கோடைக்காலத்தில் அதிகநேரம் டயப்பர் பயன்படுத்தினால் என்ன ஆகும்?

குறிப்புகள்

[ ஆரோக்கியம் குறிப்புகள் ]

What happens if you use diapers too much in summer? - Tips in Tamil

கோடைக்காலத்தில் அதிகநேரம் டயப்பர் பயன்படுத்தினால் என்ன ஆகும்? | What happens if you use diapers too much in summer?

குழந்தைகளுக்கு டயப்பரை…❗ குறைவான நேரமே பயன் படுத்தவேண்டும்.…❓❓❓ ☀கோடைக்காலத்தில் அதிகநேரம் டயப்பர் பயன்படுத்தினால்…… அதிகப்படியான வியர்வை, சிறுநீர், மலம் காரணமாக தோல் அரிப்பு, பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படும்.

கோடைக்காலத்தில் அதிகநேரம் டயப்பர் பயன்படுத்தினால் என்ன ஆகும்?

குழந்தைகளுக்கு டயப்பரை…

குறைவான நேரமே பயன் படுத்தவேண்டும்.…❓❓❓

 

கோடைக்காலத்தில் அதிகநேரம் டயப்பர் பயன்படுத்தினால்……

 

அதிகப்படியான வியர்வை, சிறுநீர்,

மலம் காரணமாக தோல் அரிப்பு,

பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படும்.

 

சருமம் சிவந்தோ, தடித்தோ காணப்பட்டால் உடனடியாக மருத்துவரைப் பார்த்து சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

 

தொற்றுகள் ஏற்பட்டுவிட்டால், குளிர்ந்த நீரை துணியில் நனைத்து அப்பகுதிகளில் அடிக்கடி ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஆடைகள் அணிவிக்காமல் காற்றோட்டமாக விடவேண்டும்.

 

குழந்தைகளுக்கு டயப்பரை குறைவான நேரமே பயன்படுத்த வேண்டும். அதுவும் துணி டயப்பர் பயன்படுத்துவதே நல்லது.

 

அதிகபட்சம் மூன்று முதல் நான்கு மணி நேரத்துக்குமேல் பயன் படுத்தக்கூடாது.அதிக நேரம் பயன்படுத்துவதால்………

 

சிறுநீர்,மலம் ஏற்படுத்தும் ஈரப்பதத்தால் குழந்தையின் சருமத்தில் `#டயப்பர்_டெர்மடிடிஸ்’

(Diaper Dermatitis) எனப்படும் #தோல்_அலர்ஜி ஏற்படும்.

 

இதனால் குழந்தைகளின் பின்புறமும், தொடைப்பகுதிகளும் சிவந்து போகும். அரிப்பும் ஏற்படும், எனவே, குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை டயப்பரை மாற்ற வேண்டும்.

 

`டயப்பர் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அப்படிப் பயன்படுத்துவதாக இருந்தால், அரை மணிநேரத்துக்கு ஒருமுறை குழந்தை சிறுநீர், மலம் கழித்திருக்கிறதாஎன்பதைச் சோதித்துப்பார்க்க வேண்டும். சிறுநீர் அல்லது லம் கழித்திருந்தால், உடனடியாக டயப்பரைக் கழற்றி, அந்தப் பகுதிகளைச் சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்பட்டால், வேறு நிறுவன டயப்பர்களை மாற்றிப் பயன்படுத்துவது நல்லது

 

குழந்தைகளுக்கு 2 வயது வரை மட்டும் டயப்பர் பயன்படுத்தலாம். கழிவறைகளைப் பயன்படுத்த

2 வயதிலிருந்தே பழக்கப்படுத்த வேண்டும்.

 

வெளியூருக்குச் செல்லும்போது மட்டும் டயப்பர் பயன்படுத்துவது நல்லது.

 

இரவு முழுவதும் ஒரே டயப்பரை பயன்படுத்தக்கூடாது. 4 மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.

 

ஒருமுறை பயன்படுத்தி கழற்றிய டயப்பரை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.

 

டயப்பரை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.

 

குழந்தைகள் விளையாடும் இடங்களில் பழைய டயப்பர்களை வீசாதீர்கள்.

 

இறுக்கமானதாக இல்லாமல், தளர்வான டயப்பர்களைப் பயன்படுத்த வேண்டும்...


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.

- தமிழர் நலம்

ஆரோக்கியம் குறிப்புகள் : கோடைக்காலத்தில் அதிகநேரம் டயப்பர் பயன்படுத்தினால் என்ன ஆகும்? - குறிப்புகள் [ ] | Health Tips : What happens if you use diapers too much in summer? - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்