித்திரம் ஏற்படுமா? இல்லையா? என்பதையும் சாஸ்திர ரீதியாக விடைகளை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். நந்தி பகவானுக்கு ஞாபக மறதி கொஞ்சம் அதிகம் தான். சிவபெருமான் என்ன கூறினார் என்பதை பூலோகத்திற்கு வரும் முன்பே அவருக்கு பாதி மறந்தாயிற்று! சிவபெருமான் மூன்று முறை ஒரு நாளைக்கு குளிக்க வேண்டும்! என்றும், ஒரு முறை சாப்பிட வேண்டும்! என்றும் கூறி அனுப்பினார். ஆனால் நந்தி பகவானோ ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிட வேண்டும், ஒரு முறை குளிக்க வேண்டும் என்று அப்படியே தலைகீழாக மாற்றி தவறுதலாக கூறி விட்டு வந்து விட்டார். அன்றிலிருந்து இன்று வரை பூலோகத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் இதை தவறாமல் பின்பற்றி வருகிறோம். ஆனால் இதற்காக நந்தி பகவானுக்கு கிடைத்த தண்டனை தான் மிகவும் பரிதாபமானது. நான் சொன்னதை மாற்றிக் கூறி காலச்சக்கரத்தையே மாற்றிவிட்ட நீ! அதே மனிதர்களுக்கு உழைத்து கொட்டி கஷ்டப்படு என்று சாபம் அளித்து விட்டார். அதன் காரணமாக தான் நந்தி பகவான் ரூபத்தில் இருக்கும் காளை மாடுகள் மனிதர்களுக்கு வண்டி இழுந்து கொடுத்து கஷ்டப்பட்டு உதவிகளை செய்து கொண்டிருக்கிறது. இப்படி ஒரு புராணக்கதை இருக்க காலையில் குளிப்பது சரியா? மாலையில் குளிப்பது தவறா? என்று கேள்விகளும் உலவிக் கொண்டிருக்கின்றன.
மாலையில் குளிப்பதை பற்றி சாஸ்திரம் என்ன சொல்கிறது? மாலையில் குளித்து துணி துவைக்கலாமா? இதனால் தரித்திரம் ஏற்படுமா?
ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு மூன்று முறை
குளிக்க வேண்டும் என்பது நியதி. எப்படி தெரியுமா? சிவபெருமான் மனிதர்களுக்கு ஒரு நாளைக்கு எத்தனை முறை குளிக்க வேண்டும்? எத்தனை முறை சாப்பிட வேண்டும்? என்கிற கோட்பாட்டை சொல்லி வர சொல்லி நந்தி பகவானிடம் தூது அனுப்பினார்.
ஆனால் நந்தி பகவான் செய்தது என்ன தெரியுமா? அது என்ன? என்பதையும், மாலையில் குளித்து, துணி துவைப்பதனால் ஏதாவது தரித்திரம் ஏற்படுமா? இல்லையா? என்பதையும் சாஸ்திர ரீதியாக விடைகளை இந்த பதிவின்
மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
நந்தி பகவானுக்கு ஞாபக மறதி கொஞ்சம் அதிகம் தான்.
சிவபெருமான் என்ன கூறினார் என்பதை பூலோகத்திற்கு வரும் முன்பே அவருக்கு பாதி மறந்தாயிற்று!
சிவபெருமான் மூன்று முறை ஒரு நாளைக்கு குளிக்க வேண்டும்! என்றும், ஒரு முறை சாப்பிட வேண்டும்! என்றும் கூறி அனுப்பினார்.
ஆனால் நந்தி பகவானோ ஒரு நாளைக்கு மூன்று முறை
சாப்பிட வேண்டும், ஒரு முறை குளிக்க வேண்டும் என்று அப்படியே தலைகீழாக
மாற்றி தவறுதலாக கூறி விட்டு வந்து விட்டார்.
அன்றிலிருந்து இன்று வரை பூலோகத்தில் வசிக்கும்
மக்கள் அனைவரும் இதை தவறாமல் பின்பற்றி வருகிறோம். ஆனால் இதற்காக நந்தி பகவானுக்கு
கிடைத்த தண்டனை தான் மிகவும் பரிதாபமானது.
நான் சொன்னதை மாற்றிக் கூறி காலச்சக்கரத்தையே
மாற்றிவிட்ட நீ! அதே மனிதர்களுக்கு உழைத்து கொட்டி கஷ்டப்படு என்று சாபம் அளித்து விட்டார்.
அதன் காரணமாக தான் நந்தி பகவான் ரூபத்தில் இருக்கும்
காளை மாடுகள் மனிதர்களுக்கு வண்டி இழுந்து கொடுத்து கஷ்டப்பட்டு உதவிகளை செய்து கொண்டிருக்கிறது.
இப்படி ஒரு புராணக்கதை இருக்க காலையில் குளிப்பது சரியா?
மாலையில் குளிப்பது தவறா? என்று கேள்விகளும் உலவிக் கொண்டிருக்கின்றன.
எப்பொழுதும் சாஸ்திரப்படி காலையில் எழுந்ததும்
முதல் வேலையாக குளித்து விட வேண்டும். அதற்கு பிறகு தான் எந்த வேலையாக இருந்தாலும்
நாம் செய்ய வேண்டும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் சிவபெருமான் கூறியது போல மூன்று
முறை குளித்தால் கூட நமக்கு போதாது என்று தான் நினைக்கிறோம்.
அந்த அளவிற்கு அசதியும், ஆரோக்கியக் குறைபாடும் நம்மை சுற்றி நிலவுகின்றன. சாஸ்திர ரீதியாக அந்தி சாய்ந்த
பிறகு குளிக்க கூடாது அப்படி யார் குளிக்க வேண்டும் தெரியுமா? கெட்ட காரியங்களுக்கு சென்று விட்டு வருபவர்கள் தான் சூரியன் மறைந்த பிறகு குளித்து
அவர்களுடைய துணியையும் துவைத்து விட்டு பின்னர் உள்ளே வருவார்கள்.
எனவே குளிப்பதை விட குளித்து அதனுடன் சேர்த்து
துணி துவைப்பது என்பது தான் தரித்திரம் தரும் செயலாகும். இன்று இருக்கும் வைரஸ் பரவல்
காரணமாக மாலையில் குளிப்பது ஒன்றும் தவறில்லை. அதை விட வேலைக்கு சென்று விட்டு களைப்போடு
வருபவர்கள் மாலை வேளையில் குளிக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை.
ஆனால் உடுத்திய உடையை எப்பொழுதும் சூரியன் மறைந்த
பிறகு துவைப்பதை மட்டும் வழக்கமாக கொண்டு விடாதீர்கள். இதனால் குடும்பத்தில் தரித்திரம்
ஏற்பட்டு தேவையில்லாத பிரச்சினைகளும், தொல்லைகளும், துன்பங்களும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
அதைத் தனியே ஓரிடத்தில் வைத்து விட்டு மறுநாள்
காலையில் துவைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
பொது தகவல்கள்: அறிமுகம் : மாலையில் குளிப்பதை பற்றி சாஸ்திரம் என்ன சொல்கிறது? மாலையில் குளித்து துணி துவைக்கலாமா இதனால் தரித்திரம் ஏற்படுமா - குறிப்புகள் [ ] | General Information: Introduction : What does the Shastra say about taking a bath in the evening Can you take a bath and wash your clothes in the evening, will this cause poverty - Notes in Tamil [ ]