மற்றவரை காப்பி செய்தால் என்ன ஆகும்?

நகைச்சுவை உதாரணம்....

[ நகைச்சுவை ]

What happens if you copy someone else? - Humorous example…. in Tamil

மற்றவரை காப்பி செய்தால் என்ன ஆகும்? | What happens if you copy someone else?

ஒரு பிரபலமான பேச்சாளர் ஒரு முறை ஒரு கூட்டத்தில் பேசும் போது இவ்வாறு கூறினார்: என் வாழ்வில் மிகச் சிறந்த நாட்களாக நான் கருதுவது, "நான் இன்னொருவருடைய "மனைவி"யுடன் கழித்த நாட்களே என்று". இதைக் கேட்ட கூட்டத்தினர் அதிர்ச்சி அடைந்தனர் ,

மற்றவரை காப்பி செய்தால் என்ன ஆகும்?

நகைச்சுவை உதாரணம்....

ஒரு பிரபலமான பேச்சாளர் ஒரு முறை ஒரு கூட்டத்தில் பேசும் போது இவ்வாறு கூறினார்:

என் வாழ்வில் மிகச் சிறந்த நாட்களாக நான் கருதுவது, "நான் இன்னொருவருடைய "மனைவி"யுடன் கழித்த நாட்களே என்று". இதைக் கேட்ட கூட்டத்தினர் அதிர்ச்சி அடைந்தனர் ,

யாரும் எதுவும் பேசவில்லை.

பேச்சாளர் தொடர்ந்தார்.. அந்த இன்னொருவருடைய மனைவி, "என் தாய் தான்" என்றார்.

கூட்டத்தில் பலத்த சிரிப்பும், கரகோஷமும் ஏற்பட்டது.

இதை கேட்ட பார்வையாளர்களில் இருந்த ஒருவர், வீட்டிற்கு சென்று இதனை தானும் தன் மனைவியிடம் கூறி, வியப்பில் ஆழ்த்த நினைத்தார்.

வீட்டிற்கு சென்ற அவர், இரவு உணவு உண்ட பின், தன் மனைவியை நோக்கி," என் வாழ்வில் மிகச் சிறந்த நாட்களாக நான் கருதுவது, "நான் இன்னொருவருடைய மனைவியுடன் கழித்த நாட்களே" என்று கூறிவிட்டு அடுத்த வாக்கியத்தை கூற முற்படுகிறார்.

கண் விழித்து பார்த்த போது அவர் ஆஸ்பத்திரியில் இருக்கிறார், அவர் மனைவி வீசி எறிந்த கொதித்த வெந்நீர் பட்ட கொப்புளங்களுடன்.


நீதி : அடுத்தவன் பண்னுறானேன்னு நாமும் யோசிக்காம ஏதாச்சும் பண்ணிணா இப்படி தான்....


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

நகைச்சுவை : மற்றவரை காப்பி செய்தால் என்ன ஆகும்? - நகைச்சுவை உதாரணம்.... [ ] | Comedy : What happens if you copy someone else? - Humorous example…. in Tamil [ ]