பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

What is Brahmahati Dosha - Tips in Tamil

 பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன | What is Brahmahati Dosha

பிரம்மஹத்தி தோஷ பரிகாரங்கள் ஒருவரின் சுய ஜாதகத்தில் குரு மற்றும் சனி கிரகங்கள் சேர்க்கை பெற்றாலும், குருவை சனி எங்கிருந்து பார்த்தாலும், குருவின் சாரத்தில் சனியும், அதே போல சனியின் சாரத்தில் குருவும் இருந்தாலும், குரு மற்றும் சனி கோள்கள் ஒன்றையொன்று பார்த்தாலும் அது பிரம்மஹத்தி தோஷம் உள்ள ஜாதகம் ஆகும். பிரம்மஹத்தி தோஷமானது ஆண் மற்றும் பெண் இருவருக்கும் ஏற்படும்.

 பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?

 

 பிரம்மஹத்தி தோஷ பரிகாரங்கள் 

 

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?

ஒருவரின் சுய ஜாதகத்தில் குரு மற்றும் சனி கிரகங்கள் சேர்க்கை பெற்றாலும், குருவை சனி எங்கிருந்து பார்த்தாலும், குருவின் சாரத்தில் சனியும், அதே போல சனியின் சாரத்தில் குருவும் இருந்தாலும், குரு மற்றும் சனி கோள்கள் ஒன்றையொன்று பார்த்தாலும் அது பிரம்மஹத்தி தோஷம் உள்ள ஜாதகம் ஆகும். பிரம்மஹத்தி தோஷமானது ஆண் மற்றும் பெண் இருவருக்கும் ஏற்படும்.

 

பிரம்மஹத்தி தோஷம் விலக

 

பிரம்மஹத்தி தோஷம் ஏன் ஏற்படுகிறது?

சிருஷ்டி கடவுளான பிரம்மன் படைத்த ஒரு உயிரைக் கொள்வதால் இந்த பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பைக் கொன்றாலும் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும். முற்பிறவியில் ஆலயத்தை சேதப்படுத்தி இருந்தாலும், கடவுள் விக்கிரகத்தை திருடியிருந்தாலும் இந்த பிரம்மஹத்தி தோஷமானது ஏற்படும்.

 

பொன், பொருளுக்கு ஆசைப்பட்டு ஒரு உயிரை கொன்றால் செய்தால் இந்த தோஷமானது ஒருவருக்கு ஏற்படும். வயதான காலத்தில் பெற்றோர்களை கவனிக்காமல் தனியாக விட்டுவிட்டாலும் இந்த தோஷம் ஏற்படும். இந்த பாவமானது நமது தலைமுறைகளையும் பாதிக்கும்.

 

பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்து விடும்?

பிரம்மஹத்தி தோஷம் உடையவர்களுக்கு வாழ்க்கையில் நிம்மதி என்பதே இருக்காது. நேர்மறை எண்ணங்களை விட தேவையில்லாத எதிர்மறை எண்ணங்கள் அவர்களை மனதை வாட்டி துன்புறுத்தும். மேலும் இவர்களுக்கு உரிய வயதில் திருமணம் நடக்காது. அப்படியே நடந்தாலும் திருமண வாழ்வில் நிம்மதி என்பது இருக்காது.

 

மேலும் சரியான கல்வி, நிம்மதியான வேலை மற்றும் குழந்தைபேறு இவற்றில் பல பிரச்சனைகளை வாழ்வில் சந்திப்பார்கள். பொன், பொருள் கையில் தங்காது. கடன் வாங்கித்தான் வாழ்க்கையை தள்ளுவார்கள். இவர்களில் ஒரு சிலர் அதிக அளவில் சம்பாதித்தாலும் கையில் பணம் தங்காது. நல்லறிவு, நல்ல பழக்கங்கள், நல்ல உழைப்பு போன்றவை இருந்தாலும் சமுகத்தில் நல்ல மதிப்பு கிடைப்பது கடினம்.

 

பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்ட கடவுள்கள் :

பிரம்மஹத்தி தோஷமானது மனிதர்களை மட்டுமல்ல பல கடவுள் அவதாரங்களையும், முனிவர்களையும், ரிஷிகளையும் பாடாய்படுத்தியுள்ளது என்பதற்கு பல புராணகதைகள் உண்டு.

பைரவர் – பிரம்மனின் தலையை வெட்டியதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

 

சப்தகன்னிகள் – மகிசாசுரன் எனும் அரக்கனை கொன்றதால் இவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

 

இராமர் – இராவணனைக் கொன்றதால் இராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

 

பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் பரிகாரம்

 

வீரசேனன், வரகுண பாண்டிய மன்னர்கள் – பிராமணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

 

பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் பரிகாரங்கள்

1. கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் கோவிலுக்குச் சென்று, பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி செய்து, ஒரு வாசல் வழியே நுழைந்து மற்றொரு வாசல் வழியே வெளியே வர வேண்டும். அங்கே அதற்குரிய யாகம் நடத்த வேண்டும். இது மிகவும் சிறந்த பரிகாரமாகும்.

 

2. பிரம்மஹத்தி தோஷத்திற்கு குலதெய்வத்தை முதலில் வணங்கி, பின் ராமேஸ்வரம், காசி, கயா, கங்கை உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் நீராடி, இறைவனை வணங்கி வந்தாலும் இந்த தோஷத்தின் கடுமை குறையும்.

 

3. அமாவாசை தினங்களில் மாலை அருகிலுள்ள சிவன் கோவிலுக்குச் சென்று, ஒன்பது சுற்றுகள் சுற்றி வணங்க வேண்டும். இதுபோல ஒன்பது அமாவாசை தினங்களில் சுற்றி வந்து வணங்கி, சிவனுக்கு மூன்று அகல் விளக்கு ஏற்றி, அர்ச்சனையும், அபிஷேகமும் செய்து வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

 

4. மிகவும் தொன்மையான சிவன் கோவில்களில் அனைத்து சன்னதிகளிலும் பஞ்சக்கூட்டு எண்ணெய் கொண்டு விளக்கேற்றி வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பதும் ஐதீகம்.

 

5. ராமேஸ்வரம் கடலில் நீராடி பின் கோவிலில் அமைந்திருக்கும் அனைத்து தீர்த்தங்களிலும் நீராடி, ஜடாமகுடேஸ்வரர் கோவிலில் உள்ள ஜடாமகுட தீர்த்தத்தில் நீராடி ஜடாமகுடேஸ்வரரை வழிபட்டு வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

 

சித்தர் ஜீவசமாதி

6. திருவண்ணாமலை அருகில் வில்வராணி எனும் ஊரில் அமைந்துள்ள சிவசுப்பிரமணிய சுவாமியை வணங்கி வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

 

பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கும் மந்திரம்

 

ஸஷுப்ரஹ்மண்யஸ்ய மஹிமா

 

வர்ணிதும் கேந சக்யத

 

யத்ரோச் திஷ்டமபி பஷ்டம்

 

ச்விதரிணச் சோதயத்ய ஹோ

 

ப்ரஹ்ம ஹத்யா தோஷ சேஷம்

 

ப்ராஹ்மணானாமயம் ஹரன்

 

விரோதேது பரம்கார்யம்

 

இதிந்யாய மானயத்

 

இந்த மந்திரத்தை கூறி முருகனை வழிபட்டு வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்...

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம் 

ஆன்மீக குறிப்புகள் : பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன - குறிப்புகள் [ ] | Spiritual Notes : What is Brahmahati Dosha - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்